ஐந்தாம் வகுப்பு இருக்கும்.
பொண்ணுங்க என்றால் செம அலேர்ஞி. டீச்சர் வேற மூனு boys, மூனு girls என்று ஒரு பெஞ்ச்சில் அமர்த்தி விட்டார். அப்போ பொண்ணுங்களப் பார்க்கவே மாட்டோம். படிப்புலயும் சரி, போட்டுக் குடுக்குறதுலயும் சரி, ஒர்த்தருக்கு ஒருத்தர் ஒன்டியாத்தான் இருப்போம்.
"டீச்சர் ஏன்ட மேசையில தண்ணிய ஊத்திடுடான். இப்ப book க்க வெச்சு எழுத ஏலாது டீச்சர்" என விம்மிக் கொண்டே போய் சொன்னாள் சுமையா...
"சாபித், இங்க வாங்கோ... எதுக்குக் கொட்டினீங்க? கைய நீட்டுங்க..."
"இல்ல டீச்சர்... தண்ணி குடிக்க போத்தலத் தொறக்கக் கொள்ள கொட்டுப் பட்டுட்டு டீச்சர்" என்றேன்.
சொல்லி முடிவதற்குள் கையில் இரண்டு அடியும், காலில் ஒரு அடியும் பட்டு விட்டது... அந்த நீட்டப் பிரம்பால்...
அழுது கொண்டிருந்த அவள் எனக்கு அடி விழுந்ததும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.
அவள் சிரித்ததற்கோ என்னவோ, அவளைப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
சிறிது நாட்கள் அவளோடு பேசவேயில்லை..
பொதுவாய் அந்த வயதுகளில் girls gang ஏதாவது செய்து boys gang இற்கு அடி வாங்கித் தந்து விட்டால், விட மாட்டோம், boys உம் ஏதாவது சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருப்போம். அந்தச் சின்ன வயதிலும் கிண்டல், நையாண்டிக்கு எல்லாம் குறைவேயில்லை.
பொதுவாய் அந்த வயதுகளில் girls gang ஏதாவது செய்து boys gang இற்கு அடி வாங்கித் தந்து விட்டால், விட மாட்டோம், boys உம் ஏதாவது சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருப்போம். அந்தச் சின்ன வயதிலும் கிண்டல், நையாண்டிக்கு எல்லாம் குறைவேயில்லை.
அன்றும் அது போல scholarship results வெளிவந்தது. பிரின்சிபல் வந்து சுமையாவ மட்டும் தனியா கூட்டிட்டுப் போனாரு...
அட... அவதான் வகுப்புல கூட மார்க்ஸ் வாங்கிட்டாவோன்னு பேசிக்கிட்டோம்.
வரும் போது அழுது கொண்டே வந்தா.
"ஒரு மாராக்ஸ்ஸால பெயில் ஆகிட்டாவாம்"
அழுது கொண்டிருந்த அவளை வழமை போல கலாய்க்கத் தோன்றவில்லை.
சுமையாவை எனக்கு நன்றாகத் தெரியும். நன்றாய்ப் படிப்பாள். கடும் கெட்டிக்காரி. ஆனால் ஆண்களுடம் எப்பவும் ஒண்டிக்கு ஒண்டி.
சுமையாவை எனக்கு நன்றாகத் தெரியும். நன்றாய்ப் படிப்பாள். கடும் கெட்டிக்காரி. ஆனால் ஆண்களுடம் எப்பவும் ஒண்டிக்கு ஒண்டி.
ஆறுதல் சொல்லுமளவுக்கு நமக்குப் பக்குவமில்லை. பிரின்சிபல் வந்து ப்லெக் போர்ட்டில் பாஸ் பன்னியவர்கள் லிஸ்ட்டை எழுத ஆரம்பித்தார்.
நான் நான்கு மார்க்ஸ்ஸால் பாஸ் பன்னி விட்டிருந்தேன். சுமையாவுக்கும் ஆறுதல்கள் பல சொல்லப் பட்டன.
வகுப்புக்கள் ஏற ஏற அதனோடு சேர்ந்து வயதும் ஏறிக் கொண்டே சென்றது. பெண் மாணவிகளுக்கு ஆண் மாணவர்களுடன் இருந்த கோபம், அந்தப் போட்டி, பொறாமைகள் விடுபட "உங்கள் நண்பர்களின் பெயர்கள் சிலவற்றைக் குறிப்பிடுக" என்று சமூகக் கல்விப் பாடத்தில் கேள்வி வர ஆண்கள் பெண்களின் பெயர்களை எழுதவும், பெண்கள் ஆண்களின் பெயர்களை எழுதவும் ஆரம்பித்தனர்.
ஆம்.. நாம் இப்போது நண்பர்களாக ஆரம்பித்து விட்டோம். பதின்ம வயதுகளில் ஏற்படும் மாற்றமோ என்னவோ பத்து வருடங்கள் ஒரே வகுப்பில் ஒன்றாய்ப் படித்தும், எதிரிகளாய்ப் பார்த்த நாம், இப்போது உடன் பிறப்புக்களாய், ஏன் சிலர் வாழ்க்கைத் துணையைக் கூட வகுப்பறையில் தேட ஆரம்பித்து விட்டனர். ம்கும்... ஆங்காங்கே ஒரே வகுப்பில் லவ்ஸ்ஸூகளும் முளைக்க ஆரம்பித்தன.
இப்போவெல்லாம் சுமையாவோடு கோபமே கிடையாது. படிப்பில் செம போட்டியாக இருந்தாலும் படிப்பதற்கு உதவிக் கொள்வோம். கணக்கில் எப்பவும் நான்தான் புலி. சயன்ஸில் அவள். இப்படி வகுப்பில் சில மாணவர்களும், பல மாணவியரும் இருந்தனர்.
ஒரு நாள் வகுப்பறையில் முன் மேசையில் அமர்ந்திருந்த சுமையாவை நான் ஏதோ சொல்லிக் கலாய்க்க கோபம் வந்த அவள் வோட்டர் போட்டலை எடுத்து தண்ணீரை என்மீது வீசினாள். அது அப்படியே கரும்பலகை முழுவதும் சிதற, தமிழ் பாட டீச்சரும் வகுப்புக்குள்ளே வர ஒரே பதட்டமாய்ப் போய் விட்டது.
"கரும்பலகையில் யார் தண்ணீரைக் கொட்டியது?"
டீச்சரின் வொய்ஸ் ஹோல் முழுவதும் கேட்டது. ஆனால் யாரும் பதிலில்லை.
"சொல்லா விட்டாள் எல்லோருக்கும் அடி விழும்"
பதிலில்லை. கோபம் டீச்சருக்குத் தலைக்கேற பிரம்பை எடுத்து எல்லோடுக்கும் விலாசித் தள்ளினார்.
அடி பட்ட வலியை விட வகுப்புத் தோழி ஒருத்தியைக் காப்பாற்றி விட்ட சந்தோசம் எல்லோருக்கும் இருந்தது.
பெருநாட்கள் வந்தால் பெண் நண்பிகளின் வீடுகளுக்குச் செல்வது, ஏதாவது குரூப் ப்ரொஜெக்ட், க்ரூப் வேர்க் என்று அவர்கள் வீடுகளுக்குச் சென்று அங்கு அவர்களது பெற்றோரின் கெஞ்சுதலுக்காக ஒரு வேளை சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு வருவது இவ்வாறு அந்த நட்புகள் வளரத் தொடங்கின.
பத்தாம் வகுப்பில் பாடசாலை மாற்றம் பெற்று வந்தாலும், லீவு காலங்களுக்கு ஊருக்குச் சென்றால் பகுதி நேர வகுப்புக்களுக்குச் செல்லத் தவறுவதில்லை.
O/L எக்ஸேம் ரிசல்ட் வந்து பரபரப்பாக வீட்டுட் டெலிபோனுக்கு கோல்கள் வந்து கொண்டிருந்தன..
"வாஅலைக்கும் ஸலாம்"
"அல்ஹம்துலில்லாஹ்.. நல்ல பாஸ். ஏழு A எடுத்து இருக்கார்"
"ஆ..."
"ஓ...."
"ஓ...."
"அதுதான். நானும் நெனச்சேன்"
"ஓ... அதுல எலயா S எடுத்து இருக்கார். நாங்க பெய்ல் ஆகுவேன்னுதான் நெனச்சி பயந்துட்டு இருந்தோம்"
வரும் கோல்களுக்கு எல்லாம் வாப்பா கம்பீரமாய் விடை கொடுத்துக் கொண்டிருந்த நேரம் ஊருல என்ன ரிஸல்ட்டா இருக்குமுன்னு தெரிஞ்சிக்க ஆர்வமாய் இருந்தேன்.
"அட.. அங்கயும் நாலஞ்சு பேருக்கு ஏழு A வந்திருக்காம்"
நாமதான் கூட ரிஸல்ட் எடுத்திருக்கோமுன்னு நெனச்சிருந்தேன்.
ஆனா அவங்க அத வேறமாதிறியும் நெனச்சிருந்தாங்க
"அவனெல்லாம் கொழும்புக்குப் போய் படிச்சி என்ன பிரயோசனம். இங்க ஊர்லயும் புள்ளைகள் அவனுட ரிஸல்ஸ் தான் எடுத்திருக்கு." யாரோ சொன்னதா வாப்பா எங்கிட்ட சொல்லுராரு.
"பொம்புளப் புள்ளகள் நல்லா படிப்பாங்க. ஆம்புளப் புள்ளகள் என்டா அப்பிடித்தான். என்னோட படிச்ச ஊருப் பொடியன்மார் தாரும் இந்த ரிஸல்ஸ் எடுத்தில்லே" என்றேன்.
"சுமையா, ஹாஜறா, ரிப்கா, பர்வீன் இவங்கட ரிசல்ஸ் எல்லாம் ஏழு A யாம்"
"நல்ல வேள எங்கட மானம் இத்தோட நின்டுச்சி. ஒரு A கொறஞ்சிருந்தால்?" மனதுக்குள்ளே நினைத்துக் கொண்டேன்
அடுத்த வாரம் ஊர் பாடசாலைக்குச் செல்கிறேன். டீச்சர்மாரைப் பார்த்துப் பேசி விட்டு வர வேண்டுமென்று.
"ஏ.எல் என்ன செய்யப் போரீங்க?"
"கொமஸ்தான் சேர்"
"மெட்ஸ் நல்லா படிப்பீங்க தானே?"
"கொஞ்சம் பயம் சேர். பெய்லாப் பெய்ட்டுருவேனோன்னு"
"அதுக்கெதுக்குப் பயப்புடோனும்?. கொஞ்சம் ஹார்ட் வேக் பன்னினால் படிச்சிடலாம்"
"சுமையா என்ன செய்யப் போறாளாம்?"
சக நண்பன் ஒருவனையும் கூட்டிக் கொண்டு சுமையாவினதும், சில நண்பிகள் வீடுகளுக்கும் சென்றேன்.
சிலருக்கு கல்யாணம் பேசி...
சிலருக்கு அடுத்த வாரம் கலியாணம்.
"A/L படிக்கல்லயா ஹாஜறா? ஏழு A எடுத்து ஈக்காய். ஏ.எல் மெட்ஸ் செய்யோனுமுன்னு தானே சொல்லிட்டு இருந்தாய்?"
"இல்லடா... ஊட்டுல கல்யாணம் பேசிட்டாங்க. எனக்கும் ஏலா என்டு செல்ல ஏலாவே. பேசி ஈக்கியவரோட நான் பேசினேன். ஏ.எல் படிக்க விடுரன்டு சொல்லி ஈக்கிறாரு" என்றாள்.
"கலியாணம் முடிச்சிட்டு படிக்கிற சாத்தியமா? அதுவும் மெட்ஸ்? இவனுகளும் படிக்க மாட்டானுகள். படிக்கிற புள்ளகள படிக்க உடவும் மாட்டானுகள். ஒங்கடவரு என்ன படிச்சீக்கிற?"
"ஓ.எல் வரைக்கும் தான். அது பெய்ல் ஆகினதும் தேங்கா பிஸினஸுக்கு எறங்கிட்டாரு".
எனக்கென்னமோ அவள் இனிமேல் படிக்கவே மாட்டாள் எனத் தோன்றியது.
சுமையா வீட்டுக்குச் செல்கிறேன்.
நல்ல காலம் அவளது தகப்பனுக்கு பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவும் இருந்தது.
"ஏ.எல் ஆட்ஸ்தான் படிக்கப் போறேன்"
"சயன்ட்ஸ், மெட்ஸ் நல்லா செய்வியே? ஏன் ஏலெவல் அதுல செய்யக் கூடாது?"
"வாப்பாட்ட சல்லி இல்லயாம். அதுக்குக் கொறஞ்சது மாதம்பை இல்ல கெகுணகொல்லைக்காவது போகனும்"
"கெகுணகொல்ல கிட்டத்தானே? போகேலுமே?"
"அங்கயும் சல்லி கட்டோனும்டா"
நமது சமுதாயத்தில் பல ஹாஜியார் மார், வருடா வருடம் வெக்கேஷன் கழிக்க "ஹஜ்ஜூக்குச் செல்கிறோம், உம்றா செல்கிறோம்" என்ற பெயரில் மக்காவுக்குச் சென்று லட்சங்களைக் கொட்டுவதை விட இப்படி ஏதாவது ஒன்றுக்குச் செலவழிக்கலாமே?
வருடங்கள் உருண்டோடின.
சுமையா டிஸ்ட்ரிக் first. ஐலன்ட் ரேங்க் 8.
ஏ.எல் வீட்டிலிருந்து கொண்டே மெட்ஸ் படிக்கப் போவதாய்ச் சொன்ன ஹாஜரா இப்பொழுது இடுப்பில் ஒன்று, கையில் ஒன்று. இவையெல்லாம் இரண்டு வருடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது.
ஏ.எல் வீட்டிலிருந்து கொண்டே மெட்ஸ் படிக்கப் போவதாய்ச் சொன்ன ஹாஜரா இப்பொழுது இடுப்பில் ஒன்று, கையில் ஒன்று. இவையெல்லாம் இரண்டு வருடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது.
கொழும்பு Law faculty க்குத் தெரிவாகிறாள் சுமையா. அவளோடு சேர்ந்து கிட்டத்தட்ட பத்து மாணவர்கள்... மன்னிக்கனும் எல்லாம் மாணவிகள் பல்கலைக்கழகம் தெரிவாகிறார்கள். எல்லோரும் Arts தான்.
கெம்பஸ் முதலாம் வருடம் முடிந்து இரண்டாம் வருடம் ஆரம்பிக்கும் தருணம்.
ஆங்காங்கே பல்கலைக்கழகத்தில் திறமையை காட்டிக் கொண்டிருந்த மாணவிகள் பேர்மியூடா முக்கோண வளைகோணத்துக்குள் சிக்குண்ட கப்பல்கள் போல் காணாமல் போய்க் கொண்டிருந்தனர்.
ஆங்காங்கே பல்கலைக்கழகத்தில் திறமையை காட்டிக் கொண்டிருந்த மாணவிகள் பேர்மியூடா முக்கோண வளைகோணத்துக்குள் சிக்குண்ட கப்பல்கள் போல் காணாமல் போய்க் கொண்டிருந்தனர்.
"கலியாணம் பேசுராங்க..."
"மாப்புளக்கி அவ கெம்பஸ் போறது புடிக்களயாம்....நிக்க சொல்லிட்டாராம்"
"இன்னும் ஒரு வருஷம் தானே. முடிச்சால் ஒரு க்ரேஜூவேட். கவர்மன்ட் ஜொப் கிடைக்கும்"
"மாப்புள மாடு பிஸினஸாம். நல்ல சல்லியாம்"
"அப்போ அவருக்கும் மாட்டுப் புத்திதானே ஈக்கும்"
மூன்றாம் வருடம் செல்ல, பெகல்டியில் இருந்த பாதி முஸ்லீம் மாணவியரைக் காணவில்லை.
சிலர் கலியாணம் முடிச்சு யுனிவர்சிட்டியைக் கை விட்டாச்சு.
சிலர் கர்ப்ப வயிற்றுடன்..
சிலருக்குக் குழந்தைகள்...
எக்ஸேமுக்கு மட்டும் வந்து எழுதி விட்டுச் செல்வார்கள்.
சிலர் கர்ப்ப வயிற்றுடன்..
சிலருக்குக் குழந்தைகள்...
எக்ஸேமுக்கு மட்டும் வந்து எழுதி விட்டுச் செல்வார்கள்.
எக்ஸேம் நடக்கும் காலங்களில்தான் பார்க்க வேண்டும் கூத்தை.
அந்தப் மாணவியர் எக்ஸேம் வந்து எழுதும் வரை இந்த மாடு மேய்க்கும் கணவரும், சந்தைக்குச் செல்லும் சண்டியர்களும் பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு எக்ஸேம் ஹோலுக்கு வெளியில் அமர்ந்திருப்பர்.
நான்காம் வருட செகன்ட் செமெஸ்டர் இருக்கும். ஊர் வகுப்பு சக நண்பன் ஒருவனின் திருமணத்துக்குச் செல்கிறேன்.
"சுமையா கெம்பஸ்ஸ விட்டுட்டாவாம்" சக நண்பர் ஒருவர் கூறினான்.
"ஏண்டா?"
"அவக்குக் கலியாணம் பேசீக்கிற பொடியனுக்கு விருப்பமில்லயாம்டா. அவன் ஒரு எஞ்சினியராம்".
"படிச்சீக்கிறான். அவனுக்கு ஏன்டா விருப்பமில்ல?"
"தெரியாடா. ஆனால் வெளிநாட்டுல இருக்கான். மெக்கானிகல் இஞ்சினியராம். நல்ல சம்பாத்தியமாம். ஊர்ல கார், வீடு எல்லாம் இருக்காம்".
"எந்த யுனிவர்சிட்டில படிச்சானாம்?"
"யுனிவர்சிட்டில எல்லாம் படிச்சி இல்ல. O/L க்குப் பொறகு A/L கொஞ்ச காலம் Arts செஞ்சானாம். அதுக்குப் பொறகு BCAS ல சேர்ந்து A/C repair course செஞ்சிட்டு கட்டார் போய் ஈக்கிறான்டா"
"அடேய் அதுக்குப் பேர் இஞ்சினியர் இல்லடா. இப்பிடி ஊருல நெறையப் பேர் ஏமாத்திட்டுத் திரியிரானுகள். A/L லே ஒழுங்காப் படிச்சி இல்ல. எப்பிடி எஞ்சினாயர் ஆவான்?"
சுமையாவையும் அந்தக் கருப்பு விடவில்லை. Final year இல் degree ஐக் கை விட்டாச்சு. கலியாணம் முடிச்சு சில நாட்களில் கட்டார் பறந்தாச்சு..
சில மாதங்களுக்கு முன்னர் கேள்விப் படுகிறேன். "சுமையாட மாப்புள கட்டார்ல மௌத்தாம்.
"இன்னாலில்லாஹ்... எப்பிடி?"
"எக்ஸிடன்ட் ஒன்டாம். கரண்ட் ஷோட் ஒன்டு"
"சுமையா என்ன செய்யிரா?"
"மையத்தயும் எடுத்துக் கொண்டு புள்ளகள் ரெண்டோட சிறீலங்கா வந்தா"
"மாப்புள மௌத்தாகின பொறகு என்ன செய்வாவோ தெரியாவே?"
"என்னத்த செய்ய.. படிச்ச படிப்பும் இல்ல. கெம்பஸூக்குப் போய் பேசி ஈக்கிறா... எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம டிக்ரிய கை விட்டுட்டுப் போனதால யுனிவர்ஸிட்டியும் அத வித் ட்ரோ பன்னிடுச்சாம்"
"ரெண்டு புள்ளகளைக் காப்பாத்த வேணும். உழைப்புக்கு வழி இல்லை. மறுமணங்கள் உடனடியாக நடக்கவும் சாத்தியமில்லை. பிழைப்புக்கு என்ன செய்ய?"
இந்தத் தடவை அவளுக்காக அழனும் போல இருந்தது.
இப்படி ஒரு சுமையாவாக, ஹாஜராவாக உங்கள் வீட்டில், பக்கத்து வீட்டில், உங்கள் கூடப் படித்த பெண்கள், உங்கள் ஊரில் எத்தனை பேர்?
பொம்புளகள் படிக்கப் படாது, ஒ.எல் ஓட நிண்டுறனும், ஏ.எல். ஓட நிண்டுறனும், யுனிவர்சிட்டி போகப் படாது. போனாலும் இடையில விட்டுறனும்.
இதுக்கெல்லாம் பின்னனியத் தேடிப் பார்த்தால் இந்த கருத்துக்கு எல்லாம் பின்னால நிக்கிறவன், வால் புடிக்கிறவன், வழிப்பொறிக்கி எல்லாம் ஒன்றோ O/L fail ஆகிட்டு படிக்கிற பொண்ணுங்கள பார்த்துக் கலியாணம் செய்வானுகள். கல்யாணம் பண்ணும் போது படிக்க விடுவோம்,
பட்டம் பறக்க விடுவோமுன்னு சம்மதத்தோடுதான் முடிப்பானுகள்.
இல்லன்னா A/L ஒன்றோ, இரண்டோ பாடம் பாஸ் பன்னி விட்டு கோர்ஸ் என்ற பெயரில் கொட்டாவி விட்டு விட்டு கள்ள சேர்ட்டிபிக்கேட்ஸ் அடிச்சிக்கிட்டு டுபாய், கட்டாருன்னு பறப்பானுங்க. வந்து நமக்கு டிக்ரீ முடிச்ச, யுனிவர்சிட்டில படிக்கிற, யுனிவர்சிட்டி செலெக்ட் ஆன பொண்ணுகள்தான் வேணும்னு பார்த்துப் புடிச்சி அவங்களுக்கும் வாய் கிழிய வாக்குறுதிகள் வழங்கி, கடைசியில எதயாச்சும் கவுத்து இவங்க படிப்பையும் பாழாக்கி வைப்பாங்க.
ஹாஜறாவும் படிச்சி எஞ்சினியர் ஆகி இருக்கலாம்.
சுமையாவும் படிச்சி லோயர் ஆகி இருக்கலாம்.
ஆனால் அவங்க கணவன்மார் அத விடல்ல...
விட்டுக் குடுக்குறதுக்கும், சமாலிச்சுப் போறதுக்கும் நாம என்ன பொம்புளயா?
ஆம்பள...
ஆண்....
சொல்லும் போதே எவளோ கெத்தா இருக்கில்ல??
ஆம்பளன்னா கெத்து..
ஆணாதிக்கம்..
பொம்பளன்னா அடங்கித்தான் போகனும்.
எவளோ கேவலமான பிறவிங்க இல்ல நாம...
(பல நிஜங்கள் கலந்த கற்பனை)
0 comments: