(வை.எம்.பைரூஸ்
வாழைச்சேனை)
நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாமல் விபச்சாரம், வட்டி, கொலை, கொள்ளை, மது, சூது போன்ற பெரும் பாவங்களில் மூழ்கிக்கிடந்த சமூகத்தை நாகரீகத்தின் பால் அழைத்த மார்க்கம் இஸ்லாம். இஸ்லாத்தின் மீதிருந்த காழ்ப்புணர்வை திணிப்பதற்காக யூதர்களும், அந்நியர்களும் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிப்பதற்காக செய்தி சதித்திட்டங்கள் தான் உலகத்தில் இன்று மறைமுகமாக முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழ்ச்சிகளுக்கு பின்னணிக் காரணியாகும்.
இஸ்லாம் என்பது கட்டுக்கோப்பான வரையறை மிகுந்த மார்க்கமாகும். அதனை விரும்பியவர்கள் ஏற்கலாம். விரும்பாதவர்கள் விட்டு விடலாம். இஸ்லாமிய மார்க்கத்தையே உலக மக்கள் அனைவரும் பின்பற்றியாக வேண்டுமென்று இறைவன் அவனுடைய திருமறை அல்குர்ஆனிலோ, அவனிடமிருந்து உலக மக்கள் அனைவருக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட எங்கள் உயிரிலும் மேலான நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் மூலமோ வலியுறுத்திக் கூறவில்லை.
ஆனால், இஸ்லாத்தின் தாத்பரியத்தையும், மகத்துவத்தயைும் கூறிய இறைவன், அவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மாத்திரமே என்றும், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கப்ரிலும், மறுமையிலும் மிகுந்த கைசேதப்பட்டு விடுவார்கள் என்றும், அவர்களுக்கான நிரந்தர தங்குமிடம் நரகம் என்றும் இறைவன் தெட்டத்தெளிவாக அவனுடைய திருமறைக் குர்ஆனிலும், அவனுடைய தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலமும் சொல்லித் தந்திருக்கின்றான்.
இஸ்லாமிய மார்க்கத்தை ஒப்புக்கொள்வதால் மாத்திரம் நாம் முஸ்லிமாக இருந்து விட முடியாது. இஸ்லாம் கடமையாக்கிய கடமைகளைப்பேணி நடக்க வேண்டும். அது மட்டுமன்றி, இஸ்லாம் தடுத்துள்ள இன்னோரன்ன செயற்பாடுகளையும் தவிர்த்து நடந்து கொள்ள வேண்டும். அப்போது தான், அவன் உண்மை முஸ்லிமாக அல்லாஹ்வின் பார்வையில் நாம் ஆக முடியும்.
அதனடிப்படையில் தான், வட்டியும் இறைவனால் தடுக்கப்பட்ட மிகப்பெரும் பாவமான செயலாகும். ஆனால், இன்று வட்டியென்பது சர்வ சாதரணமாக எம்மையறியாமலே எம் வாழ்வில் பிண்ணிப் பிணைந்து வருகின்றதென்றால் நானோ நீங்களோ ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
விபச்சாரம் செய்பவனையும், கொள்ளை அடிப்பவனையும், கொலை செய்பவனையும், மது குடிப்பவனையும், சூதில் மூழ்கிக்கிடப்பவனையும் பாவம் செய்பவன் என்று சமூகத்திலிருந்து ஓரங்கட்டி வைத்திருக்கும் எம் சமூகம் தான் வட்டி கொடுப்பவனையும், வட்டி வாங்குபவனையும், வட்டிக்கு சாட்சி சொல்பவனையும் பாவம் என்று கருதி பொருட்படுத்துவதில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம்களாகிய நாம் இஸ்லாத்தையும் அதன் மகத்துவத்தயைும், அறிந்தளவு வட்டி என்ற பாவத்தின் பாரதூரத்தையும் அதற்கான தண்டனையையும் அறியாததாகும்.
வெளிப்படையாக வட்டிகள் கடன் என்ற போர்வையில் ஒருவரின் வாங்கிய கடனுக்கு மேலாகக் கொடுப்பதிலும், வங்கியில் அடகு வைத்தல், வாகனம் லீசிங் என்ற பெயரிலும் எம் சமூகத்தில் நுழைந்து விட்டது.
ஆனால், மறைமுகமான ஒரு வட்டி நாள்தோறும் மொபைல் பாவனை செய்யும் சிலரின் வாழ்வில் வட்டியென்று அறியாமலே பின் தொடர்ந்து வருகின்றது. அது தான் எமது குறிப்பிட்ட மொபைல் பாவனையில் எமது மிகுதிக்கணக்கு குறைவாக இருக்கும் தருணத்தில், எமக்கு முகவரினால் அனுப்பப்படும் கடன் கணக்கானது, நாம் சுமாராக ஐந்து, முப்பது, ஐம்பது ரூபா எதுவாக அவசரத்துக்கு எடுத்தாலும், அதற்குப்பகரமாக நாம் எமது கணக்கை மீள் நிரப்பும் போது அதை விட, ஒரு ரூபாவையோ அல்லது ஐந்து ரூபாவாகவோ வட்டியாக எடுத்து விடுகிறார்கள்.
இதில் மூழ்கியிருப்பவர்கள் அநேகமாக இளைஞர் சமூதாயமாகவே இருக்கக்கூடும். உண்மையில், இது நேரடியாக நடைபெறும் வட்டியென்ற பாரதூரமான செயலாகும். ஆனால், அதனை எம் இளைஞர்கள் வட்டியென்றோ, பாவமென்றோ பொருட்படுத்துவதில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும்.
இளைஞர் சமுதயமே நீங்கள் வேண்டுமென்றால் இதனை அற்பமாகக்கருதலாம். ஆனால், எம்மைப்படைத்த இறைவனின் கண்ணோட்டத்தில் இது மிகப்பெரும் வட்டியென்ற வன்கொடுமையாகும்.
கடனையும், வியாபாரத்தையும் ஆகுமாக்கிய இறைவன் அதனை வரையரை வகுத்து தெளிவுபடுத்தியுள்ளான். மாறாக, இவ்வாறு கொடுத்த தொகைக்குக் கூடுதலாக வாங்குவதையோ, வாங்கிய குறிப்பிட்ட பொருளுக்கு அதன் பெறுமதிக்கு மேல் கொடுப்பதையோ வியாபரம் என்றோ, கடன் என்றோ எங்கும் எமக்கு இறைவன் கூறவில்லை.
இறைவன் மனிதர்களைப் பார்த்து கூறுகிறான் வட்டியில் நீங்கள் தொடர்பு வைத்து விட்டீர்களா….? அப்படியானால், நீங்கள் என்னுடன் போர் செய்வதற்குத் தயாராகி விட்டீர்கள் என்று கூறுகிறான்.
அற்ப சொற்ப இந்துரியத்துளியால் எம்மைப் படைத்த இறைவனோடு எமக்கு போர் புரிவதற்கு சக்தி இருக்கின்றதா….? அப்படியனால், தாராளமாக மொபைல் என்ற போர்வையில் வரும் வட்டியில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.
அது மட்டுமன்றி, வட்டி என்ற பாவத்திற்கான தண்டனை கப்ரிலும், மறுமையிலும் கடும் பயங்கரமாக இருக்குமென்பதையும், இறைவன் எமக்குச் சொல்லித் தந்திருக்கின்றான்.
யூத நசாராக்களின் சதியே இந்த கடன் என்ற போர்வையில் வந்திருக்கும் Mobile Loan என்பதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
இந்த வட்டி என்ற பெரும் பாவம் எம் வாழ்வில் எந்த வகையிலும் சேர்ந்து விடக் கூடாது. அதிலிருந்து நாம் முற்று முழுதாக தவிர்ந்து கொள்வதாதோடு, எம் குடும்பத்தினர்கள், நண்பர்கள், அயலவர்கள் என அந்நியோருக்கும் இந்த Mobile Loan என்ற போர்வையில் வரும் சதித்திட்டத்தை தெளிவுபடுத்தி, அதிலிருந்தும் வட்டி எனும் பெரும் பாவத்திலிருந்து பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வோம். இன்ஷா அல்லாஹ்.
0 comments: