Rifan Abubacker
கல்வி என்பது முஸ்மிமான ஆண்கள் பெண்கள் அனைவர் மீதும் கடமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை...
இலங்கையின் கல்வி முறையைப் பொருத்த வரை சாதாரண தரப் பரீட்சையே அவர்களின் எதிர்கால கனவை நனவாக்க அடிப்படை காரணியாக இருக்கிறது...
இன்று எமது சமூகத்தில் பெண்களின் கல்வி நிலை மிகவும் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது..
அதே போன்று இன்று ஊருக்கு ஊர் முளைத்திருக்கும் பெண்கள் அரபுக் கல்லூரிகளினால் இந்நிலமை இன்னும் மோசமடையும் அச்சம் உருவாகியுள்ளது...
இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் பெண் வைத்தியர்களின் எண்ணிக்கையை பார்த்தால் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது...
எமது கல்குடாவில் கூட மகப்பேறு பெண் நோயியல் நிபுணர்கள் யாரும் இல்லை என்பது துரதிஷ்டவசமானது...
எனவே திறமையான பெண் பிள்ளைகளை இப்படியான சமூகத்திற்கு அத்தியாவசியமான துறையில் அவர்களுக்கு வழிகாட்டுவது பொருப்பு வாய்ந்த அனைவர் மீதும் கட்டாயக் கடமையாகும்...
அதுமட்டுமல்ல சமூகத்திற்கு செயய்யும் பேருதவியாகவும் அமையும்...
திறமையான பிள்ளைகளை மூளைச்சலவை செய்து மத்ராசாக்களுக்கு சேர்த்து அவர்களின் திறமையினை ' சுருக்க முயல்வது சமூகத்திற்கு செய்யும் துரோகமாகும்.
பெண்கள் அரபு மத்ரசாக்களுக்கு சென்று தான் மார்க்கம் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.மத்ரசாவுக்கு சென்று ஆலிம் ஆனால் தான் சுவர்க்கம் செல்லலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முன்னொரு காலத்தில் மத்ரஸாக்கள் நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டன .இன்றைக்கு அந்த நிலமை இல்லை. இன்று மத்ரசாக்கள் போட்டி, பொறாமை போன்ற காரணங்களுக்காகவே ஆரம்பிக்கப் படுகின்றன. மத்ரசாக்களை ஆரம்பித்து விட்டு மாணவிகளை நிறைய சேர்க்க வேண்டும் என்பதற்காக அதிகமான விளம்பரங்கள் பள்ளிவாயல்களில் ஒலிப்பதை காணக்கூடியதாக இருக்கிறது..
பெண் பிள்ளைகளை மத்ரசாவுக்கு சேர்க்காத பெற்றோர்களை பாவிகளைப் போல் சித்தரிக்கும் காட்சிகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
மத்ரசா ஆரம்பித்து வீட்டீர்கள் என்பதற்காக அனைத்து பிள்ளைகளும் உங்களுடைய மத்ரசாக்களில் தான் கல்வி கற்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை...
சிலர் சொல்லலாம் மத்ரசா கல்வியுடன் சேர்த்து விஞ்ஞானம் கணிதம் போன்ற துறைகளை கற்க முடியும் என்று. .ஆனால் அவை நடைமுறை சாத்தியம் இல்லை. அப்படி முடியுமாக இருந்தால் அதைவிட சிறப்பான கல்வி இல்லை.
பெற்றோர்களே...
தயவுசெய்து உங்களது திறமையான பெண்பிள்ளைகளை அவர்களின் விருப்பத்திற்கு அவர்கள் தெரிவு செய்யும் துறையில் அவர்களை படிக்க விடுங்கள். அது உங்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கு செய்யும் பேருதவியாக அமையும். முயற்சிக்கு அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கூலி கிடைக்கும்.
அதேபோன்று உங்களுடைய பிள்ளையின் தெரிவு மத்ரசா என்றால் அதை மறுக்காதீர்கள்...
உங்களுடைய பிள்ளையின் எதிர்காலத்தை கவனத்திற்கொண்டு சிறந்த மத்ரசாக்களை அடையாளம் கண்டு அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்க உதவுங்கள்.

0 comments: