Saturday, September 3, 2016

ஆண்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு....!!!!!!!


------------------------------------------------------------
-------------------------------------------------------------
நீங்கள் வீட்டிலிருந்து வெளியே
செல்லும் பொழுது இரண்டு
வகையான பெண்களை பார்ப்பீர்கள்
முதல் வகையினர் – குர்ஆன்
சொல்லும் " எகிப்து நாட்டு
மன்னரின் மனைவிக்கு இருந்த
நோய் இவர்களுக்கு
பிடித்திருக்கும். தன்னை நன்றாக
அலங்கரித்து கொண்டு, மணம்
பூசிக் கொண்டு இறுக்கமான
ஆடைகளுடன் வருவார்கள்.
அவர்களின் நிலை, "என்னருகே
வாரும்" என்பதை போன்று
இருக்கும்.
இரண்டாம் வகையினர் – தங்களை
முழுமையாக மறைத்துக்
கொண்டு பார்வையிலும்
நடையிலும் நாணம் மிக்கவர்களாக
தங்களின் தேவைகளை
நிறைவேற்றுவதற்கு நிர்பந்தத்தின்
காரணமாக வெளியே வருபவர்கள்.
அவர்களின் நிலைமை ஷுஐப் நபி
அவர்களின் மகள்கள் சொன்னது போல
"இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டிக்
விட்டு) விலகும் வரை நாங்கள்
எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர்
புகட்ட முடியாது - மேலும்
எங்கள் தந்தை மிகவும் வயது
முதிர்ந்தவர்" என்பதை போல
அவர்களின் நிலைமை இருக்கும்.
முதல் வகை பெண்களை கண்டால்
நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் நடந்துக் கொண்டது போல
நடந்துக் கொள்.
உன் பார்வையை தாழ்த்திக் கொள்.
"மஆதல்லாஹ் – அல்லாஹ் பாது
காப்பானாக" என்று சொல்.
இரண்டாவது வகை பெண்களை
சந்தித்தால் மூஸா
அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நடந்துக்
கொண்டது போல நடந்துக் கொள்.
மூஸா நபி, மிகுந்த
மரியாதையுடன் அவர்கள் அருகே
சென்றார்
அவர்களின் ஆடுகளுக்கு தண்ணீர்
புகட்டினார் . பிறகு தான்
தங்கியிருந்த இடத்திற்கு திரும்பி
விட்டார்.
.மூஸா நபியை போன்றே எந்த
உள்நோக்கமும் இல்லாமல் இத்தகைய
பெண்களுக்கு அவர்களின் தேவை
நிறைவேற உதவி செய்.
யூஸுஃப் நபியுடைய ஒழுக்கம்
அவரை எகிப்து நாட்டின் அரச
பீடத்தில் அமர செய்தது.
மூஸா நபியின் பெருந்தன்மை
அவர்களுக்கு நல்ல மனைவியை
அமைத்து தந்தது.
யா அல்லாஹ்! நாங்கள்
ஒழுக்கத்துடன் வாழ தவ்ஃபீக்
செய்வாயாக!
எங்கள் முஸ்லிமான பெண்களை
பாதுகாப்பாயாக!-------
-அரபி இணைய தளத்திலிருந்து
கணியூர் நாஜி


SHARE THIS

Author:

0 comments: