Thursday, March 17, 2016

மு.கா தேசிய மாநாட்டில் இளைஞர்களின் பங்குபற்றுதலின் அவசியம் ஏன்?

தகவல்-யாஸிர் அரபாத்(கல்குடா)

அஸ்ஸலாமு அழைக்கும்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு 19/03/2016ல் பாலமுனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் நாட்டின் ஜனாதிபதி கௌரவ மைத்திரி பால சிரிசேன, பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் கௌரவ சம்பந்தன் ஐயா உட்பட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள்,அமைச்சர்கள். வெளிநாட்டு பிரமுகர்கள்,தூதுவர்கள் என பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தற்போது நாட்டில் புதிய அரசியல் யாப்பு வரைவதற்கான ஏற்பாடுகள் முன்னேடுக்கப்பட்டு வருகிறது. அத்தோடு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத போக்கு சில மத குழுக்களிடம் காணப்படுகிறது இவ்வாரான நிலமையில்தான் இம் மாநாட்டை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம் இந்த சந்தர்பத்தை நல்ல முறையில் பயன்படுத்தி முஸ்லிம்களின் உரிமைகளையும்,அபிலாசைகளையும் நாட்டிற்கும்,சர்வதேசத்திற்கும் எடுத்துச் சொல்லவேண்டி இருக்கிறது. இந்த தார்மீக பொறுப்பை முஸ்லிம்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற, தேசியத்திலும்,சர்வதேசத்திலும் முஸ்லிம்களின் குரலாக விளங்குகின்ற சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸூம் அதன் தலைமையும் பல தடைகளுக்கு மத்தியில் காத்திரமாக பணிசெய்து முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு வாய்ப்பாக இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்திருக்கார்கள் இதில் ஏனையே கட்சி முஸ்லிம் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது இந்த அழைப்பை அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு அப்பால் முஸ்லிம் சமூகம் என்ற அடிப்படையிலும் முஸ்லிம் கட்சிகளின் கூட்டுக்கு ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்திக்கொள்ள அவர்கள் முன்வரவேண்டும்.
அதே போன்று முஸ்லிம் சமூகமாகிய நாம் நமது பலத்தையும்,ஒற்றுமையையும் இந்த நாட்டிற்கும்,சர்வதேசத்திற்கும் நிருபிக்க வேண்டும் அதற்கு  ஒரு வாய்ப்பாக கட்சி பேதங்களை மறந்து ஒரே உம்மத் என்ற அடிப்படையில் கலந்துகொள்ளவேண்டும். குறிப்பாக இம் மாநாட்டில் இளைஞர்கள் அதிகளவில் கலந்து கொள்ளவேண்டும் அவ்வாறு கலந்துகொள்வதன் ஊடாக நமது சமூகத்தின் உரிமைகள்.அபிலாசைகள் என்பவற்றை பெறுவதற்காக கடந்த காலங்களில் முன்னேடுக்கப்பட்ட முன்னேடுப்புகள் அதற்காக செய்யப் பட்ட தியாகங்கள் அதனூடாக அடைந்த அடைவுகள் எதிர்காலத்தில் இதை முன்னேடுப்பதற்கான வழிவகைகள் என்பவற்றை அறிந்து இளைஞர்களாகிய நாமும் அதன் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட வாய்பாக அமையும்.
எனவே அனைவரையும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது தேசிய மாநாட்டில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம..
       


SHARE THIS

Author:

0 comments: