Sunday, February 19, 2017

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபையின் தலைவராக KBS.ஹமீட் நியமனம்

kbs-hameed-was-appointed-as-chairmen-of-housing-authorityநேற்று மாலை 16.02.2017  கிழக்கு மாகாண முதலமைச்சர் காரியாலயத்த்துதில் வைத்து கெளரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் ZA.நஸீர் அகமட் அவர்களினால் உத்தியோகபூர்வமாக கோறளைப்பற்று மேற்கு முன்னால் தவிசாளர் KBS.ஹமீட் அவர்களுக்கு முதல்வரினால் கிழக்கு மாகாண வீடமைப்பு தவிசாளர் நியனம் வழங்கி வைக்கப்பட்டது. இவர் கடந்த காலங்களில் 
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினராகவும் பிரதி அமைச்சர் அமீர் அலியின் வெற்றிக்கு காரணமாக இருந்தவருமான ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களின் பரந்த சேவைகளினாலும், துடிப்பான சமூகத்துக்கான சிறந்த நடவடிக்கைகளாலும் கவரப்பட்டு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார்.
இவர் இணைந்ததை தொடர்ந்து தற்போது கட்சியின் வளர்ச்சியில் அதிகமான பங்களிப்புக்களை திறண்பட மேற்கொண்டு வருகின்றார் KBS.ஹமீட் அவர்களை கெளரவிக்கும் முகமாக கிழக்கு முதல்வர் நஸீர் அகமட் அவர்களினால் வீடமைப்பு அதிகாரசபையில் தலைவராக நியமித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உள்ள மாகாண சபைகளில் கிழக்கு மாகாணத்திலேயே முதன் முதலாக இவ்வீடமைப்பு அதிகாரசைபை உருவாக்ப்பட்டமை விசேட அம்சமாகும். 
இந்நிகழ்வில் முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அசீஸ், வீடமைப்புத் அதிகாரசபை உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ பாயிஸ் மற்றும் உயர்பீட உறுப்பினர் எம்.எச்.கபூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை 



SHARE THIS

0 comments: