கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபை எல்லைக்குட்பட்டு வாழும் சுமார் 40 வீதமான முஸ்லிம்களுக்கு நான்கு வட்டாரங்கள் மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதை ஆட்சேபித்து வட்டார எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்= கோறளைப்பற்று பிரதேச சபையின் அதிகார எல்லைக்குள் உள்ளடங்குகின்ற பிரதேசங்கள் 14 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு 14 பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வண்ணம் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது= இப்பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட முஸ்லிம் பிரதேசங்கள் 04 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை முஸ்லிம், பிறைந்துரைச்சேனை வடக்கு, பிறைந்துரைச்சேனை தெற்கு, செம்மண்ணோடை ஆகிய பெயர்களில் இந்நான்கு வட்டாரங்களும் பிரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நான்கு வட்டாரங்களும் ஏழு கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிப் பிரிக்கப்பட்டுள்ளது. 25000 அதிகமான முஸ்லிம்கள் ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் மிக நெரிசலாக வாழ்ந்து வருகின்றனர். இவ் 07 கிராம சேவகர் பிரிவுகளிலும் சுமார் 16000 வாக்காளர்கள் உள்ளனர். 16000 முஸ்லிம் வாக்களர்களுக்கு நான்கு வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ள அதே வேளை, 11000 வாக்குகளை கொண்ட வாகரைப் பிரதேச சபைக்கு 10 வட்டாரங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோறளைப்பற்று மத்தி பிரதேச சபைக்கான தனியான கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் இத்தருணத்தில், இவ்வட்டார எல்லைப் பிரிப்பு மூலம் அநீதியிழைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மேலும், செம்மண்ணோடை என்ற வட்டாரத்தில் உள்ளடங்கும் கிராமங்களான மாவடிச்சேனை, செம்மண்ணோடை என்பன தனித்துவமான பண்பைக் கொண்டுள்ள வேளையில், இரு பிரதேசங்களையும் ஒன்றிணைத்துள்ளமை காலத்திற்குப் பொருத்தமற்றது என்பதுடன், வாழைச்சேனையின் முக்கிய பகுதி பிறைந்துரைச்சேனையுடன் இணைக்கப்பட்டு பிறைந்துரைச்சேனை வடக்கு என்ற வட்டாரமும் உருவாக்கப்பட்டுள்ளமை முரண்நகையை தோற்றுவித்துள்ளன. கடந்த காலங்களில் பத்து உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்ற சந்தர்ப்பங்களில் நான்கு முஸ்லிம் உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வட்டார எல்லைப் பிரிப்பின் போதும் குறித்த நான்று வட்டாரங்களிலிருந்தும் நான்கு உறுப்பினர்களையே தெரிவு செய்யக்கூடிய நிலையுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. எனவே, வட்டாரப் பிரிப்பில் எவ்வாறு சாதி, இன வகைப்பாடுகள் கைக்கொள்ளப்படுகின்றதோ அதே போன்று, பிரதேச மக்களின் தனித்துவம் கைக்கொள்ளப்படல் என்பதை தாங்கள் வலியுறுத்துகின்றோம். இதற்கமையவே வாழைச்சேனை முஸ்லிம் பகுதிக்கு மூன்று வட்டாரங்களும், பிறைந்துரைச்சேனைக்கு இரண்டு வட்டாரங்களும், மாவடிச்சேனை தனி வட்டாரமாகவும், செம்மண்ணோடை தனி வட்டாரமாகவும் வகைப்படுத்துமாறு கோரிக்கை முன்வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டது. அதாவது, தற்போது கல்குடா மக்களின் மனதை வென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதிக்கு தலைமை தாங்கும் கணக்கறிஞர் HMM.ரியாழ் அவர்கள் இவ்விடயத்தில் அதிக கரிசணையுடன் செயற்படுவதால், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை அரசியல் உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளதை சகலரும் சுட்டிக்காட்டினர். கோறளைப்பற்று வாழைச்சேனைப் பிரதேச சபையில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை இதுவரை காலமும் எந்தவொரு அரசியல் தலைமையும் கவனத்திலெடுக்காமல் செயற்பட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தமது தலையாய கடமையாக இப்பிரச்சினையை இனங்கண்டு அதற்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வந்திருக்கும் கல்குடா முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர்பீட உறுப்பினர் கணக்கறிஞர் HMM.ரியாழ் அவர்கள் இச்சமூகத்தின் மீது கொண்ட பற்றுதலை இந்நிகழ்வு பறைசாற்றுகின்றது. எதிர்வரம் 20ம் திகதி கொழும்பு சென்று வட்டார நிர்ணய ஆணைக்குழுவைச் சந்தித்து தனது ஆட்சேபனை மனுவை கையளித்து உரிய தீர்வை பெற்றுக்கொள்ள கணக்கறிஞர் HMM.ரியாழ் அவர்களின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பது இங்கு குறிப்படத்தக்கதாகும்.
0 comments: