Thursday, October 6, 2016

கல்வியின் முன்னேற்றமே எமது சமூகத்தின் எழுச்சி - ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான வாழ்த்தில் SLMC உயர்பீட உறுப்பினர் HMM.றியாழ்

(Yakoob mohamed fairoos)

இம்முறை வெளியான ஐந்தாம் தர புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து தனக்கும் தமது பாடசாலை, கற்பித்த ஆசிரியர்கள், பெற்றோர்கள், பிரதேசத்திற்கும் பெயரையும் புகழையும் பெற்றுத்த தந்த மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான HMM.றியாழ் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மாணவர்களின் பாடசாலைக்கல்வி வரலாற்றில் முக்கிய திருப்பு முனையாகவும் அளவு கோளாகவும் கணிக்கப்படும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற வேண்டுமென நோக்கில் மாணவர்களும், ஆசிரியர்கள், பெற்றோர்களும் அர்ப்பணிப்புடன் அயராதுழைக்கின்றனர்.

அவர்களது அயராத உழைப்புக்கு கிடைக்கின்ற உயர் பலனே இந்தப்பெறுபேறுகளாகும். அதே நேரம், பரீட்சைக்கு தைரியத்துடன் தோற்றி தேர்ச்சி பெற முடியாமல் போன ஏனைய மாணவர்களும் இத்துடன் தமது கல்வி முடிந்து விட்டதாக எண்ணி விடாமல், இன்னும் நமக்கான நல்ல எதிர்காலம் இருக்கின்றதென்பதை மனதிலிருத்தி தொடர்ந்தும் கல்வியில் கவனஞ்செலுத்தி வெற்றி பெற வேண்டுமென்பதுடன், புலமைப்பரிசில் பரீட்சையில் தனது பிள்ளை நல்ல பெறுபேறு பெற வேண்டுமென எவ்வாறு அயராதுழைத்தீர்களோ அவ்வாறு அவர்களது எதிர்காலக் கல்வியும் தொடர உழைக்க வேண்டுமென இந்த நல்ல சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், மட்டு கல்வி வலயத்தில் எமது ஓட்டமாவடி கோட்டம் அதிகப்படியாக 146 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளமை சந்தோஷமளிக்கின்றது. அதே நேரம், வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலய மாணவன் அன்வர்டீன் முஹம்மட் சம்ரீன் 184 புள்ளிகளைப் பெற்று பிரதேச மட்டத்தில் சாதனை படைத்தமைக்கும் அப்பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இந்த சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும். கல்வியின் முன்னேற்றமே எமது சமூகத்தின் எழுச்சி என்பதை நமது மனதில் நிறுத்தி, அதன் முன்னேற்றத்திற்கு சகலரும் உழைப்போமாக என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளரும் கணக்கறிஞருமான HMM.றியாழ் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.


SHARE THIS

Author:

0 comments: