Thursday, January 21, 2016

ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இயக்கத்தின் வழி கெட்ட கொள்கைகள்.

ஹிஸ்புத் தஹ்ரீர்: ஓர் இஸ்லாமிய நோக்கு (5)

ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இயக்கத்தின் வழி கெட்ட கொள்கைகளையும் நெறிபிறழ்ந்த போக்குகளையும் இத்தொடரினூடாக நாம் நோக்கி வருகிறோம். இப்போது ஹிஸ்புத் தஹ்ரீர் இயக்கம் எவ்வாறு வழிகெட்ட கொள்கைகளின் கூட்டுக் கலவையாக, முழு வடிவமாக இருக்கின்றது என்பதை நோக்குவோம்.
நபி (ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்துக்கு வழிகாட்டிகளாக வஹியின் இரு வடிவங்களான அல்குர்ஆனையும் அஸ்ஸுன்னாவைவும் விட்டுச் சென்றதன் பின்னர் முஸ்லிம்களில் பல குழப்பவாதிகளும் வழிகெட்ட சிந்தனையாளர்களும் தோன்றினர். பல கொள்கைக் குழப்பங்களை தோற்றுவித்து சமூகத்தை நரகின் பால் அழைத்தனர்.
இத்தகைய வழிகேடர்களுல் மிக மோசமானவர்களாக:
1-ஜஹம் பின் ஸப்வான்:
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றான்டில் குராஸான் பகுதியில் தோண்றிய இந்த வழி கேடரையும் அவரது விபரீத நச்சுக்கருத்துகளையும் அப்துல் காஹிர் அல் பக்தாதி அவர்கள் தனது அல்பர்கு பைனல் பிரக் என்ற பிரபல்யமான நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
"ஜஹமிய்யாக்கள் எனும் கூட்டம் ஜஹம் பின் ஸப்வான் என்பவனைப் பின் தொடர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த ஜஹம் மனிதர்களுக்கு தேர்வுச் சுதந்திரமும் சக்தியும் இல்லை என்று மறுத்ததுடன் சுவனம் நரகம் என்பன நிரந்தரமானதல்ல அவைகள் அழிந்து விடும் எனவும் நம்பினான் அத்துடன் இறைவிசுவாசம் (ஈமான்) என்பது அல்லாஹ்வை அறிவது மட்டும்தான் என்றும் நிராகரிப்பு (குப்ர்) என்பது அல்லாஹ்வை அறியாமல் இருப்பது மட்டும்தான் எனவும் கருதினான்.அல்லாஹ்வின் அறிவு புதிதாகத் தோன்றியது என்ற கருத்தை கொண்டிருந்த இவன் அல்லாஹ் ஜீவன் உள்ளவன் நாட்டம் உள்ளவன் அறிவு உள்ளவன் என்ற பண்புகளையும் மறுத்தான்.. அத்துடன் அல்குர் ஆன் படைக்கப்பட்டது என்ற கருத்தையும் விதைத்தான்.....
இவன் காபிர் (இறை நிராகரிப்பாளன்) என்பதில் சமூகத்தின் நாமும் முஸ்லிம் சமூகத்தின் பிரிவுகளும் கருத்தொற்றுமை கொண்டுள்ளோம்."
(அல்பர்கு பைனல் பிரக்: பாடம் ஜஹமிய்யாக்கள் பக்கம் 78)
2-கைலான் அத்திமிஷ்கி:
டமஸ்கஸ் நகரில் பிறந்த இவர் மஃபத் அல் ஜஹனி என்பவருக்குப் பிறகு கழா கத்ரை மறுத்தவனாக இஸ்லாமிய வரலாற்றில் அறியப்படுகிறான்
.இதன் காரனமாக ஹிஷாம் பின் அப்துல் மலிக்கின் காலத்தில் சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டான்.
இது தொடர்பில் அப்துல் காஹிர் அல் பக்தாதி அவர்கள் தனது அல்பர்கு பைனல் பிரக் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
"பின்பு நபித்தோழர்களின் பிந்திய காலத்தில் "கத்ர்" (அல்லாஹ்வின் முன் திட்டம்) தொடர்பில் மஃபத் அல் ஜுஹனி, கைலான் அத்திமிஷ்கி, அல் ஜ அத் பின் திர்ஹம் ஆகியோர் காரனமாக கருத்து முரண்பாடு தோன்றியது. நபித்தோழர்களில் பிந்திய காலத்தில் வாழ்ந்த இப்னு உமர் (ரழி), ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரழி), அபூ ஹுரைரா (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), அனஸ் பின் மாலிக் (ரழி) ஆகியோர் இந்த (கத்ரை மறுக்கும் கொள்கைக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை எனப் பிரகடனம் செய்ததுடன் இவர்களுக்கு ஸலாம் சொல்ல வேண்டாம் என்றும் இவர்களது ஜனாஸாக்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் இவர்களது நோயாளிகளை நோய் விசாரிக்கச் செல்ல வேண்டாம் என்றும் உபதேசம் செய்தனர்."
(அல்பர்கு பைனல் பிரக்: பக்கம் 06)
3-வாஸில் பின் அதாஃ:
இஸ்லாமிய சமூகத்தில் பல கொள்கைக் குழப்பங்களுக்குக் காரனமாக இருந்த முஃதஸிலாக்கள் என்ற பிரிவைத் தோற்றுவித்தவர் இந்த வாஸில் ஆவார்.
கத்ரை மறுப்பது, பாவிகளை முஸ்லிம்களும் இல்லை காபிர்களும் இல்லை என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்தது!
!, பெரும் பாவம் செய்த முஸ்லிம்கள் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்ற கருத்தைப் பரப்பியது...நபி
த்தோழர்களுக்கிடையே ஆட்சி விடயங்களில் ஏற்பட்ட சர்ச்சைகளில் ஒரு கூட்டத்தாரை பாவிகள் என்று தீர்ப்பு வழங்கியது என இவர்களது விபரீதக் கருத்துகள் காணப்படுகின்றன.
(அல்பர்கு பைனல் பிரக்: பக்கம் (40-41)
மேற் குறித்த நபர்கள் வழிகேடர்கள் என்பதும் அவர்களது இக்கொள்கைகள் வழிகேடான கொள்கைகள் என்பதும் ஷரீஆ துறை சார்ந்த மாணவர்கள் கூட அறிந்து வைத்துள்ள அப்பட்டமான எளிய உன்மையாகும்.ஆனால் இஸ்லாமிய ஆட்சியை கட்டியெழுப்பப் போவதாக கோஷமிடும் ஹி ஸ்புத் தஹ்ரீர் இயக்கமோ இது தொடர்பில் முற்றிலும் மாற்றமான, வழிகேடுகள் அனைத்தையும் ஒன்றினைத்த வழிகேட்டான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.
இதோ ஹிஸ்புத் தஹ்ரீர் இயக்க ஸ்தாபகர் தகிய்யுத்தீன் நப்ஹானி தனது ( ﺍﻟﺸﺨﺼﻴﺎﺕ ﺍﻹﺳﻼﻣﻴﺔ - ﺍﻟﺠﺰﺀ ﺍﻷﻭﻝ ) "இஸ்லாமியப் பிரமுகர்கள்" என்ற நூலின் முதல் பாகத்தில் 125 ம் பக்கத்தில் எழுதியுள்ளதைக் கவனியுங்கள்:
"இறையியல் தொடர்புடைய தத்துவப் பிரச்சனைகள் முஸ்லிம் சமூகத்தில் ஊடுருவியபோது உமையாக்களின் இறுதிக் காலகட்டத்திலும் அப்பாஸியாக்களின் ஆரம்பகால கட்டத்திலும் ஹஸன் அல் பஸரி, கைலான் அத்திமிஷ்கி, ஜஹம் பின் ஸப்வான் ஆகிய அறிஞர்கள் சிலர் பல்வேறு இறை தத்துவ விடயங்களை ஆராய முற்பட்டனர்.பின்பு அரிஸ்டோடிலின் தர்க்கத்தையும் சில மொழி பெயர்க்கப்பட்ட தத்துவ நூற்களையும் கற்றறிந்த அறிஞர்கள் தோன்றினார்கள் .இதனால் இறைதத்துவ விடயங்களில் ஆய்வுப் பரப்பு விரிவடைந்தது இவர்கள் "இல்முல் கலாம்" என்றறியப்பதும் துறையில் ஆய்வுகள் மேற்கொண்டனர். இத்தகையவர்களுள் வாஸில் பின் அதாஃ. அம்ர் பின் அபீத், அபு ஹுதைப்ஃ அல்லாஃப், நழ்ழாம் போன்றவர்கள் உள்ளனர்.
நாம் முன்னர் விளக்கிய வழிகேடர்களை அறிஞர்கள் எனப் புக்ழந்துரைத்ததுடன் நப்ஹானி நின்றுவிடவில்லை
... மாறாக அதே பக்கத்தில் அவர்கள் தொடர்பாக பின்வருமாறும் எழுதுகிறார்:
"இவர்களது நம்பிக்கைகள் வேறுபட்டிருந்தாலும் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டில் இவர்களிடம் இருந்து எந்த ஒரு நெறி பிறழ்வும் ஏற்படவில்லை.இவர்கள் அனைவரும் முஸ்லிம்களே இஸ்லாத்தைப் பாதுகாக்கும் பணியையே இவர்கள் செய்தனர்"
அதாவது மேற்படி நாம் விளக்கிய வழிகேடர்களான ஜஹம், கைலான்,வாஸில் என்பவர்கள் அறிஞர்கள் என்றும் அவர்களது :
1-"கத்ர்" ரை மறுக்கும் சித்தாந்தம்
2-மனிதர்களுக்கு தேர்வுச் சுதந்திரமும் சக்தியும் இல்லை என்று மறுக்கும் நிலைப்பாடு
3-சுவனம் நரகம் என்பன நிரந்தரமானதல்ல அவைகள் அழிந்து விடும் எனும் கருத்து
4-இறைவிசுவாசம் (ஈமான்) என்பது அல்லாஹ்வை அறிவது மட்டும்தான் என்றும் நிராகரிப்பு (குப்ர்) என்பது
அல்லாஹ்வை அறியாமல் இருப்பது மட்டும்தான் என்ற கருத்து
5-அல்லாஹ்வின் அறிவு புதிதாகத் தோன்றியது என்ற கருத்து
6-அல்லாஹ் ஜீவன் உள்ளவன் நாட்டம் உள்ளவன் அறிவு உள்ளவன் என்ற பண்புகளை மறுக்கும் நிலை
7-அல்குர் ஆன் படைக்கப்பட்டது என்ற முடிவு
8-பாவிகளை முஸ்லிம்களும் இல்லை காபிர்களும் இல்லை என்று கூறும் தத்துவம்
9-பெரும் பாவம் செய்த முஸ்லிம்கள் நரகத்தில் நிரந்தரமாக இருப்பார்கள் என்ற விளக்கம்
10-நபித்தோழர்களுக்கிடையே ஆட்சி விடயங்களில் ஏற்பட்ட சர்ச்சைகளில் ஒரு கூட்டத்தாரை பாவிகள் என்ற தீர்ப்பு
இவை அனைத்தும் வழிகேடான கருத்துகள் இல்லை என நப்ஹானி உறுதி செய்வதுடன் இந்த நச்சுக் கருத்துகளைக் கூறிய வழிகேடர்களை இஸ்லாத்தைப் பாதுகாத்தவர்கள் என்றும் கூறுகிறார்.!! (நஊது பில்லாஹ்)
எனவே ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற இவ்வியக்கம் வரலாற்றில் தோண்றிய ஒரு வழிகெட்ட கொள்கை என்பதை விடவும் வழிகெட்ட கொள்கைகளின் ஒரு கூட்டுக் கலவை ,முழு வடிவம் என்பது எதன் மூலம் எம் அனைவருக்கும் நன்கு புரிகிறது.
அத்துடன் இவ்வியக்கம் உருவாக்க விரும்பும் "கிலாபத்" ஆட்சிமுறை என்பது தூய இஸ்லாமிய போதனைகளைக் கடைப்பிடிக்கும் ஆட்சி முறை அல்ல.. மாறாக வரலாற்றில் தோன்றிய வழிகேடுகளை உயிர்ப்பிக்கும் கடைப்ப்பிடிக்கு
ம் "இஸ்லாமிய விரோத ஆட்சி முறை"யையே என்பதும் எமக்குத் தெரிகிறது.
இன்ஷா அல்லாஹ்) தொடரும்........ முன்னைய பதிவுகள் எனது முகப்புத்தக டைம்லைனில் உள்ளது. தேவையானவர்கள் சென்று பார்வையிடவும் அல்லது என்னை தொடர்பு கொள்ளவும்

Aathil Ahamadh KS


I THINK , THIS IS VERY USEFUL FOR OUR BROTHERS TO GET TO KNOW  ABOUT SOME OTHER ANTI ISLAMIC THOUGHTS WHICH ARE STILL IN OUR COMMUNITY.
NOWDAYS, ERAVUR IS HAVING SUCH THOUGHTFUL MOVEMENTS.

LAST YEAR , THEY CONDUCTED A LEADERSHIP PROGRAMME FOR KALKUDAH STUDENTS.

SHARING AMONG OUR BROTHERS IS NECESSARY.


SHARE THIS

Author:

0 comments: