மீள் வாசிப்புக்காக....
வை.எல்.மன்சூர்
அரேபியர்களின் வழித்தோற்றங்களான முஸ்லிம்கள் தமிழை தாய் மொழியாகக் கொண்டு தமிழர்களின் கலாசாரங்கள் பழக்கவழக்கங்களை தம்மோடு கொண்டுள்ள போதிலும் கூட,இஸ்லாமிய விழிமியங்களில் அவர்களோடு இருக்கும் பிரிக்க முடியாத ஈடுபாடு,மார்க்கக் கொள்கை சார்ந்த ஒரு சமூகமாக அவர்களை வாழ வைத்துள்ளது,.
லெஜிஸ்லேட்டிவ் கவுண்சிலில் திருவாளர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களே தமிழ் பேசும் தமிழர்களினதும்,
முஸ்லிம்களினதும் ஏகபிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.இன ரீதியாக வேறுபட்ட இலங்கை முஸ்லிம்கள்,வேறு இனத்தைச் சேர்ந்த ஒருவர் தங்களை ஆட்சி மன்றத்தில் பிரதிநிதித்துவப
்படுத்துவதை ஏற்க மறுத்தனர்.முஸ்லிம்களை முஸ்லிம்களே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று கிளர்ச்சி செய்தனர்.அதனால் 1889 ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி ஜனாப் எம்.சி.அப்துர் ரஹ்மான் முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஆட்சிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.
சில நடைமுறைச் சிக்கல்களாலும்,கருத்து வேறுபாடுகளாலும் 1923 ஆம் ஆண்டு பரிபாலன சபை திருத்தி அமைக்கப்பட்டது.
புதிய நிருவாக சபையில் 12 உத்தியோகத்தர்களும் 37 உத்தியோகப்பற்றற்றவர்களும் அங்கத்தவர்களானா
ர்கள்.உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களில் 23 பேர் பிரதேச அடிப்படையிலும்,ஆறுபேர் இன அடிப்படையிலும்,எஞ்சிய 8 பேர் நியமனமாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.
இன அடிப்படையில் தெரிவு செய்யப்படும் 6 பேரில்,3 பேர் முழு இலங்கையிலுள்ள முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்டனர்.இப்படியான புதிய பரிபாலன சபை 1924 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானிய அரசியல் குழுவின் சிபாரிசுப்படி இன அடிப்படையிலான பிரதிநிதித்துவம் நீக்கப்பட்டது.2
1 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தேர்தல் தொகுதிகளும் நிர்ணயிக்கப்பட்
டன.பரிபாலன சபைக்குப் பதிலாக ஸ்ரேட் கவுண்சில் என்றழைக்கப்பட்ட தேசிய ஆளுனர் சபை ஏற்படுத்தப்பட்டது.இதன் பிரகாரம் 1931 ஆம் ஆண்டு மே,ஜூன் மாதங்களில் தேர்தல் நடைபெற்று முதல் தேசிய ஆளுனர் சபை 1931 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் திகதி கூடியது,
"இந்தத் தேர்தலில் முஸ்லிம்களுக்கென்று ஒரே ஒரு உறுப்பினர் மட்டுமே மட்டக்களப்பு தென்பகுதியிலிருந்து தெரிவு செய்யக் கூடியதாகவிருந்தது."
முஸ்லிம்கள் இலங்கையில் எல்லாப் பகுதிகளிலும் சிதறுண்டு வாழ்வதால் தமது இன விகிதாசாரத்திற்கேற்ப முஸ்லிம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பற்றவர்களாக இருந்தனர்.
இப்படியான திருப்திகரமற்ற பிரதிநிதித்துவம் பற்றி மர்ஹூம் அல்ஹாஜ் ரீ.பி.ஜாயா அவர்கள் தலைமையிலான ஒரு துாதுக்குழு 1932 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்று அன்றைய ஆட்சியாளரிடம் முஸ்லிம்களுக்கு நியாயமான அளவு பிரதிநிதித்துவம் ஏற்பட வழிவகுக்குமாறு வாதாடியது.
இந்தக் கோரிக்கைகளின்பட
ி பிரித்தானிய ஆட்சியாளர் முஸ்லிம்களுக்கு நியாயமான பிரதிநிதித்துவம் பெறக் கூடிய வகையில் தேர்தல் தொகுதி எண்ணிக்கையில் எதுவித மாற்றமோ அல்லது அதிகரிப்போ செய்யாமல் 1924 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நியமன அங்கத்தவர் முறைப்படி முதல் தேசிய சபைக்கு ஒருவரும் இரண்டாவது தேசிய சபைக்கு இருவருமாக முஸ்லிம்களுக்கான பிரதிநிதிகள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர்.
இலங்கையில் ஏனைய சமூகத்தவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகள் மூலம் அந்தந்த இனத்தவருக்கான பிரதிநிதிகளை ஆட்சிமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்புப் பெற்றிருந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தவர்களுக்
கான பிரதிநிதிகள் முஸ்லிம்களின் வாக்கு மூலத்தாலன்றி ஆட்சியாளரால் நியமிக்கப்படுவத
ு முஸ்லிம்களுக்கு பெரும் இழிவாரச் செயலாக இருந்தது,
மேலும் ஆட்சியாளரால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பெரும்பாலும் சிங்கள அங்கத்தவர்களைக் கொண்ட மந்திரி சபையின் சிபாரிசின் பெயரிலேயே செய்யப்பட்டது.ஆ
கவே முஸ்லிம்களுக்கான பிரதிநிதிகள் பெரும்பான்மை இனத்தவரான சிங்களவர்களாலேய
ே மறைமுகமாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்படி முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தப்பட்ட வெட்கக் கேடான பிரதிநிதித்துவ முறையால் முஸ்லிம்களுக்கிருந்த அரசியல் சுய நிர்ணய உரிமை அர்த்தமற்றதாக மாறி பிற இனத்தவர்கள் பார்த்து நியமிப்பவர்களை முஸ்லிம் பிரதிநிதிகளாக முஸ்லிம்கள் ஏற்று நடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது,
பெரும்பான்மை சிங்களவரின் சிபாரிசில் நியமிக்கப்படும் அங்கத்தவர்கள் முஸ்லிம்களின் நலன்களைப் பேணுவதற்குப் பதிலாக அவர்களின் நியமனங்களுக்கு சிபாரிசு செய்யும் சிங்களவரின் நலனில் அக்கரையுள்ளவர்களாகவும்,
முஸ்லிம்களைவிட சிங்களவருக்கே கூடுதலான விசுவாசம் உள்ளவர்களாகவும் இருந்தனர்.இதனால்தான் பெரும்பான்மைச் சிங்களவர்களுக்க
ு வால்பிடிக்கும் தலைவர்களும் முஸ்லிம்களிடையே ஏராளமாகத் தோன்றினர்.
முஸ்லிம்களின் இன உரிமை இலங்கையில் பாதுகாக்கப்பட வேண்டுமானால் முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு அரசியல் அதிகாரங்கள் கைமாற வேண்டிய அவசியத்தை நன்குணர்ந்த முஸ்லிம் அரசியல் இயக்கங்கள் எல்லாம் ஒன்றிணைந்து 1945 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி சோல்பரிக் கமிசன் முன்னிலையில் சமர்ப்பித்த மகஜரில் முஸ்லிம் இன உரிமைகளை பேணிப்பாதுகாக்க இன ரீதியிலான பிரதிநிதித்துவம் மீண்டும் அமுலாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
நிலைமையை இலங்கையில் அனுபவ ரீதியாக கண்டறிந்த சோல்பரிக் கமிசனர்.சிறுபான
்மை இனத்தின் பாதுகாப்பு,தனித
்துவம்,பிறப்புரிமைகள் யாவும் தகுந்த முறையில் பேணிப்பாதுகாக்க
ப்படுவதற்கான வகையில் அரசியல் சாசனத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தினர்.
சிறுபான்மை இனத்தவர் விசேடமாக முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் பல அங்கத்தவர்கள் முஸ்லிம்களால் தெரிவு செய்யக் கூடிய தேர்தல் தொகுதிகளும்,
"குறைந்த சனத்தொகையும்.சு
ருங்கிய நிலப்பரப்பும் கொண்ட விசேட தேர்தல் தொகுதிகளும்"
ஏற்படுத்தப்பட்டதினால் சிதறுண்டு வாழும் முஸ்லிம் இனத்தவருக்கு நியாயமான முறையில் ஆட்சி மன்றத்தில் பிரதிநிதித்துவம் ஏற்படக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது.
சோல்பரி அரசியல் சாசனத்தில் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்கு கொடுக்கப்பட்டிருந்த உத்தரவாதத்தின் பேரில்தான் தமிழர்களும்,முஸ்லிம்களும் பெரும்பான்மை சிங்களவரோடு ஒன்றிணைந்து 75 சதவிகிதத்திற்கும் கூடுதலான ஆதரவு கொடுத்ததனால்தான் அன்று இலங்கைக்கு இலகுவாக சுதந்திரம் கிடைத்தது,
சிறுபான்மை இனத்தவர்களான தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒன்றிணைந்து சிங்களப் பெரும்பான்மை இனத்தவரோடு சுதந்திரத்திற்கு ஒத்தழைக்க மறுத்திருந்தால் கடந்த ஐம்பது வருட இலங்கையின் அரசியல் சரித்திரம் முற்றிலும் மாறுபட்டதாகவே அமைந்திருக்கும்.
0 comments: