Saturday, October 3, 2015

ரிஸ்வி முப்தி தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள்


-Mohamed Muhsi-
அகில இலங்கை உலமா சபைத் தலைவர் அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி புத்தளம் பெரிய பள்ளி ஜும்மாவின் போது தெரிவித்த சில முக்கிய கருத்துக்கள்.!
1. நமக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்பட விட்டுக் கொடுப்பும், பணிவும் மிகவும் அவசியமாகும். வேற்றுமையில் ஒற்றுமை காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
2. பிறர் குறைகளை மூடி மறைப்பதை விடுத்து, அவற்றைத் துருவித் துருவி ஆராய்ந்து, பிறரை இழிவுபடுத்தும், அவமானப்படுத்தும் செயற்பாடுகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
3. ஹராமான விடயங்கள் பற்றி அறிந்து வைத்துள்ளோம். நமக்குள் சண்டை இடுவதும் ஹராம் என்பதிலும் நாம் தெளிவு பெற வேண்டும்.
4. நமது பண்பாடுகளாலும், ஒழுக்க விழுமியங்களாலும் சிறந்த முன்மாதிரிகளை மாற்று மத மக்களுக்கு காண்பிக்க வேண்டும். அதுவே நம்மைப் பற்றி அவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டுள்ள தப்பெண்ணங்கள் களையப்பட காரணமாக அமையும்.
5. இந்த நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதோர் மத்தியில் இஸ்லாத்தின் தூதை எத்தி வைப்பதில் நாம் தவறி இருக்கிறோம். அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.

6. அரசியலில் ஈடுபடுவோர், புத்திஜீவிகள், உலமாக்கள் எல்லோரும் இணைந்து புத்தளத்தை அபிவிருத்தியடைந்த நகரமாக மாற்றியமைக்க வேண்டும்.


SHARE THIS

Author:

0 comments: