Saturday, December 31, 2016

குழந்தை அமானுல்லாவின் சத்திர சிகிச்சைக்காக உதவிடுவோம் முன் வாரீர்...!!!



நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஸாஹீர் ஹூசைன் என்பவர் புடவைக் கடையொன்றில் சிறிய ஊதியத்திற்காக பணி புரிந்து வருபவர் ஆவார்.

அன்றாட வீட்டு செலவீனங்களுக்கே இவருடைய வருமானம் போதுமானதாக இல்லாத நிலையில் அவரின் புதல்வர் நான்கரை 4 1/2  வயதையுடைய  அமானுல்லாஹ் என்பவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற் கொள் வேண்டியுள்ளது.

இதற்காக சுமார் ஏழு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப் படுவதாக வைத்திய நிபுனர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனை உறுதி செய்யும் முகமாக  குறிப்பிட்ட சகோதரரின் பிரதேசத்துக்குற் பட்ட பள்ளி வாயல் நிர்வாகத்தினரால் கொடுக்கப்பட்ட கடிதம் ஒன்றும்  அத்துடன் வைத்திய நிபுனரினால் கொடுக்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் ஒன்றும் ஒன்றினைக்கப்பட்டுள்ளது.

ஆகவே அமானுல்லாஹ் என்ற  பச்சிளம் குழந்தையின் உயிரை காக்க எம்மால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்து நிலையான தர்மத்தில் எம்மையும் பங்காளியாக்கி கொள்வோம்.

குறித்த சகோதரரருக்கு உதவ விரும்புவோர் கீழுள்ள ஹட்டன் நஷ்னல் வங்கி கணக்கிலத்துக்கு அனுப்பி வைக்க முடியும்.
இன்ஷா அல்லாஹ்


தகவல்: யாகூப் முஹம்மது
பைரூஸ் 

SHARE THIS

Author:

0 comments: