அஹமட் இர்சாத் மொஹமட் புஹாரி
கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்-ஹாஜ் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் மாகாண நிதி ஒதுக்கீட்டின் மூலம், கல்குடா பிரதேசத்தில் உள்ள வாழைச்சேனை, ஓட்டமாவடி, மீராவோடை, செம்மண்ணோடை, ரிதிதென்ன, ஜெயந்தியாய,காவத்தமுனை, மவடிச்சேனை, பிறைதுறைசேனை, பாலக்காடு போன்ற பிரதேசங்களில் இருக்கின்ற பாடசாலைகளும், வீதிகளும் என்றும் இல்லாதவாறு பல வகையிலாலான அபிவிருத்தி பணிகளுக்கு முகம் கொடுக்கவுள்ளது.
மேலும் கிழக்கு முதலமைச்சரின் நிதி ஒதுக்கீடுகளில் கல்குடா பிரதேசங்களுக்கே அதிகளவிலான நிதி செலவிடப்பட இருக்கின்றது என்பதை முதலமைச்சரின் பிராந்திய காரியாலையம் உறுதிப்படுத்தி உள்ளமை முக்கிய விடயமாகும்.
பாடசாலைகளுக்கான மாடி கட்டங்கள், ஆசிரியர் விடுதிகள், மலசல கூடங்கள், கனணிகள், என பல்வேறு வசதிகளை ஏற்படுத்துவதற்கு முதலமைச்சரின் நிதி செலவிடப்பட உள்ளதுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் சுமர் 15 கிலோ மீற்றர் அளவிலன வீதிகள் காபட் வீதிகளாக மாற்றுவதற்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக வாழைச்சேனை வீதி ஓட்டமாவடி வரைக்கு காபட் வீதியாக மாற்றப்படவுள்ளது. மேலும் இவ் அபிவிருத்தி பணிகள் அனைத்தும் எதிர்வரும் 25.26,28ம் திகதிகளில் ஆரம்பிக்கப்படுவதற்கான உத்தியோக பூர்வ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
0 comments: