கத்தார் வாழ் பலாஹிகளின் முயற்சியால் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் பத்து கணனிகள் ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக்கலாசாலைக்கு அனுப்பி வைப்பு...!!!
கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் கத்தார் நாட்டுக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கள் அமைச்சருமான கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களை கத்தாரிலுள்ள காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபுக் கலாசாலையின் பழைய மாணவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பின் போது கத்தார் வாழ் பலாஹிகள் தங்களது கலாசாலையின் கணணி பற்றாக் குறையை எடுத்துக் கூறி அதற்கான தீர்வை பெற்றுத் தர வேண்டி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.
அதற்கமைய அமைச்சர்
ரவூப் ஹக்கீம் அவர்கள் காத்தான்குடி ஜாமிஅத்துல் பலாஹ் அரபு கலாசாலைக்கு பத்து கணனிகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.அதற்கமைய இன்று அதாவது 23-01-17 பத்து கணனிகளும் ஜாமிஅத்துல் பலாஹ் கலாசாலையை வந்தடைந்துள்ளதாக கத்தாரில் வசிக்கும் அக் கலாசாலையின் பழைய மாணவர் அஸ்வர் (பலாஹி) அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.
எதிர் வரும் தினங்களில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் காத்தான்குடி வரவிருப்பதாகவும் அதன் போது ஒரு வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாருக்கின் பங்குபற்றுதலோடு உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
வை.எம்.பைரூஸ்
0 comments: