நேற்று (2015.11.20) இணைய நாளிதழ்களில் எனது ஆறாவது கட்டுரை பிரசுரமாகியது. முதல் ஐந்தும் அரசியல் தொடர்பானது. ஆறாவது கட்டுரை ஷீஆக்கள் தொடர்பானது . சிறுவயது தொட்டு அச்சு ஊடகங்களுக்கு ஆக்கங்களை அனுப்புவதில் ஆர்வம் கொண்ட நான் , காலத்தின் தேவைக்கேற்ப இணைய ஊடகங்களை நாட வேண்டி ஏற்பட்டது. கடந்த தேர்தல் காலத்தில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் கையாட்களினால் அப்பாவி இளைஞன் ஒருவரும் அவருடைய மனைவி மற்றும் பிஞ்சுக் குழந்தை ஆகியோர் தாக்கப்பட்டதும் அதனை உள்ளூர் ஊடகவியலாளர்கள் கண்டும் காணாதது போல் இருந்ததை பார்த்து எனது உள்ளம் பதறியது. இதனை ஊடகங்களுக்கு எத்திவைப்பது கடமை என உணர்ந்து குறித்த விடயத்தை இணைய நாளிதழ்களுக்கு அனுப்பி வைத்தேன். கண்டியை சேர்ந்த #மடத்தனத்தின் தளம் எனும் பெயரில் இயங்கும் இணையத்தளம் அதனை பிரசுரிக்க மறுத்தது. காரணம் அது #வில்பத்து தலைவரின் கூஜா தூக்கி என்பதனால் ஆகும்.(எமது உள்ளூர் அரசியல்வாதி வில்பத்து தலைவரின் கட்சியை சேர்ந்தவர்) . ஆனால் importmirror தைரியமாக முன்வந்து பிரசரித்தது. அந்தவகையில் எனது இணைய ஆக்கம் வெளிவிடப்பட்டது. ( குறிப்பு : மேற்கூறிய சம்பவத்தின் குற்றவாளி பின்னர் கைது செய்யப்பட்டார்.)
அதன்பின்னர் எனது கட்டுரைகள் தொடர்ச்சியாக #makkal seithi ,
#makkal nanpan, #kalkudah nation, #zajil news , #vanni express, #courier boys #srilanka muslims , and #sonakar போன்ற இணைய தளங்களில் வெளிவந்தன. அதிலும் குறிப்பாக kalkudah nation ,courier boys and zajil news ஆகியவற்றின் இயக்குனர்கள் என்னை ஊக்கப்படுத்தியதை இங்கு நினைவு கூறுகின்றேன்.
0 comments: