ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னைய நாள் தேசிய அமைப்பாளரும்,முன்னால் பிரதி அமைச்சரும்,புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸ் அவர்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னராக எவ்வித நிபந்தனையுமின்றி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார் என்பதை நாம் அறிந்ததே.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உத்தியோக பூர்வ வாசஸ்தலமான தாருஸ்ஸலாத்தில் நடை பெற்ற இவ் நிகழ்வில் கட்சியின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம், மற்றும் பிரதி அமைச்சர்கள்,உயர் பீட உறுப்பினர்கள்,போராளிகள்,ஊடகவியா ளர்கள் என பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட நிகழ்விலயே கே.ஏ.பாயிஸ் அவர்கள் உத்தியாகே பூர்மாக கட்சியில் இணைந்து கொண்டார்.
புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்ததை கொண்டாடும் விதமாகவே நாளை அதாவது 11-11-16 வெள்ளிக் கிழமை ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மாபெரும் ஊர்வலமும்,வரவேற்பு நிகழ்வொன்றும் புத்தளம் நகர மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும்,நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் பிரதம விருந்தினராக கழந்து சிறப்பிக்க வருவதோடு நாடளாவிய ரீதியிலிருந்தும் பெருந் திரளான போராளிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.
தகவல்:வை.எம்.பைரூஸ்
0 comments: