-அபூஉமர் அன்வாரி BA மதனி-
காலத்துக்கு காலம் பரீட்சைகள் நடாத்தப்படுவதும் அதன் பின்னர் சிலர் மகிழ்சியுடன் தன்னை மறப்பதும் இன்னும் சிலர் கவலையில் மூழ்கி எனது வாழ்க்கையே சூனியமயமாகி விட்டது என முடங்கிவிடுவதும் தொடர்கதையாக மாறிவிட்டது,இது இவ்வாறு இருக்க இத்தகைய வகுப்பினர்களை புரிந்து அவர்களை சுற்றியுள்ளவர்கள் எத்தைய நடைமுறைகளை கையாளவேண்டும் என நோக்குவது காலத்தின் தேவை.இச்சில வார்த்தைகள் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பயனுள்ளதாய் அமையும் எனும் நோக்குடன்.
இலங்கை போன்ற நாடுகளில் இடம் பெறக்கூடிய முக்கியமான பரீட்சைகளான புலமை பரிசில்,சாதாரன தரம் உயர்தரம் போன்றவைகளும் இன்னும் ஏறாலமான பரீட்சைகள் அனைத்தையும் பார்க்கும் போது அவை மாணவர்களின் முக்கிய காலகட்டங்களில் இடம் பெறுவதை அவதானிக்கலாம்.இதன் போது அவர்களை சமூகத்துக்கு பயனுடையவர்களாக மாற்றிக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வது சமூகத்தின் அனைவர் மீதும் உள்ள தேவை.
முதலில் பெற்றோர்களாயினும் உறவினர்களாயினும் மாணவர்களது ஏற்றத்தாழ்வுகள்,தகைமைகள்,ஒரே வயதினராக இருப்பினும் அவர்களுக்க்கிடையிலான இடைவெளி என்ன என்பதை அறிந்து அவர்களுக்கு சுமைகளை சுமத்த வேண்டும்.இவ்வாறு செய்யும் போது வெளிப்பாடு நல்லதாக இருக்கும்.மேலும் அவர்களுக்கு இத்தகைய விடயங்களை மேற்கொள்ளும் போது வெற்றி தோழ்விகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனோநிலையை இரு சாராரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளிடமிருந்து வெற்றிகளை மாத்திரம் எதிர்ப்பார்க்க கூடாது.அவ்வாறே பிள்ளைகளும் வாழ்வில் வெற்றிமாத்திரம் தான் உண்டு எனும் தப்பான அபிப்பிராயத்தை விட்டும் நீங்கி கொள்ளவேண்டும்,இதன் படி பெற்றோர்கள் தோழ்வியின் போது பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.தமது பிள்ளைகளை மாத்திரம் தவறு என அவர்களை சாடுவது,கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டுவது,பிறருடன் ஒப்பிட்டு மட்டம் தட்டுவது போன்ற விடயங்களை விட்டும் தவிர்ந்து.பிழை எங்கு என்பதை கண்டறிய வேண்டும்.அதன் பின்னர் அதற்கான தீர்வுதிட்டங்கள் என்ன என்பதை ஆய்ந்த பின் மிகவும் சிறப்பான தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும.இதன் போது சாதக பாதகங்களை கவனத்தில் கொள்ளல் முக்கிய அம்சமாகும்.
பிள்ளைகளுக்கு மிகவும் நெறுக்கமானவர்கள் பெற்றோர்கள் எனவே துன்பத்தின் போதும் இன்பத்தின் போதும் பகிர்ந்து கொள்ளும் நல்லறவுகளாக அவர்களுக்கிடையிலான உறவும் உரைகளும் அமைய வேண்டும்.பிள்ளைகள் மீது தான் விரும்புவதை கட்டாயப்படுத்தி திணிக்கும் போது அவர்களுக்கிடையிலான உறவுகள் பிளவு படுகிறது.இதனால் தீய விளைவுகள் தோன்றும் என்பது நிதர்சனங்கள் உண்மைபடுத்தியுள்ளன.எனவே அவர்களுக்கு தன்னம்பிக்கை,பொறுமை,தைரியம்,முயற்சி ஆகிய வற்றை வளர்ப்பதின் பால் அதிக அக்கரையும் கரிசனையும் காட்ட வேண்டும்.
பரீட்சைகள் மாத்திரம் வாழ்க்கையின் இலக்கு எனும் தப்பான அபிப்பிராயம் நீக்கப்பட்டு தகுதிகளுக்கு ஏற்ப உற்சாகப்படுத்தல் முக்கியமான ஒன்று.இதன் போது அனைத்து துறை சார்ந்த பிரிவினரும் பிரயோசனம் அடைகின்றனர்,பரீட்சையில் எழுதுவதற்கு தாமதமாகிய ஒரு பிள்ளை தோற்றுவிட்டது என கொள்ளமுடியாது அவ்வாறே ஒரு புள்ளியில் குறைந்தவர் தோற்றவர்கள் என கொள்ளாது அவர்களின் பிழையான பகுதியை சீர் செய்ய வேண்டும்,அவ்வாறே பல்கலைக்கழகம் கிடைக்கவில்லை என கல்வியே கிடையாது என நோக்குவது பிழையானது.மாறாக பல்கலைக்கழகம் மட்டுப்படுத்தப்பட்டது என்றால் மட்டுப்படுத்தப்படாத கற்கை முறைகள் பரந்து காணப்படுகிறன எனும் பிரந்த மனப்பான்மை வெளிப்படும் போது சமூகத்துக்கு பாரிய வெற்றியை கொண்டு வரும்.அவ்வாறே புலமை பரிசிலில் தரமான பாடசாலை கிடைக்கவில்லை என உதரித்தள்ளிவிடாது,சாதாரன பாடசாலைகளில் கற்று தரமான சாதனை படைக்க முடியும்.ஒரு பிள்ளை பிறந்தவுடன் நடப்பதில்லை நிலத்தில் பல தடவைகள் விழுந்த பின் நடக்கிறது.அதுவே பரீட்சைகளும் இன்றைய தோழ்வி நாளைய வெற்றி எனும் திடமான உறுதியுடன் பயணத்தை தொடர வேண்டும.இதுவே வாழ்வின் யதார்த்தம் என்பதை புரியும் போது பிரகாசமான எதிர்க்காலம் உண்டு என்பது உண்மை.
0 comments: