மாவனல்லை ஸாஹிராவுக்கு மற்றுமொரு தேசிய விருது
இலங்கையின் தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தினால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற தேசிய உற்பத்தித் திறன் விருது போட்டியில் இவ்வருடம் மாவனல்லை் ஸாஹிறா கல்லூரி முதற் தர பாடசாலைகள் மத்தியில் மூன்றாம் இடத்தை சுவீகரித்துள்ளது.
உற்பத்தித் திறன் கருப்பொருளுக்கு அமைவாக தங்களின் வளங்கள் மூலம் ஆகக்கூடுதலான பயன்களைப் பெற்ற பாடசாலைகள் தரவரிசைப்படுத்தப்பட்டு இவ்விருதுகள் வருடாந்தம் வழங்கப்பட்டு வருகின்றது.
இந்த அடிப்படையில் மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை தனது வரலாற்றில் முதல் முறையாக, முதலாம் பிரிவில் மூன்றாம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
நிறுவனத்தின் தரம், உற்பத்தி திறன் மற்றும் சேவைகளை தங்களின் வளங்களை முழுமையாக பயன்பத்துதல், அதனை விருத்தி செய்தல், தேசிய தொலைநோக்கு மற்றும் அபிவிருத்தி செயற்திட்டத்துடன் இணங்கி அபிவிருத்தியினூடாக எதிர்வரும் உலக சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக மாணவர்களை தயார் செய்தல், வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி முன்மாதிரி பாடசாலைகளை உருவாக்குதல் என்பன இந்த விருது விழாவின் நோக்கங்கள் ஆகும்.
தேசிய உற்பத்தித் திறன் போட்டித்தொடர் நான்கு வகையான பிரிவுகளில் பாடசாலைகளை தரவரிசை படுத்திக்கிறது. உயர்தரம் வரையான பாடசாலைகள், சாதாரண தரம் வரையான பாடசாலைகள், தரம் 5 வரையான பாடசாலைகள், தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் இதிலடங்கும்.
சுமார் 3,500 மாணவர்களையும் 210 ஆசிரியர்களையும் கொண்ட மாவனல்லை ஸாஹிரா கல்லூரி, சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள தமிழ், ஆங்கில மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் தரவரிசையில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல பெருமைகளைக் கொண்ட இப்பாடசாலை முதல் முறையாக வென்றெடுத்த இந்த விருது பாடசாலையின் வரலாற்றில் முக்கிய மைல்கல் என்றால் மிகையாகாது.
இதன் மூலம் தனக்கே உரிய பெருமையை மீண்டும் நிலை நிறுத்திக்கொண்டுள்ளது மாவனல்லை ஸாஹிரா.
இவ்விருதை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியின் திட்டமிடல் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக கௌரவ அதிபர் ஜவாத் தலைமையில் உழைத்த உற்பத்தித் திறன் சிறப்புக்குழு, பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவருக்கும் பழைய மாணவர் ஒன்றியமான XZahirians எமது உளப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.
பகிர்வு : ஷம்ரான் நவாஸ்
0 comments: