தேசிய பட்டியலில் தமது பிரதேசத்தினை சேர்ந்தவர்களையும் நியமிக்குமாறு கோரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரஊப் ஹக்கீமின் கொழும்பு இல்லத்தினை சுமார் 1,000கும் மேற்பட்ட கட்சி ஆதரவாளர்கள் நேற்று காலை முற்றுகையிட்டனர்.
முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத், திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற எம், எஸ், தௌபீக், கல்குடாவில் போட்டியிட்ட ரியால், கம்பஹாவில் போட்டியிட்ட ஸாபி ரஹீம், மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசம் ஆகியவற்றுக்கு தேசிய பட்டியல் வழங்குமாறு மேல் குறிப்பிட்டவர்களின் ஆதரவாளர்களினால் கட்சி தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முஸ்லிம் காங்கிரசுக்கு 2 ஆசனங்கள் வழங்குவதாக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் உறுதி அளித்தார்.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் அனைத்தும் முன்தினம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேசிய பட்டியலுக்காக நேற்று காலை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தினை முற்றுகை இட்டமை குறிப்பிடதக்கது
0 comments: