Saturday, January 7, 2017

மலேசியாவில் கவிஞர் சல்மான் வஹாப்பின் இஸ்லாமிய கீத வீடியோ டிவிடி வெளியீட்டு விழா

இலங்கை கவிஞர் 
எம்.ஐ.சல்மான் வஹாப் பாடிய இஸ்லாமிய கீத வீடியோ பாடல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் 14.01.2017 சனிக்கிழமை மாலை 7.30 மணிக்கு இடம் பெறவிருக்கின்றது.
மஸ்ஜித் இந்தியா கோலாலம்பூரில் ABC உணவகத்தின் முதல் மாடியிலுள்ள ஆடிட்டோரியத்தில் இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளா்களாக கிம்மா தேசியத் தலைவர் செனட்டா் டத்தோ௵ சையத் இப்ராஹிம் பின் காதிர்,டத்தோ ஹாஜி ஜவாஹிர் (அலி மாஹு குழுத்தலைவர்),டத்தோ ஹாஜி ஜமரூல் காண்,ஹாஜி காதிர்,டத்தோ ஹாஜி சாகுல் ஹமீட்,ஹாஜி காசிம் பின் அலியார் டீன் ஜுவலர்ஸ் இயக்குனர் ஆகிய மலேசிய அதிதிகள் கலந்து சிறப்பித்து இந்நிகழ்வை அலங்கரிக்கவுள்ளனர். கலை இலக்கிய ஆவர்வமுள்ளவர்கள் அனைவரையும் ஏற்பாட்டுக்கு குழுவினர் அன்புடன் அழைக்கின்றனர். கலைஞர்  ஸல்மான் வஹாப் வஹாப் இலங்கையில் மாத்திரமின்றி மலோசியாவிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பல்வேறு சந்தர்பங்களில் நடாத்தி சிறப்புற செய்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
வாழைச்சேனை


SHARE THIS

0 comments: