Sunday, October 7, 2018

அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை-ஓட்டமாவடி வீதிக்கு காபட் இடும் பணிகள் ஆரம்பம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடா தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம்.றியாழ் அவர்களின்  வேண்டுகோளின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கள் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் 50 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கடந்த வருடம் இறுதியில் ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை-ஓட்டமாவடி(ஹைராத்) வீதிக்கு காபட் இடும் பணிகள் நேற்று(04) ஆரம்பிக்கப்பட்டது.

இவ் வீதியானது பல வருடங்களாக செப்பனிடப்படாது குன்றும், குழியுமாக காணப்பட்டது, இதன் காரணமாக இவ் வீதியை பயன்படுத்துபவர்கள் நீண்ட காலமாக அசௌகரியங்களுக்குள்ளான நிலையிலேயே தற்போது இது காபட் வீதியாக மாற்றப்படுவது தொடர்பில் மக்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் ,அமைப்பாளர் றியாழ் அவர்களுக்கும், உற்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் இந்த வீதியை கொண்டு வருவதில் முன்னின்று உழைத்த கட்சியின் கல்குடா தொகுதி போராளிகளுக்கும்  நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

SHARE THIS

Author:

0 comments: