Wednesday, September 2, 2015

இம்முறையும் கல்குடாவுக்கு SLMCஇன் தேசியப்பட்டியல் கிடைக்காவிட்டால் ......


(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின்
போராளிகளில் அதிகமானோரது
வேண்டுகோளுக்கிணங்க
இந்தப்பதிவு )
இலங்கைச் சிறுபான்மை
முஸ்லிம்களது விடிவுக்காக
உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் என்ற மரம் அன்று
விதையாக கிழக்கு மண்ணில்
நடப்பட்டபோது அந்த ஆல மரத்திற்கு
நீரூற்றி வளர்த்துப் பாதுகாத்த
பிரதேசங்கில் மிகவும் முக்கிய இடம்
வகித்தது இந்தக் "கல்குடா" என்னும்
பிரதேசம் என்றால் அதை யாரும்
மறுப்பதற்கில்லை. இதனை கட்சியின்
மூத்த உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசை
உருவாக்கியவர்களும் நன்கு அறிவர்.
எவ்வாறு மாமனிதர் அஷ்ஷஹீத்
அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத்
தலைவராக இருந்தாரோ அதேபோல்,
அதே காலகட்டத்தில் கட்சியின்
பொருளாளராக பொறுப்பெடுத்து
கட்சியை வளர்த்த பெருமை
மர்ஹூம். முகைதீன் அப்துல்
காதரையே சாரும். அவர் எமது
கல்குடா மண்ணின் மைந்தன் என்பது
கல்குடா மக்களுக்கு கிடைத்த
பாக்கியமாகும். இது அன்று எமது
தலைவர் MHM.அஷ்ரப் அவர்கள்
பெற்றுத்தந்த கௌரவமாகும். இது
ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க
கௌரவமுமாகும்.
எந்தவொரு அமைப்பினதும் அல்லது
கட்சியினதும் தொடரான
இயக்கத்திற்கும் நிதியும் அந்த
நிதியை நிர்வகிக்கும் பொருளாளரும்
மிகவும் முக்கியமான இரு
முனைகளாகும்.
ஒரு நாட்டினை ஆளுகின்ற
அரசாங்கம் அந்நாட்டின்
பொருளாதாரத்தையும்
திறைசேரியையும் (நிதி) சரியாக
நிர்வகிக்காது விட்டால் அந்த
அரசாங்கம் எவ்வாறு ஆட்டங்கண்டு
மக்களால் தோற்கடிக்கப்படுமோ
அதேபோல்தான் ஒரு கட்சியின்
பொருளாளரது செயற்பாடுகளும்
அந்தக் கட்சியை வளர்ச்சிக்கு அல்லது
வீழ்ச்சிக்கு இட்டுச்
செல்லக்கூடியதாக இருக்கும். அந்த
வகையில் எமது கல்குடா மண்ணின்
முதல் மைந்தனாகிய மர்ஹூம்
முகைதீன் அப்துல் காதர் அவர்கள்
இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
என்ற கட்சியின் வளர்ச்சிக்கு ஆற்றிய
பங்களிப்பை யாரும் குறைத்து
மதிப்பிட்டுவிட முடியாது.
அதன் பின்னர், அதாவது அவரது
மரணத்தைத் தொடர்ந்து கல்குடாவில்
ஏற்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசின் பாரிய வெற்றிடத்தை
இதுவரை எவராலும் நிரந்தரமாய்
நிரப்பமுடியாதது ஒரு துரதிஷ்டமே.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசை விட்டு பிரிந்து
ஆளுங்கட்சியில் இணைந்துகொண்ட
வேட்பாளருக்கும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ்
வேட்பாளருக்கும் இடையே ஏற்பட்ட
பிரிவினை போட்டியின் விளைவாக
கல்குடாவின் பிரதிநிதித்துவம்
இழக்கப்பட்டது.
இச்சந்தர்ப்பத்தில் கல்குடாவில்
முஸ்லிம் காங்கிரசின் எதிரியாகவும்
அதன் தலைவர் ரவூப் ஹக்கீமின்
பரம வைரியாகவும் பார்க்கப்பட்ட
ஒருவரைத் தோற்கடித்த கல்குடா
மக்களுக்கு (போராளிகளுக்கு)
நன்றிக்கடனாக தலைவர் ரவூப்
ஹக்கீமால் தேசியப்பட்டியல்
பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு
சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதிலும் கட்சியின் தவிசாளர்
பஸீர் சேகுதாவூத் அவர்களின்
திறைமறைவு எதிர்ப்பினால் அது
தடுத்து நிறுத்தப்பட்டது. அந்த முறை
மாத்திரம்தான் பஸீர் சேகுதாவூத்
அவரது அரசியல் வரலாற்றிலேயே
மக்களின் வாக்குகளால் நேரடியாகத்
தெரிவு செய்யப்படார். இவரது இந்த
வெற்றிக்கு கல்குடாத்தொகுதி
வாக்காளர்களது பங்களிப்பு
இன்றியமையாததாகக் காணப்பட்டது.
என்றாலும் தவிசாள் பஸீர்
சேகுதாவுதோ கல்குடா மக்களை
(போராளிகளை) மாற்றாந்தாய்
மனப்பான்மையுடனேயே
கவனித்தார். தனக்கு 6000 க்கும்
மேற்பட்ட வாக்குகளை கல்குடா
மக்கள் பெற்றுத்தந்தும்
கல்கடாவுக்கு தேசியப்பட்டியல்
பிரதிநிதித்துவம் கிடைக்கக்கூடாது
என்று அவர் என்னியதற்கு பிரதான
காரணம் , தனது வாக்குவங்கி
இல்லாமல் போய்விடும்
என்பதனாலேயாகும்.
அதாவது , ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசைத் தவிர கல்குடாவில்
வேறு கட்சியிலிருந்து பிரதிநிதி
தெரிவாகினால் பரவாயில்லை ,
ஆனால், முஸ்லிம் காங்கிரசிலிருந்து
தெரிவாகினால் தெரிவாகும் பிரதிநிதி
கல்குடா மக்களை (போராளிகளை)
ஒன்றுபடுத்திவிட்டால் விருப்பு
வாக்குகள் அனைத்தும் அவருக்கே
கிடைத்துவிடும் என்பதும்,தனக்கு
எதிர்காலத்தில் கல்குடாவிலிருந்து
கிடைக்கும் வாக்குகள் கிடைக்காமல்
போய்விடும் என்ற பயம் கலந்த
பச்சைச் சுயநலமாகும். இந்த
பிரித்தாலும் தந்திரத்தினாலும்
அரசியல் சுழியோட்டத்தினாலுமே
தவிசாளர் தொடா்ந்தும் கட்சியில்
தொற்றிக்கொண்டுள்ளார்.
எனினும், இம்முறை நிலைமை சற்று
மாறுபடும்போல் தெரிகிறது. ஸ்ரீ
லங்கா முஸ்லிம் காங்கிரசின்
பிரதிநிதித்துவம் சென்ற முறை போல்
பஸீருக்குக் கிடைக்காவிட்டாலும்
அவரது ஊராகிய ஏராவூரைச் சேர்ந்த
அலிசாகிர் மௌலானா அவர்களுக்கு
கிடைத்துள்ளதால் தேசியப்பட்டியல்
பிரதிநிதித்துவத்தை பஸீர் பெறுவது
இயலாத காரியமாகிப்போய்விட்டது.
ஏனெனில் ஒரே ஊருக்கு இரண்டு
பிரதிநிதியை ரவூப் ஹக்கீம்
வழங்கினால் கட்சியின் இக்கட்டான
நிலையை மேலும் மேலும்
இக்கட்டான நிலைக்கே கொண்டு
செல்லும். அதனால் சில முக்கிய
பிரதேசங்களில் கட்சியின் தடமே
இல்லாமற்போகும் துரதிஷ்டம்
ஏற்படும்.
ஆம், அதேபோன்றதொரு
நிலைமையைத்தான் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரசும் தலைவர்
ரவூப் ஹக்கீமும் இன்று கல்குடாத்
தொகுதியில் எதிர்கொண்டுள்ளனர்.
சென்ற முறையும் (2010) வாக்குக்
கொடுத்துவிட்டு வழங்காதுபோன
தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவத்தை
தலைவர் இம்முறையும்
வழங்காதுவிட்டால் "கல்குடாவின்
போராளிகள்" என்று ரவூப்
ஹக்கீமினால் மேடைகளில்
செல்லமாகவும் , ஆக்ரோசமாகவும்
அழைக்கப்படும் 10,000
போராளிகளும் விசுவாசிகளும்
அவருக்கெதிராக செயற்படும்
துர்ப்பாக்கிய நிலை
உருவாகியுள்ளது. போராளிகளில்
இன்று யாரைக்கேட்டாலும் தலைவர்
இந்தமுறை மாறுசெய்யமாட்டார் ,
என்ற நம்பிக்கை இருப்பதாகச்
சொல்வதுடன் அவ்வாறு வழங்காது
விடுவாராயின் கல்கடா என்ற தேர்தல்
தொகுதியை அவரும் கட்சியும்
அடியோடு மறந்துவிடல் வேண்டும்.
அத்துடன் கல்கடா தொகுதியை
வடக்க, கிழக்குக் மாகாணத்திற்கு
வெளியேயுள்ள ஒரு தொகுதி
போல்தான் அவர் கருத வேண்டி
ஏற்படும் என்றும் ஆத்திரத்தை
அடக்கிக்கொண்டு சொல்கின்றனர்.
"தொடர்ந்து ஏமாற்றுபவனும்
மடையன், தொடர்ந்து ஏமாறுபவனும்
மடையன் " - என்ற முதுமொழியை
தலைவர் மறந்திருந்தாலும் கல்குடா
போராளிகள் இன்று நினைவுபடுத்திக்
கொள்கின்றனர்.
இதனை விளையாட்டுக்காகச்
சொல்லவில்லை : சிலவேளை
தேசியப்பட்டியல் இம்முறையும்
கல்குடாவுக்கு மறுக்கப்படுமாயின்
அதன்பிறகு கல்கடாத் தொகுதியை
தலைவரோ கட்சியைச்
சேர்ந்தவர்களோ தரைமார்க்கமாகக்
கடந்து செல்வதென்றாலும் கடும்
பாதுகாப்புடன்தான் அவர்கள்
செல்லவேண்டிய கட்டாய நிலைமை
தோன்றும். பாசிக்குடா
கடற்கரைக்கோ ஹோட்டலுக்கோ
வருவதாயினும் சரியே.
தரைமார்க்கமென்ன ஆகாய
மார்க்கமாக கல்குடாவை கடந்து
செல்வதற்கும் கூட அவர்கள்
யோசிக்கும் நிலை உருவாகும்.
ஏனென்றால் முஸ்லிம் காங்கிரசின்
புதிய போராளிகளை விட
நீண்டகாலமாக கட்சிக்காக
பலவற்றையும் இழந்து (பொருள்,
மானம் மரியாதை உட்பட) இன்று
பாரிய எதிா்பார்ப்புக்கும் விரக்திக்கும்
இடையே காணப்படுகின்றனர். இந்த
விரக்திநிலையானது தாம்
கட்சியாலும் தலைமையினாலும்
மர்ஹூம் அஷ்ரப் சொல்வதுபோல்
கோடரிக் காம்புகளாக அல்லது
கறிவேப்பிலையாகவ
ே பாவிக்கப்பட்டுபுறக்கணிக்கப்படு
கிறோம் என்று உணரும்போது அது
உச்ச நிலைக்குப்போய் போராளிகளில்
அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்கள்
எதையும் செய்யும் மனோநிலைக்கு
தள்ளப்படுவர். இந்த நிலைஏற்பட்டால்
அதற்கு கட்சியும் தலைமையுமே
காரணமன்றி போராளிகளில்லை.
(இப்படியான நிலைமை ஏற்படுவதை
விட்டும் அல்லாஹ் பாதுகாக்க
வேணடும் எனப் பிரார்த்திக்கின்றேன்)
ஏன் இவ்வாறு குறிப்பிடுகிறேன
ென்றால், கல்குடாவின் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளது
தீவிரப்போக்கு "சாது மிரண்டால்
காடு கொள்ளாது "- என்ற
பழமொழிக்கு ஒப்பானது.உதாரணம
ாக கடந்த காலத்தில் மர்ஹூம்
முகைதீன் நானாவுக்கு
(கல்குடாத்தொகுதிக்கு ) இரண்டு
வருட பிரதிநிதித்துவம் தருவதென்று
கூறிவிட்டு ஏமாற்றிய
ஹிஸ்புல்லாவை அடுத்துவந்த
தோ்தலில் கல்குடா மக்கள் மண்கவ்வ
வைத்தது மட்டுமன்றி அவர் இந்தக்
கல்குடா மண்ணில் தேர்தல்
முடிந்தும் சில வருடமாக
கால்வைக்க முடியாத நிலை
அவருக்கு ஏற்பட்டது.
அதுமட்டுமன்றி வாதப்பிரதிவாதங்கள்
இருந்தபோதும் காத்தாங்குடியைச்
சேர்ந்த ஹிஸ்புல்லாவின்
நடவடி்ககை மீது கொண்ட
வெறுப்பினால் அந்த ஊரைச் சேர்ந்த
எவருமே இங்கு இருக்கக்கூடாதென
்று அவர்களால் நடாத்தப்பட்டுவந்த
வியாபார நிலையங்களை
மூடவைத்து ஏறக்கறைய
அனைவரையுமே ஊரைவிட்டும்
துரத்திவிட்டனர். அவர்களில் இங்கு
திருமணம் முடித்தவர்கள் மாத்திரமே
தப்பினார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில் கடும் இராணுவ
பாதுகாப்புடன் ஹிஸ்புல்லா
ஓட்டமாவடி பிரதான வீதியைகடந்து
செல்லும்போது அவரை
இடைமறித்து பழைய செருப்பினால்
அவரது முகத்தில் அடித்த
அசம்பாவிதமும் ஏற்பட்டது.அதுவும்
இராணுவ கவச வாகனத்தில்
வைத்தே ஹிஸ்புல்லா கட்சிப்
போராளிகளால் தாக்கப்பட்டு
பழிதீர்க்கப்பட்டார்.
எனவே, இவை அனைத்து
சம்பவங்களையும் வைத்துப்
பார்க்கும்போது ஒரு விடயம்
தெட்டத்தெளிவாகத் தெரிகிறது.
அதாவது, கல்கடாவிலுள்ள 10,000
போராளிகளும் இன்று புயலுக்கு
முந்திய அமைதிபோல் நிதானமாக
ஒன்றை எதிர்பார்த்து நம்பிக்கையுடன்
காத்திருக்கின்றனர்.
கட்சியாலும் கட்சித் தலைமையாலும்
கொம்பு சீவி வளர்க்கப்பட்டுள்ள
இந்தப் போராளிகள் "வளர்த்த கடா
மார்பிலே பாய்வதுபோல் " கட்சி
மீதும் தலைவர்மீதும் பாய்வார்களா ?
அல்லது திருப்தியடைந்து
அமைதியாவார்களா ? என்பது
தலைவர் ரவூப் ஹக்கீமால்
எதிர்வரும் நாட்களில் எடுக்கப்படும்
தீர்மானங்களிலேயே தங்கியுள்ளது.
**வாழ்க கல்குடா **
***வாழ்க ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் *** —


SHARE THIS

Author:

0 comments: