Friday, November 6, 2015

கல்குடாவின் மகன் கணக்கறிஞர் றியாழின் தேசியப்பட்டியல் நியமனத்தை முஸ்லிம் காங்கிரஸ் உறுதி செய்யுமா....?


அரசியல் அரங்கில் வியப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கும் ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியலில் ஒன்று கடந்த பொதுத் தேர்தலில் கல்குடா தேர்தல் தொகுதியில் களமிறங்கி தோல்வியுற்றும் அநேகரின் மனங்களில் இன்று வரை நீ்ங்காத இடம் பிடித்துள்ள கணக்கறிஞர் றியாழ் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து எம்மால் அறிய முடிகின்றது
ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதுகெலும்பாக திகழ்கின்ற கல்குடா பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த கணக்கறிஞர் றியாழ் அவர்களின் வாழ்க்கையை அரசியலுக்கு அப்பால் நின்று பார்ப்போமேயானால் மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியை பின் தொடர்ந்த சகோதரர் றியாழ் அவர்கள் ஐந்தம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து கொழும்பு றோயல் கல்லுரிக்கான நுழைவுத் தேர்வு பரீட்சையிலும் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று தனது ஊருக்குபெறுமை சேர்த்து தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பின்பு தனது கல்வியை அங்கு உயர் கல்வி வரை பின் தொடர்ந்தார் அதன் பிற்பாடு தனது இளம் வயதான இருபத்தி நான்கு வயதிலயே பட்டயக் கணக்கறிஞராக தேர்ச்சி பெற்றார் அதுமட்டுமன்றி முகாமைத்துவ கணக்காளராகவும் வணிக முகாமைத்துவத்தில் முதுமானியாகவும் கற்றுத்தேர்ந்தார்
இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் இயற்கையிலயே அனைவருடனும் சுமூகமாக பழகக் கூடிய சகோதரர் றியாழ் அவர்கள் பதவியை அமானிதமாக கருதி அதற்கமையே மக்களுக்கு சேவைகள் செய்து அதற்கான பிரதிகூலத்தை எதிர்பார்காமல் எழிமையாக செயற்படக் கூடியவர்தான் சகோதரர் றியாழ் ஆவார் அதனை கடந்த காலத்தில் அவருடன் தேர்தல் களத்தில் நின்று வேளை செய்த அநேகமான சகோதரர்கள் அறிந்து வைத்து இருக்கின்றார்கள்
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பதினாறு நாட்களே களத்தில் நின்று பிரச்சாரம் செய்ததன் மூலம் சிரேஷ்ட அமைச்சர் அமீர் அலி அவர்களையே ஆட்டம் காண வைத்து முஸ்லிம் காங்கிரஸின் எழுச்சியை தனது சொந்த மண்ணில் ஏற்படுத்தினார் அதன் மூலம் திட்டங்களை வகுத்து அதனை அடைவதற்காக காய் நகர்த்துவதில் இவர் கெட்டிக்காரராக அநேக மக்ககளால் இன்று அடயாளப்படுத்தப்பட்டுள்ளார் என்பது சுட்டிக் காட்டப்பட வேண்டிய விடயமே ஆகும்
அவருடைய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் மூச்சுக்கு ஒரு முறை கூறியதெல்லாம் கள்ள வாக்குகள் போடக்கூடாது எமது அரசியல் கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் மாற்று சமூகத்தினரால் முன்மாதிரியாக பார்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் நிகழ்த்தியே காணப்பட்டது ஆகவேதான் குறிப்பாக இளைஞசர்கள் மத்தியில் இவரின் பிரச்சாரம் இன்று செல்வாக்குப் பெற்று இருக்கின்றது
நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் அடையாளமான தனது தோற்றத்தின் மூலம் இன்றைய இளைஞர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள சகோதரர் றியாழ் அவர்கள் தேசியப் பட்டியல் மூலம் பாராளு மன்றம் செல்வதன் மூலம் பின்வரும் பல அணுகூலங்கள் பிரதேச தேசிய சர்வதேச ரீதியில் கிடைக்கப் பெறும் என அநே முஸ்லிம்களினாலும்இன்று எதிர்பார்க்கப்படுகின்றது
*கல்குடா பிரதேசத்தில் மட்டு மன்றி ஏறாவூர் காத்தான்குடி பிரதேசங்களிலும் ஷீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எழுச்சிபெறுவதுடன் பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்படும்
*மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் வரும் காலங்களில் எந்தவீத கட்சிகளுடனும் ஒன்று சேராமல் தனது ஆசனத்தை உறுதி செய்து கொள்ள முடியும்
*இன்றைய இளைஞர்களை முஸ்லிம் காங்கிரஸுக்குள் அணிதிரட்டுவதன் ஊடாக பாரிய எதிர் கால சந்ததியினரை உருவாக்க முடியும்
*பாரிய செயற்திட்டங்களை தயாரிப்பதில் தேர்ச்சி பெற்ற சகோதரர் றியாழ் அவர்களை வைத்து நாடளாவிய ரீதியில் பல்வேறு செயற்திட்டங்களை வெகு இலகுவாக முன்னெடுக்க முடியும்
*சர்வதேச ரீதியாக பல நாடுகளின் தொடர்புகளின் மூலம் எமது கல்குடா பிரதேசத்தை மெம்மேலும் அபிவிருத்தி காண வைக்க முடியும்
*கட்சிக்குள் பொருப்பு வாய்ந்த பதவி வழங்கப்படுவதன் மூலம் கட்சியை தேசிய மட்டத்தில் எழுச்சி பெறுவதற்கான வியூகங்களை வகுக்கும் சகோதரர் றியாழ் அவர்களின் மூலம் சர்வதேச மட்டத்திலும் கட்சியை எழுச்சி அடையச் செய்ய முடியும்
இவ்வாறு மும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்று தனது இருபது வருட கால வேளை வாய்ப்பு அனுபவத்தில் பல தேசிய சர்வதேச அரங்குளில் பங்கு பற்றி தனது கருத்துக்களை பறிமாற்றிக் கொண்டு தான் வேளை பாரத்த பல வெளிநாட்டு கொம்பனிகளையே தேசிய சர்வதேச ரீதியில் எழுச்சி பெற வைத்து பல பாராட்டுக்களையும் பெற்ற சகோதர் றியாழ் அவர்களுக்கு தேசிய பட்டியல் வழங்குவதன் மூலம் நிச்சயம் கட்சியும் கல்குடா தொகுதி மக்களும் முற்று முழுதுமான பயனை அடைந்து கொள்வார்கள் என்பதில் எந்த வீத ஆட்சேபனமுமில்லை
அதனை கட்சியின் தலைவரும் கட்சியும் உறுதி செய்யுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம் இன்ஷ அல்லாஹ்


SHARE THIS

Author:

0 comments: