(வை.எம்.ஹாரீஸ்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழுக்கு மாகாண முதலமைச்சருமான கௌரவ நசீர் ஹாபீஸ் அவர்களின் சேவையால் எம் சமூகம் அளப்பெரும் நன்மைகளைப் பெற்றுள்ளது. பெற்றுக் கொண்டிருக்கின்றதென்றால் நாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
அது மட்டுமன்றி, அவரின் தற்காலச்செயற்பாடுகள் அனைத்தும் இலங்கையிலுள்ள ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகத் திகழ்வது அவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பாசறையில் வளர்ந்ததை எமக்குப் பறைசாற்றுகின்றது.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், 2007ம் ஆண்டு வட கிழக்கு பிரிந்தவுடன் கிழக்கு மாகாணத்துக்கான முதலாவது மாகாண சபைத்தேர்தல் 2008ம் ஆண்டு நடந்தது. இத்தேர்தலை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்திருந்தது. ஏனைய சிறு பான்மை கட்சிகளான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்றன ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியுடன் ஒன்றிணைந்து களமிரங்கியதுடன், ஐக்கிய தேசியக்கட்சியுடன் ஒன்று சேர்ந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள ஏனைய கட்சிகள் தனித்து களமிறங்கியது.
கிழக்கு மாகாண சபையின் மொத்தமாக உள்ள 37 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி 20 ஆசனங்களைக் கைப்பற்றியதன் காரணமாக, முதலமைச்சர் பதவியைத் தீர்மாணிக்கின்ற சக்தி அன்றைய அரசின் கைக்கு வந்தது. இதில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவர் என்று எதிர்பார்த்த நிலையில், அது மிகப் பெரும் ஏமாற்றமாகவே அமைந்தது.
ஏனெனில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முக்கிய புள்ளிகளில் ஒருவரான (பிள்ளையான்) என்று அழைக்கப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் அன்று அரசுடன் இணைந்ததன் காரணமாக, அவருக்கு ஏதோ ஓர் உயர் பதவி வழங்க வேண்டிய கட்டாய நிலைக்கு மஹிந்த ராஜ ராஜபக்ச அரசு தள்ளப்பட்டது.
ஆகையால், அதற்கு இதனைச்சாட்டாக வைத்து, விருப்பு வாக்கு அதிகம் பெற்றார் என்ன போர்வையில் முதலமைச்சர் பதவி சிவநேசத்துறை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டு, அவர் நான்கு வருட காலம் ஆட்சி செய்தார். ஆனால், அவருடைய ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்ற மூவின மக்களும் அடைந்த பயன் விரல் விட்டு எண்ணக் கூடியளவுக்குக் கூட இல்லை.
அதன் பிற்பாடு, 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித்தேர்தலின் பின்னர், இரண்டாது கிழக்கு மாகாண சபைத்தேர்தல் 2012ம் ஆண்டு நடை பெற்றது. இத்தேர்தலிலும் தமிழ், முஸ்லிம்களின் பிரதான கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியுடன் ஒன்றிணைந்து தேர்தலில் களமிறங்கியதன் விளைவாக, இரண்டாவது முறையும் அக்கால மஹிந்த அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியே முதலமைச்சரைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்தது.
இம்முறையாவது முதலமைச்சர் பதவி சிறுபான்மை மக்களின் கட்சிக்கு வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், அதுவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனியின் கைபொம்மை வேட்பாளாரான நஜீப் ஏ மஜீத்துக்கே தாரை வார்த்துக்கொடுக்கப்பட்டு, அவருடைய இரண்டரை வருட ஆட்சிக்காலமும் எதுவித பயனுமின்றி கிழக்கு மாகாண சபை வலுவிழந்ததுடன், கிழக்கு வாழ் மக்களும் அதிருப்திக்குள்ளானார்கள்.
பின்பு, 2014ம் ஆண்டு நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்பு மாகாண சபையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தில் முதலமைச்சர் பதவியைப் பெரும்பான்மைக் கட்சிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு வழங்க ஆதரவு கொடுக்கத் தீர்மானித்தது. இருந்தும், சில சிறுபான்மைக்கட்சிகள் ஒருமித்த கருத்தாக அப்பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைக்கக்கூடாதென அயராதுழைத்தும், அது வீண் போனதென்பதை நாம் யாரும் இலகுவில் மறக்க முடியாது.
அதற்கமயவே கிழக்கு மாகாண சபையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் போது, முந்தய ஆட்சியில் கிழக்கு மாகாண விவசாயம், கால்நடை, மீன்பிடி அமைச்சராகப்பதவி வகித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவர் செய்னுலாப்தீன் ஹாபிஸ் நசீர் அஹமட் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முதலமைச்சராகத்தேர்வு செய்யப்பட்டார்.
முதலமைச்சர் நசீர் ஹாபீஸ் அவர்கள் தனது பதவியைப்பொறுப்பேற்று ஒன்றரை வருடங்கள் தாண்டியுள்ள நிலையில், பொறுப்பேற்ற காலம் முதல் இன்று வரைக்கும் கிழக்கு மாகாணத்திற்கும், கிழக்கு வாழ் மக்களுக்கும் அளப்பெரிய சேவைகளை அவர் முன்னெடுத்துச் செல்கின்றார். துரிதமான பல அபிவிருத்தித்திட்டங்கள், இளைஞர்கள், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பற்றாக்குறை போன்ற இன்னொறன்ன வேலைகளை மும்முரமாக மேற்கொண்டு பூர்த்தி செய்து வருகிறார்.
அது மட்டுமன்றி, குறிப்பாக வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் கிழக்கு மாகாணத்தில் ஏறாவூரில் ஆரம்பமாகியுள்ள தொழிற்சாலைகள் இன, மத, மொழி வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் பயன்பெறும் வகையில், அமைத்துக் கொடுத்துள்ளமை இவரின் தன்னலமற்ற சேவையை அனைவரும் புரிந்து கொள்ளும் படியாகவுள்ளது.
மற்றும், இன்னும் ஏராளமான வெளிநாட்டு நிறுவனங்களோடு பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் முதலமைச்சர் நசீர் ஹாபீஸ், அவர்களின் மூலம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் இன்னும் பல தொழிற்பேட்டைகள் கிழக்கு மண்ணில் உருவெடுப்பதற்கு வாய்ப்புள்ளது.
அரசியல் பழி வாங்கல்கள் இல்லாமல், எந்தவித பாரபட்சமுமின்றி, அனைவரும் பயனடையும் நோக்கில், கிழக்கு மண்ணை கல்வி, சுகாதாராம், விளையாட்டு, வறுமையொழிப்பு போன்ற இன்னொரன்ன அபிவிருத்திப்பணிகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் நசீர் ஹாபீஸ், கிழக்கு வாழ் மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனலாம்.
ஒரு காலத்தில் விடுதலைப்புலிகளினால் கிழக்கு மண்ணை விட்டே வெளியேற வேண்டுமென்ற சூழ்நிலை ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு இன்று கிழக்கையே ஆளும் நிலை வந்திருப்பது, எமது தேசிய கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினாலும், அதன் தலைமையினாலும் என்பதை நாம் யாரும் இலகுவில் மறந்து விடக்கூடாது.
கிழக்கு மண்ணுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டுமென்பது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் கனவாகும். அது நனவாகியுள்ளமை கிழக்கு வாழ் மக்களுக்குப் பெருமையே.
இருந்தும், முதலமைச்சரின் தனிப்பட்ட ரீதியிலுள்ள காழ்ப்புணர்வுகளை திணிப்பதற்காக சில அரசியல்வாதிகள் அவரது சேவைகளைக் கொச்சைப்படுத்தும் முயற்சிகளை ஊடகங்களை தன் வசப்படுத்திச்செய்து வருவதை நாம் கண்கூடாகக்கண்டு வருகிறோம். ஆனால், அதுவெல்லாம் கிழக்கு மக்களிடம் பழிக்காதென்பதை அவர்கள் அறியாமலிருப்பது நகைச்சுவையான விடயமே.
தற்கால சூழ்நிலையில் முதலமைச்சரின் செயற்பாடுகள் எம் சமூகத்துக்கும், எம் கட்சிக்கும் பாரிய நற்பயனைத் தந்துள்ளது. எதிர்வரும் வருடம் நடைபெறவிருக்கும் மாகாண சபைத் தேர்தலிலும் முதலமைச்சர் நசீர் ஹாபீஸ் அவர்களை நாம் தேர்ந்தெடுப்பதன் மூலம், கிழக்கு மாகாண அனைத்தின மக்களும் பயன்பெறுவதோடு, எமது மாகாணத்தையும் அனைத்துத்துறையிலும் வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியுமென்பதே எனது ஒருமித்த கருத்தாகும்.
0 comments: