ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் கல்குடா தொகுதி மக்களுக்கும் மரபு ரீதியாக இறுக்கமான தொடர்பு இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த உறவுமுறைபற்றி முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் குறிப்பிடும் போது 'முஸ்லிம் காங்கிரஸின்
இதயம் கல்குடா தொகுதி' என குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு மு.காவின் ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரைக்கும் கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸிற்கு பாரியமக்கள் சக்தி உள்ளது என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
இந்த பின்புலங்களில் இருந்துதான் கல்குடாவுக்கான முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் விவகாரத்தை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளராக மர்ஹும் முகைத்தீன் அப்துல் காதர் பங்களிப்பு செய்ததோடு மட்டுமல்லாது கல்குடா தொகுதியிலிருந்து ஒரு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெறப்படுவதாக இருந்தால் அது முஸ்லிம் காங்கிரஸ் ஊடாகவே சாத்தியமாகும் என்பதை அடையாளப்படுத்தியவராக அவர் திகழ்கின்றார்.
இந்த பின்புலங்களில் இருந்துதான் கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தவேண்டிய வரலாற்று பொறுப்பு முஸ்லிம் காங்கிரஸிற்கும் அதன் தேசிய தலைவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது என்பதை இவ்விடத்தில் நினைவூட்டுவது பொருத்தமாக அமையும் என கருதுகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்து வரும் பிரதேசம் கல்குடா தொகுதி என்றால் அது மிகையில்லை.
பாராளுமன்றம், மாகாண சபைத் தேர்தல்களின் போது மு.காவின் ஆசனத்தை உறுதிப்படுத்தும் பிரதேசமாக கல்குடாத் தொகுதி காணப்படுகின்றது.
மு.கா கிழக்கு மாகாண முதலமைச்சரை பெற்றுக்கொள்வதற்கு கல்குடாத் தொகுதி போராளிகள் செய்த பங்களிப்பை யாரும் மறுக்கமுடியாது.
எனவே, கல்குடா தொகுதியில் மு.காவின் வாக்கு வங்கி போராளிகளால் தொடர்ந்தும் தக்கவைக்கப்படுவதற்கு மு.கா தலைமை தனது விசுவாத்தை தேசியபட்டியல் மூலம் வெளிப்படுத்த வேண்டும் என கல்குடா தொகுதி போராளிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தவகையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் கல்குடா தொகுதி வேட்பாளராக கணக்கறிஞர் எச்.எம்.எம் றியாழ் தேசியதலைவர் அவர்களினால் நேரடியாக முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக களமிறக்கப்பட்டார்.
கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸின் ஒருநம்பிக்கையான, நேர்மையான தலைமைத்துவத்தை கடந்த ஒரு தசாப்தகாலாமாக
தேசியதலைவர் தேடிய தேடலில்தான் கணக்கறிஞர் றியாழ் தென்பட்டார்.
இவ்வாறு தெரிவுசெய்யப்பட்ட சகோதரர் றியாழ் தமது ஆரம்ப கல்வியை மீராவோடை அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் கற்றதோடு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு ரோயல் கல்லூரியில் உயர்கல்வியை தொடர்ந்து கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
பின்னர் மிக இளம் வயதிலேயே பட்டயக் கணக்காளர் பட்டம் பெற்றதோடு சான்றிதழ் வழங்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளராகவும்
திகழ்கின்றார்.
பின்பு தனது முதுமாணிப்பட்டத்தை இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவத்தில் பெற்றார்.
கல்வித்தகைமை இவ்வாறு இருக்கையில் ஜேர்மனியின் அதிவயுயர் கார் உற்பத்தி கம்பனி போன்றவற்றில் பிரதான நிதி கட்டுப்பாட்டு அதிகாரியாக தமது கடமையை புரிந்தார்.
அதே போன்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கம்பனி குழுமத்தில் அதிகாரியாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது பிரதான கோதுமை மா உற்பத்திகம்பனியான செரன்டிப் நிறுவனத்தில் பிரதம நிதி கட்டுப்பாட்டாளராகவும் சிரேஷ்ட முகாமையாளராகவும் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கல்வித்தகைமை, தொழிற்தகைமைகளைக் கொண்ட றியாழ் அவர்களின் வரவு கல்குடாத் தொகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருந்த அரசியல் தலைமையாக காணப்பட்டார் என்பதை அவருக்கு மக்கள்
வெளிப்படுத்திய ஆதரவின் மூலம் நாம் புரிந்து கொள்ளமுடியும்.
கல்குடா தொகுதியில் முஸ்லிம் காங்கிரஸ் பலத்த சரிவை கண்டிருந்த தருணத்தில்தான் றியாழ் பொதுத்தேர்தலில் களமிறங்கினார் அதேபோன்று ஒருசிரேஷ்ட அரசியல் வாதியை எதிர்த்து சுமார் 9000 க்கும் மேற்பட்ட வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்குடாத் தொகுதியில் எடுத்தமை பாரிய விடயமாகும்.
பலத்த விமர்சனத்திற்கு மத்தியில் கட்சி பெற்ற இந்த வாக்கு வங்கியை நிலை நாட்டி மேலும் கட்சியை வளர்க்க வேண்டுமாயின் இம்முறை முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நிச்சயமாக கல்குடாவுக்கு
வழங்கவேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.
கடந்தவாரம் கிழக்கு மாகாணத்திற்கு தேசியதலைவர் விஜயம் செய்திருந்தபோது கல்குடா தொகுதிக்கும் சென்றிருந்தார்.
கல்குடா தொகுதியின் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் மாகாண
சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியாரின் இல்லத்தில் முஸ்லிம்
காங்கிரஸின் முக்கியஸ்தர்களை அழைத்து கல்குடா அரசியல் நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள், சட்டத்தரணிகள், பட்டதாரிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் எனபலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போதுகல்குடாவுக்கு முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நியமணம் தொடர்பாகவும் அவ்வாறு வழங்கப்படாதுவிட்டால் எதிர்காலத்தில் கட்சிக்கு ஏற்படும் பாதிப்புக்கள் பற்றியும் தேசியதலைவருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது கருத்துதெரிவித்ததலைவர்,
எதிர்வரும் 23 ஆம் திகதி முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேசியப்பட்டியல் உறுப்பினரான வைத்தியர் ஹபீஸ் தனது பாராளுமன்ற
பதவியை இராஜினிமா செய்யவுள்ளதாகவும் அதன் பின் இப்பதவியை
கல்குடாவுக்கு வழங்குவதற்கான சமிஞையை தேசியதலைவர் வெளிப்படுத்தியதும் அவதானிக்கத்தக்கது.
எனவே, தேசியப்பட்டியல் தொடர்பாக பலத்த விமர்சனத்தை எதிர்கொண்டுள்ள கல்குடாத் தொகுதிக்கு அதனை வழங்கி தேசியதலைவரின் நம்பிக்கைக்கும், விசுவாசத்திற்கும் உரித்தான கணக்கறிஞர் றியாழ் அவர்களுக்கு அதனை வழங்கி முஸ்லிம் காங்கிரஸின் இதயம் என்றழைக்கப்படும் கல்குடா தொகுதியை முஸ்லிம் காங்கிரஸ் அழகுபடுத்தும் நாள் தொலைவிலில்லை. அந்த நாளை மிகவிரைவில் போராளிகள் தரிசிக்க உள்ளார்கள் அதன் மூலம் மீண்டும் மரம் விருட்சம் விட தயாராகவுள்ளது இன்ஷா அல்லாஹ்.
கல்குடாத் தொகுதி மத்திய குழு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
0 comments: