Thursday, August 2, 2018

வைத்தியசாலை குறிப்புகள். (தொடர்-1)

என்பு முறிவு கதைகள் (பாகம் 1)
**************************
(சம்பவம் -1)
காலை 7.30 மணி. Ward இனுள் அவசரமாக நுழைகிறேன் . Consultant ward round வருவதற்கிடையில் history எடுத்து முடிக்க வேண்டும்.   எனக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நோயாளியின் வயது வெறும் நான்கு மாதங்கள். அவ்வளவு சிறிய குழந்தைக்கு எப்படி, என
ஆச்சரியத்துடன் குழந்தை இருக்கும் கட்டிலை அடைந்தேன்.
அந்த பிஞ்சுக்  குழந்தையின் வலக்கையில் pop போடப்பட்டிருந்தது.  அவ்வளவு வலியுடனும் அக்குழந்தை இரண்டு கால்களையும் மடக்கியும் பின்னர் நீட்டியவாறும் அடிக்கடி செய்து கொண்டிருந்தது.
 X ray ஐ பார்த்தேன். கை என்பு இரண்டு துண்டாகியிருந்தது.

அருகில் குழந்தையின் தாய் நின்றிருந்தார்.

"என்ன நடந்த"
"Bike ல ஈந்து விழுந்த"

"எப்டி....எங்க நடந்த இது...."
"நானும் அவரும் மட்டக்களப்புல ஈந்து வரகுல மடில ஈந்த புள்ள விழுந்திட்டு"

"புள்ள மடில ஈந்து சும்மா விழாதே....கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க பாப்பம்"
"அது வந்து....நான் அபாயாக்கு மேலால hand bag போட்டீந்த. மடில ஈந்த புள்ள அத பிடிச்சிட்டு வந்த. அபாயாவால hand bag வழுக்கி விழக்குல புள்ளயும் சேர்ந்து விழுந்திட்டு."

***********

(சம்பவம் - 2)
முதல் நாள் ward round நடக்கும் போது வலியால் மிகவும் அழுதுகொண்டிருந்தாள் அச்சிறுமி. தொடை என்பு முறிவு காரணமாக admit பண்ணப்பட்டிருந்தாள். Consultant பார்த்து இரக்கப்பட்டு நாளை முதலாவது surgery இப்பிள்ளைக்கு பண்ணுவோம் என கூறிச்சென்றார்.
வழமையாகவே எனக்கு என ஒதுக்கப்பட்ட patients களின் history எடுத்து examination பண்ணி  முடிந்த பின் ward   இல் இருக்கும் ஏனைய patients களையும் போய் பார்வையிடுவேன். ஆனால் அன்று நேரம் கிடைக்கவில்லை. Ward round முடிந்ததும்   casualty நாள் என்பதால் surgery theatre ற்கு சென்றுவிட்டேன். 
அடுத்த நாள்  நேராக அச்சிறுமியை  பார்க்க சென்றேன்.
இன்று சிறுமி ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக காணப்பட்டாள்.

"புள்ளட பேரு என்ன"
 அருகிலிருந்த பெண்மணியை திரும்பி பார்த்து விட்டு பதில் அளித்தாள்.

"எத்ன வயசு"
"7" 

 "எந்த school போர" 
அமைதியாக பதிலளித்தாள்.

அருகிலிருந்த பெண்மணியிடம் கேட்டேன்.
"நீங்க புள்ள அம்மாவா?"
"இல்ல, அம்மம்மா"

"என்ன நடந்த புள்ளக்கி"
"School ஈந்து வரகுள்ள bike accident பட்ட"

"புள்ளட அம்மா, அப்பா எங்க"
"அவங்களோட போவகுள்ளான் accident ஆவின"

"அவங்க இரண்டு பேருக்கும் எப்படி"
"அவங்க இரண்டு ward ல வச்சு ஈந்த . அவங்க அப்பாவை நேத்து ticket வெட்டிடாங்க"

"ம். அப்ப அம்மா"
பதிலில்லை. பிள்ள நிமிர்ந்து அம்மம்மாவை பார்த்தது. 

பதில் வந்தது.
"அவக்கு நல்லம் இப்ப"

"அவவும் discharge ஆ"
"....."
ICU வில் serious ஆம் என்று சமிக்ஞையால் பதில் சொன்னார்.
பிள்ளை அமைதியாக கட்டிலில் இருந்து விளையாடிக்கொண்டிருந்தது.


(தொடரும்)

SHARE THIS

Author:

0 comments: