Saturday, October 15, 2016

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல் !!! #subair #mpc


கடந்த 26-9-2016 திகதி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலகத்திற்குள் புகுந்து வலயக் கல்விப் பணிப்பாளரான மரியாதைக்குரிய எம்.ஐ. சேகு அலி சேர் அவர்களை மிகவும் கேவலமான , அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசியதை கல்குடா சமூகம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
எமது வலயக் கல்விப் பணிப்பாளரான சேகு அலி சேர் அவர்கள் எமது பிரதேசத்திலுள்ள மூத்த கல்விமான்களில் ஒருவர். எல்லோரதும் மரியாதைக்குப் பாத்திரமான அவர் தான் கற்பித்த மாணவர்கள் தொடக்கம் தனது சக ஆசிரியர்கள் வரை எல்லோருடனும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் நடந்துகொண்ட ஒருவர். தன் வாழ்நாளில் யாருக்கும் எந்தவொரு அநீதியையும் செய்யாததுடன் யாருடைய மனதும் புண்படாது மிகவும் இதமாகப் பேசுகின்ற ஒருவர்.
இவ்வாறு எமது உள்ளங்களில் நிறைந்துள்ள எமது கண்ணியமுள்ள ஆசானை அவரது தராதரத்தையோ வயதையோ பாராது அவரது காரியாலயத்தில் கடமை நேரத்தில் பலர் முன்னிலையில் தூசன வார்த்தைகளால் பேசிய உமது கீழ்த்தரமான செயலை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
ஏறாவூர் கோட்டப் பாடசாலைகள் மட்டக்களப்பு வலயத்துடன் இணைந்திருந்தபோது நீங்கள் பாதிக்கப்படுகின்றீர்கள் என்பதற்காக உங்களது சுயநலனுக்காக எந்தவொரு பாதிப்புமின்றி கல்குடா வலயத்துடனிருந்த ஓட்டமாவடி கோட்டத்தையும் பிரித்து உங்களது தேவைக்காக மட்டக்களப்பு மத்தி வலயத்தை அமைத்ததுடன் உங்களது காலடியில் உங்களது ஊரில் அதன் அலுலகத்தையும் அமைத்துத் தந்து எமது அரசியல்வாதி எமது கல்வித்துறைக்கும் எமக்கும் பகிரங்க துரோகம் செய்தும் நாங்கள் சமூகம் என்ற ஒரே காரணத்துக்காக விட்டுக்கொடுத்து தியாகம் செய்தோம். இதன் பிரதிபலனால் யுத்தம் நிலவிய காலப்பகுதியில் நாங்கள் எமது காலடியில் முடிக்கக்கூடிய ஒரு வேலைக்காக 20 கிலோமீற்றர் தூரம் சென்று நிறைவேற்றவேண்டிய துர்ப்பாக்கியமான நிலைமை ஏற்பட்டபோது நாங்கள் அடைந்த வேதனை உம்மைப்போன்றோரு
க்கு புரியுமா ?
ஏறாவூரில் காரியாலயத்தை அமைத்துக்கொண்டத
ு மாத்திரமன்றி உமது ஊரைச்செர்ந்த அல்ஹாஜ் செயினுதீன் சேரை வலயக் கல்விப்பணிப்பாளராக வைத்துக்கொண்டு முழுப்பயனையும் நீங்களே அடைந்தீர்கள் அதற்கடுத்த தரத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக இருந்த சேகுஅலி சேர் வலயக் கல்விப்பணிப்பாளராக வந்துவிடக்கூடாத
ு என்பதற்காக அவர் ஓய்வுபெறும் வயதை அடைந்தும் அமீரலியைக் கொண்டு பலமுறை நீடித்து 61 வயது வரை அனுபவித்தது மாத்திரமன்றி சேகுஅலி சேரை சூட்சுமமாக அங்கிருந்தும் விரட்டினீர்கள். ஆக நீங்கள் எங்கள் விரலைப் பிடித்தே எமது கண்ணில் குத்தினீர்கள்.
உங்களின் கபட நாடகத்தை அறிந்திருந்தும் ஊர் வேறென்றாலும் சமூகம் ஒன்று என்று பொறுத்திருந்தோம்.
சுபைர் அவர்களே! உங்களைப்போன்ற நயவஞ்சகத்தனமாக நடப்பவர்கள் நாங்கள் என்றால் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனையில் இருக்கம் நிஹாரா டீ.எஸ். க்கு எதிராக நாங்கள் எப்படியெல்லாம் செயல்பட முடியும் ? இதுவரை ஒரு தடைதாண்டல் பரீட்சையிலும் சித்தியடையாத , கட்டயாம் சித்தியடைய வேண்டிய இரண்டாம் மொழி சிங்களம் தெரியாத நிஹாரா டீ.எஸ். SLAS - 111 3ம் தரத்தில் இருக்கும் தரமில்லாத ஒருவர். சுமார் பன்னிரெண்டு (12) வருடங்களாக இந்தப் பிரதேச செயலகத்தில் இருந்துகொண்டு எமது அரசியல்வாதியின் ஆசீர்வாதத்துடன் தனக்காக காணி , பூமிகளை சேர்த்துக்கொண்ட
ு இந்த ஊர் மக்களை ஏமாற்றிப் பிளைக்கின்ற ஒருவருக்கு , உங்களைப்போன்று நாங்களும் செயற்பட்டிருந்தால் , செயற்பட்டால் எவ்வாறு நடந்திருப்போம் ? அவ்வாறு நாங்கள் நினைத்திருந்தால் உங்கள் நிஹாரா டி.எஸ். இன் நிலை என்னவாக இருந்திருக்கும் ? அவ இந்த மக்களுக்கும் மண்ணுக்கும் இழைத்துக்கொண்டிருக்கும் துரோகத்துக்கு உங்களைப்போல நாங்களும் நடந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்
களா ?
எமது மண்ணிலேயே படித்து ,சித்தியடைந்து பிரதேச செயலாளர்களாக கடமையாற்றத் தகுதியான பலர் இருந்தும் அவர்கள் வெளியூர்களில் கடமை புரிகின்ற சந்தர்ப்பத்தில் நாங்களும் உங்களைப்போன்று "எங்கட ஊரான்தான் எங்கட ஊரில் வேலை செய்ய வேண்டும் " என்று நினைக்கவில்லையே ! அப்படியென்றால் நாங்கள் என்ன முட்டாள்களா ?
சுபைர் அவர்களே !
எமது சேகுஅலி சேருக்கு தூசனம் சொல்லி ஏசுகின்ற அளவுக்கான அதிகாரத்தை யார் தந்தது ? உமது ஊர் மக்கள் வாக்களித்து நீ எடுத்துக்கொண்ட மாகாண சபை உறுப்பினர் பதவியா இது ? அமீரலி தனது சுயநலத்தக்காக கல்கடா முஸ்லீம்களை ஏமாற்றி உனக்குப் பெற்றுத்தந்த பதவி. இது நாங்கள் தந்ததே ஒழிய நீ தேடிக்கொண்டதல்ல. அவ்வாறிருந்தும் எமது மரியாதைக்குரிய சேகுஅலி சேருக்கு தூசனம் சொல்லி ஏசினாயே. நீ எவ்வளவு கீழ்த்தரமானவன் என்பதை சற்று நினைத்துப்பார் !
அன்பான கல்கடா சமூகமே ! சிந்தியுங்கள் ...
உங்கள் வீட்டில் இருக்கம் படித்த ஒவ்வொருவரிடமும் கேழுங்கள் அவர்கள் எமது மரியாதைக்குரிய சேகு அலி சேரிடம் படித்தவர்களாக , அல்லது அவர் படிப்பித்தவர்கள
ிடம் படித்தவர்களாகவே இருப்பார்கள்.
அவ்வாறு முழு கல்குடா சமூகத்துக்கும் கற்றுத்தந்த எமது ஆசானை , எமது ம்ணணின் முதலாவது வலயக் கல்விப் பணிப்பாளரை இந்த சுபைர் மிகக் கேவலமாக தூசன வார்த்தைகளால் ஏசியதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா ?
இதில் நாம் எதைக் கற்றுக்கொண்டோம் என்றால் " நம்மை நாமே ஆள வேண்டும் " என்பதுதான். இதையே சுபைர் தனது செயல் மூலம் எமக்கு காட்டியுள்ளார் . புரிந்துகொள்ளுங்கள்.
ஏன் இந்த சுபைர் இவ்வாறு நடந்துகொண்டார் ?
ஒரு ஆசிரியரை ஒரு வலயத்திலிருந்து இன்னொரு வலயத்திற்கு அல்லது ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு இடமாற்றும் அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு இல்லை. இதனை மாகாண கல்விப் பணிப்பாளரே செய்ய முடியும். வாழைச்சேனை ஆயிஷா பாலிகா மகாவித்தியாலய ஆசிரியை அப்பாடசாலையின் அதிபரின் சிபாரிசுடனேயே இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார்.இதனை இந்த சுபைர் நன்கு தெரிந்திருந்தும் ஏன் இவ்வாறு நடந்தார் என்றால் : .....
......எமது வலயக் கல்விப் பணிப்பாளர் சேகுஅலி சேர் 2016-09-16 ம் திகதியுடன் ஓய்வு பெற இருந்தார். அவ்வாறு ஓய்வு பெறும்போது வெற்றிடமாகும் வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிக்கு ஏறாவூரைச் சேர்ந்த சிலரை இவர்கள் தயார் படுத்தியிருந்தன
ர். ஆயினும் சேகுஅலி சேர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க மேலும் 3 மாதங்களுக்கே நீடித்துள்ளார். இவர் இவ்வாறு செயினுதீன் சேர் நீடித்ததுபோல் தொடர்ந்து நீடித்தால் எமது ஊர் (ஏறாவூர்) ஆட்களுக்கு சந்தர்ப்பம் இல்லாமல் போய்விடும் என்பதனால் மேலும் நீடித்து சேகுஅலி சேர் இவ்விடத்தில் இருக்கக்கூடாது என்னும் ஒரே காரணத்துக்காகவே இந்த சுபைர் அவ்வாறு நடந்துகொண்டுள்ளார் என்பதை ஏன் இந்த கல்குடா சமூகம் புரிந்துகொள்ளக்கூடாது ?
மிஸ்டர் சுபைர் அவர்களே ! நீங்கள் செய்த பிழையான முன்னுதாரணமான இந்த செயல் உங்களின் கீழ்த்தரமான புத்தியையும் , ஊர்த்துவேசத்தையும் தெளிவாக வெளிக்காட்டுகின
்றது.
இவ்வாறான குரோத குணமுள்ளவர்களுடன் தொடர்ந்தும் இணைந்திருப்பதா ?...... என்பதை இந்த கல்குடா சமூகம் விரைவில் தீர்மானித்துக்க
ொள்ளல் வேண்டும்.
இது எமது எதிர்காலத்திற்கும் ஒரு சிறந்த பாடமாக அமையட்டும் !!!


SHARE THIS

Author:

0 comments: