Sunday, October 2, 2016

கி.மா. மாகாணசபை உறுப்பினர் ஒருவரால் கல்விப்பணிப்பாளர் அவமதிப்பு.

(Muhajireen SI)
............................................................
...........................................
நேற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் நடை பெற்ற அதி தீவிர பிரதேச வாத நிகழ்வு பற்றி பேசும் போது அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை. காரணம் நாம் வளர்த்த கடா நமது மார்பிலே பாய்ந்தது. மாகாண சபை உறுப்பினர் சுபைர் ஹாஜியார் இந்த நாமம்
ஏறாவுரை விட நமக்கு நன்கு பரிச்சயமான பெயர்.இவர் வலயக்கல்விப்பணிப்பாளர் அல் ஹாஜ் சேகு அலி சேர் அவர்களை உடனடியாக வெளியேரும் படி கல்வி வலயத்திற்குள் அத்து மீறி நுழைந்து அடாவடித்தனம் செய்திருக்கிறார்.காரணம் ஏறாவுரைச் சேர்ந்த ஒருவர் அங்கு வெய்ட்டிங் லிஸ்ட்டில் உள்ளார். தற்போது சேகு அலி சேர் அவர்களுக்கு தனது சேவைக்காலத்திற்கு மேலதிகமாக ஆறு மாத கால சேவை நீடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
இதை தாங்கிக் கொள்ள முடியாத ஏறாவுர் மேதாவிகள் சிலர் சுபைர் ஹாஜியாரை வைத்து அச்சுறுத்தல் விடுத்திருக்கின
்றனர்.
.
இந்த அச்சுறுத்தலை வேறு யார் வேண்டுமானாலும் விடுத்திருக்கலாம். ஆனால் சுபைர் ஹாஜியார் செய்தது உண்ட வீட்டுக்கு இரன்டகம் செய்தததைப் போன்றது. ஏறாவுரிலே சுபைர் ஹாஜி என்றால் யார் என்று கேட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் மாகாண சபையில் சுகாதார அமைச்சராக வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்தோம்.இதை யார் வேண்டுமானாலும் மறக்கலாம் சுபைர் ஹாஜியார் மட்டும் மறக்கக்கூடாது. அரசியல் செய்வதற்கு ஆயிரம் வழிகள் இருக்கு அதற்காக எங்களுடைய கல்வியலாளர் ஒருவரை தரம்தாழ்த்திப் பேசி அதிலே நின்று கொன்டு அரசியலுக்கு அத்திவாரம் இடுவது உங்களுடைய வங்ரோத்து அரசியலை நீங்களே பறைசாற்றுவற்குச் சமம்.
.
இந்த வலயம் எப்படி வந்தது என்று உங்களுக்குத் தெரியும். இதில் இத்தனை காலமும் யார் பணிப்பாளராக இருந்தார் என்றும் தெரியும். அந்த பணிப்பாளர் தனது சேவைக்காலத்தை விட எத்தனை ஆண்டுகள் கூடுதலாக இருந்தார் என்றும் தெரியும்.இதனால் பாதிக்கப்பட்வர் இப்போதுள்ள பணிப்பாளர் என்றும் தெரியும். இப்படி எல்லாம் தெரிந்திருந்தும் ஒரு ஆறு மாத கால சேவை நீடிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கதவுக்கு காலால் அடித்திருக்கின்றீர்கள் என்றால் உங்களது மனது எந்த அளவுக்கு துவேசத்துடன் இருந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம்?
.
உண்மையில் இந்த வலயம் எங்களுக்கு எந்த பிரயோசனத்தையும் தரவில்லை. மாறாக ஏறாவுர் மக்களே அதனை அனுபவித்தனர். இப்படி இருந்தும் உங்களுக்காக நாம் இத்தனை உதவியையும் செய்தும் கொஞ்சம் கூட நன்றி இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறீர்.
அவமானப்படுத்தப்பட்டது சேகு அலியை அல்ல!எங்களது பிரதேசத்தை. இது நீங்கள் செய்த வரலாற்றுத் தவறு. இந்த செயற்பாடுகளினாள் உங்களுக்கு அரசியல் செல்வாக்கு ஏறாவுரிலே கூடியிருக்கும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் ஒரு அரசியல் அறிவிலி. ஆனால் உங்கள் மீது நாங்கள் வைத்திருந்த மதிப்பும், மரியாதையும் இப்போது இல்லாமலே போய்விட்டது.
உங்களுக்கு இறுதியாக சொல்வது"தண்ணீரில் மூழ்கப் போகும் ஒருவன் சிறு துரும்பைப்பிடித்தாவது கரையேர முயற்சி செய்வான்.
"அது போல் நீங்களும் பிரதேச வாதத்தை துாண்டி அரசியலில் நிலைத்திருக்கப் பார்க்கிறீர் அது முடியாது. காலம் உங்களுக்கு பதில் சொல்லும்.
.
இனியும் எங்களுக்கு அந்த வலயமும் தேவை இல்லை, ஏறாவுரும் தேவையில்லை. புதிய வலயத்திற்கான அத்திவாரக்கல்லை நீங்களே முதலில் வைத்திருக்கிறீர
்.எப்படியும் கட்டி முடிப்போம். இன்ஷா அல்லாஹ்


SHARE THIS

Author:

0 comments: