Thursday, August 4, 2016

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் "வீட்டுக்கு வீடு மரம்" செயற்திட்டமும் கையாலாகாத விமர்சகர்களும்.

MN.YAZEER ARAFATH

கடந்த திங்கள் கிழமை அதாவது 01-08-16  அன்று
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வீட்டுக்கு வீடு மரம் நடுதல்  செயற்திட்டமானது அக் கட்சியின்  தேசிய தலைவரும்  அமைச்சருமான ரவூப் ஹக்கிமின்  தலைமையில் கந்தளாய் பிரதேசத்தில்  முதல் முதலாக உத்தியோக   பூர்வமாக  ஆரம்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களாலும் கட்சியின் தீவிர போராளிகளினாலும்  நாடளாவிய ரீதியில் பல் வேறு பிரதேசங்களிலும்  இந் நிகழ்வு முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டதையும் நாம் அறிந்ததே,

நேற்றைய முன் தினம்  முகநூல்களில் பேசு பொருளாக உருவெடுத்த  இந் நிகழ்வு  தொடர்பான தகவல்களை அநேகர் முக நூல்களில் பதிவேற்றம் செய்திருந்தார்கள்.
உண்மையில் மரம் நடுவது என்பது இன்றைய  சூழ்நிலையில் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட எம்  எதிர் கால சந்ததியினருக்கும் பிரயோஜனமான ஒன்றாகும்.  அது மாத்திரமின்றி உலகலாவிய ரீதியில் கூட அதனை ஊக்கிவிப்பதற்கு பல அமைப்புகள் இன்று வரை  செயற்பட்டும் கொண்டிருக்கிறது.

ஏன் என்றால் தற்போதய சூழ் நிலையில் உலகமயமாக்கள் அபிவிருத்தி என்ற போர்வையில்  பல  இயற்கை  வளங்கள் அழிக்கப்பட்டு கட்டமைம்புகள் குழப்பப்பட்டும் வருகின்றது  இதனால் பச்சை வீட்டு வாயு விளைவின் காரணமாக பல்வேறு அழிவுகளை  உலகம்  சந்தித்து கொண்டிருக்கிறது.

இதனால் சமூக ஆர்வளர்கள்  இதனை கட்டுப்படுத்துவதற்கு  மரங்களை நடுவதை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

இது இவ்வாறு இருக்க  முஸ்லிம் காங்கிரஸ் மரம் நடும் திட்டத்தை முன்னெடுத்த போது அந்த கட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் பலர் பல விதமாக விமர்சித்ததையும் முக நூல்களில் காணகிடைத்தது.

இவ்வாரானவர்கள் முஸ்லிம் காங்கிரஸ் எதை செய்தாலும் விமர்சிப்போம்  என்ற போர்யைில் விமர்சனத்தையே முழு மூச்சாக செய்து வருகின்ற  விஷ ஜந்துக்களே,  அவர்களுக்கு  அது தொடர்பாக எந்த வீத அறிவும் இன்றி ஆய்வு செய்யாமல் இந்த கட்சி எது செய்தாலும் விமர்சனம் செய்வோம்  என்ற  கொள்கையில் உறுதியாக இருப்பவர்களே அவர்கள் ஆகும்.

அது மாத்திரமின்றி இன்னும் சிலர் எம் சமூகத்தில் உலா வந்து கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம் காங்கிரஸினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்  தொடர்பாக வெளியிடப் படும் ஊடக செய்திகளை பார்ப்பதும் இல்லை அதனை தெளிவான முறையில் கேட்டறிவதும் இல்லை வெறுமனே வாய்க்கும் மூலைக்கும் சம்பந்தமில்லாத கேள்விகளை கேற்பதே இவர்களின் கை வந்த கலையாக உள்ளது.
அவர்களை முதலில் எம் சமூகம் இனங் கண்டு கொள்ள வேண்டும்.

அவ்வாறன சிலர்
முஸ்லிம் கங்கிரஸ் மரம் நடுவதால் மட்டும் மக்களின் தேவை முடிந்திடுமா? என்ற கேள்விக் கனைகளை ஊடகங்கள் மூலமாகவும் முகநூல் வாயிலாகவும்    எழுப்பியதை காணக் கூடியாதக இருந்தது.

உண்மையில் முஸ்லிம் காங்கிரஸானது  இந்த வீட்டுக்கு வீடு மரம் நடுதல் திட்டதின் ஊடாக எதனை முன்னேடுக்கப் போகிறது என்பதனை  அதன் தலைவர் விளக்கமாக சொல்லி இருந்தும் அது தொடர்பான செய்திகள்   ரவூப் ஹக்கிம் அவர்களின் உத்தியோக பூர்வ முக நூலிலும் பதிவிடபட்டிருந்தும் அதனை  பார்வையிடமால் வெறுமனே கேள்விக் கனைகளை எழுப்புவது இவர்களின் கையாலாகாத தனத்தையே காட்டுகின்றது.

இருந்தும் கூட  இங்கு இத் திட்டதின் நோக்கம் சில வற்றை கீழ்  குறிப்பிடுகிறேன்.

01-மரம் நடப்படும் குறித்த வீட்டின் குடும்பத்தினருடன் கட்சி நெருக்கமான உறவைப் பேணுதல்.

02-இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்களை கட்சியின் நடவடிக்கைக்கு தொடர்ச்சியாக இயங்கச் செய்தல்.

03-இளைஞர் அணி செயலமர்வுகளுக்கு மரம் நடப்பட்ட குடும்பத்திலுள்ள இளைஞர்களை உள் வாங்குதல்.

04-கட்சியின் தொழில் வாய்ப்புகள் மற்றும் அக் குடும்பத்தினருக்கான உதவி வழங்குதல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுதல்,குடிசை கைத்தொழில்களுக்கு வழிசமைத்தல்.

போன்றவற்றின் மூலம் பிரதேச பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன் கட்சியை ஆழ விதைத்தல் போன்ற  உள் நோக்கத்துடன் இச் செயல்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

இறைவன் இத் திட்டம் வெற்றிபெற உதவி செய்யவேண்டும்.
மரத்தை நட்டித்தானா இந்த செயற்பாட்டை முன்னேடுக்க வேண்டும்? என்று சிலர் கேட்கிறார்கள். இவர்கள் விதன்டாவாதம் புரியவே முயற்சிக்கிறார்களே தவிர மக்களின் மீதோ, நாட்டின் மீதோ கொண்ட அக்கறையினால் அல்ல என்பதை சில புத்தி ஜீவிகள், நடு நிலையானவர்கள் புரிந்தே வைத்து இருக்கிறார்கள்.

மரம் நடுவதென்பது  நல்ல விடயம்தானே அதுவும் கட்சியின் சின்னம் அந்த கட்சி தன்னுடைய சின்னத்தோடு அதாவது இயற்கையின் நலனோடு சமூக நலனை முன்னெடுக்கிறார்கள். உண்மை தான் மற்றைய கட்சி காரர்களால் இவ்வாறு பன்னுவது கடினம்தான் அவர்களால் கட்சி சின்னத்தை வீட்டுக்கு வீடு கொண்டு செல்வது கடினம்தான் அதனால்தானோ அவர்களின் ஆதரவாளர்கள் இப்படியும் விமர்சிக்க முற்பட்டிருக்கிறார்கள்  என்னவோ தெறிய வில்லை.......?

ஸ்ரீ லங்க முஸ்லிம் காங்கிரஸிக்கு இந்த மரச் சின்னம் அமைந்தது இறைவன் செய்த அருளோ, என்னவோ இருந்தும்  இதற்கு பல வரலாறுகள் உண்டு என்பதை யாரும் மறுதலிக்க முடியாது.
எது எதுவாக இருந்தாலும் இறைவன் அருளால் இந்த கட்சி பல சவால்களுக்கு மத்தியிலும் காத்திரமாக தனது பணியை முன்னேடுத்தே செல்கிறது. இப் பணி தொடர பொது மக்களாகிய நாமும் பூரண ஒத்துளைப்புக்களை வழங்குவதோடு இக் கட்சியின் பணி எம் சமூகத்துக்கு பயனுள்ளதாக அமையவும் வல்லா நாயன் அல்லாஹ்வையும் என்றென்றும் பிரார்த்திப்போம். இன்ஷா அல்லாஹ்.
   


SHARE THIS

Author:

0 comments: