Tuesday, September 8, 2015

ஏழு வருட சேவையினை கொண்டாடும் செரன்டிப் மா ஆலை


உள்ளூர் சந்தையில் '7 ஸ்டார்' தரத்தில் கோதுமை மாவினை முதலில் அறிமுகப்படுத்தியதன் ஏழு வருட வெற்றியை Serendib Flour Mills (SFML) அண்மையில் கொண்டாடியது.
டுபாய் Al Ghurair நிறுவனத்தின் ஒரு அங்கமான SFMLஆனது, இலங்கை நுகர்வோருக்கு உயர்தரமான கோதுமை மாவினை உற்பத்தி செய்து, விநியோகிக்கும் நோக்குடன் உள்ளுர் சந்தையில் '7 ஸ்டார்' தரத்தில் தமது கோதுமை மாவினை அறிமுகம் செய்தது. ஏழு வருடங்களில், நிறுவனத்தின் '7 நட்சத்திர' தர மாவானது நம்பகமான உற்பத்தியாக மாறியுள்ளதுடன், தேசத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கியமான பங்கினையும் வகிக்கின்றது.
தூய்மை, புதுமை, தரம், புதியது, நிபுணத்துவமானது , சேவை மற்றும் நம்பிக்கை ஆகிய ஏழு பிரதான விழுமியங்களை உள்ளடக்கியதாக '7 ஸ்டார்' உற்பத்தி திகழ்கின்றது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள மா ஆலையின் ஊடாக, சிக்கலற்ற விநியோகத்தினை செரன்டி மா ஆலைகளால் முன்னெடுக்கக் கூடியதாகவுள்ளது.
இங்கு பாரிய சேமிப்பு வசதிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளையும் சேர்ந்த கப்பல்கள் வருகை தருவதற்கும், அது உயர்தர மாவாக ஆலையில் உற்பத்தி செய்யப்படுவதற்கு ஏதுவாக இருக்கின்றது. உணவு உற்பத்தி துறையில் முப்பது வருடங்களுக்கும் மேற்பட்ட அனுபவத்துடன், நுகர்வோரின் எதிர்பார்ப்புக்களையும் கடந்த உற்பத்திகளை வழங்குவதில் Al Ghurair உணவுகள் பிரபலமடைந்துள்ளன.
தமது வாடிக்கையாளர்களுடன் உறுதியான உறவினை கட்டியெழுப்புவதில் செரன்டிப் மா ஆலைகள் முன்னுரிமை வழங்குகின்றது. அத்துடன், இந்த துறையின் விசேடத் தேவைகளையும் அடையாளம் கண்டுள்ளன. இலங்கையின் All Ceylon Bakery Owners' Association அமைப்பு போன்ற நிறுவனங்களுடன் நெருக்கமாக செயற்படும் SFML, நாடெங்கிலும் பல்வேறு மா உற்பத்திகளில் ஈடுபட்டுள்ளவர்களை இணைத்து தொழில்நுட்ப செயலமர்வுகளை முன்னெடுக்கின்றது.
SFMLஆனது உயர்தர உற்பத்திகளை வழங்குவது மாத்திரமன்றி, உயர் தரங்களையும் பேணுகின்றது. ஆனால், புதிய வகையான மா உற்பத்திகளுக்கான நவீன தொழில்நுட்ப கருவிகளையும் கொண்டிருக்கின்றது. பேக்கறி மா, ரொட்டி மா, வீட்டுத் தேவைக்கான மா, பிஸ்கட் மா, நூடில்ஸ் மா,முழு கோதுமை ஆட்டா மா, உணவு மா மற்றும் ரவை என்பன உள்ளடங்கியதாக B2B உற்பத்திகள் உள்ளன.
இவை 25 கி.கி மற்றும் 50 கி.கி பொதிகளில் கிடைக்கும். சில்லறை வகைகளில் அனைத்து நோக்கத்திற்குமான கோதுமை மா, முழு கோதுமை உணவு மா, மற்றும் ஆட்டா மா போன்ற 1 கி.கி மற்றும் 500 கி பொதிகளில் கிடைக்கின்றன. மேலதிகமாக, ஆட்டா மற்றும் ஏனைய உணவு மா வகைகள் வர்த்தக மற்றும் வீட்டுத் தேவைக்காகவும் வழங்கப்படுகின்றன.
வருடம் முழுவதிலும், வளர்ச்சியை பதிவு செய்து வரும் இந்த நிறுவனம் தமது உயர்தரமான மா உற்பத்திக்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளது. இலங்கை சந்தையை உள்வாங்கிக் கொள்வதற்கான விருப்பத்தினையும் செரன்டிப் மா ஆலைகள் வெளிப்படுத்தி வருகின்றது. 2009ஆம் ஆண்டில், இலங்கை உணவகங்களுக்கு உகந்த தனித்துவமான ரொட்டி மா வகையினை அறிமுகம் செய்தது.
2013ஆம் ஆண்டில் இலங்கையில் முதன் முறையாக விசேட கேக் மாவினை அறிமுகப்படுத்தியது. உலகின் மிகப் பிரபலான உணவு தரச்சான்றிதழ்களை வழங்கும், Bureau Veritasஇனால் ISO 9001:2008, ISO 14001:2004 மற்றும் ISO 22000:2005ஆகிய தரச்சான்றிதழ்களையும் இந்த ஆலை பெற்றுள்ளது. உத்தரவாதமளிக்கப்பட்ட தரத்தினை உறுதி செய்வதற்கான மீள் உறுதியை செரன்டிப் மா ஆலை சான்றிதழ்கள் உறுதி செய்துள்ளன.
இந்த வருடம் நிறுவமானது முகாமைத்துவத்தில் மாற்றத்தை கண்டது. முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி சதாக் அப்துல் காதர், நிறுவனத்தின் தலைவராக புதிய பொறுப்பினை ஏற்றதனால், பிரபலமான சர்வதேச முகாமைத்துவ நிபுணர் கெவின் ஓ. லெரி புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நிறுவனத்தின் ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
வெளியக பங்காளர் உறவுகள் தொடர்பில் சதாக் அப்துல் காதர் மேற்பார்வை செய்யும் அதேவேளை, '7 ஸ்டார்' மற்றும் செரன்டிப் மா ஆலை உற்பத்திகளை கட்டியெழுப்புவதுடன், பொது முகாமைத்துவம், செயற்பாடுளுடன் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துவதனையும் நோக்காகக் கொண்டு கெவின் ஓ.லெரி செயற்படுவார்.
2015இல், நாடளாவிய ரீதியில் சமூக பொறுப்புடைமை செயற்றிட்டத்தை நிறுவனம் முன்னெடுத்தது. இதன் ஊடாக நாடெங்கிலும் நிர்க்கத்தியானவர்களின் இல்லங்களுக்கு இலவசமாக கோது மாவினை விநியோகிக்கின்றது. பாண் மற்றும் வேறு அத்தியாவசிய உணவு வகைகளை தயாரிப்பதற்கான இவை உதவுவதுடன், சிறுவர்களின் ஊட்டச்சத்து தேவையையும் நிறைவு செய்கின்றன.
இலங்கையில், தமது ஏழாவது ஆண்டு நிறைவு குறித்து கருத்து தெரிவித்த செரன்டிப் மா ஆலையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கெவின் ஓ. லெரி,
"இலங்கையில் ஏழு வருட வெற்றியை கொண்டாடுவதில் நாம் பெருமிதம் கொள்கின்றோம். நாட்டின் மிகவும் விரும்பப்படும் உற்பத்தியாக '7 ஸ்டார்' மாறியுள்ளது. எமது சில்லறை மற்றும் நுகர்வோர் வலையமைப்பும் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்றது. எமது பயணத்தை ஆரம்பித்தது முதல், இலங்கையில் கோதுமை மா உற்பத்தியில் முதன்மை உற்பத்தியாளராக மாறி, சர்வதேச ரீதியில் முன்னணி மா உற்பத்தியாளராக மாறுவதற்கு உழைத்தோம்.
எமது கடந்த கால வெற்றிகளை வைத்துப் பார்க்கும், நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பினை வெளிப்படுத்தி வரும் எமது அணி, உள்ளூர் மா சந்தையில் தனித்துவமான உற்பத்தியாக '7 ஸ்டார்' திகழ்வதனையும் உறுதி செய்துள்ளனர்" என்றார்.
செரன்டிப் மா ஆலைகள், எதிர்காலத்தை இலக்கு வைத்து உற்பத்திகளை வெளியீடு செய்வதுடன், தேசத்தை கட்டியெழுப்பும் முதன்மை இலக்கிற்காக நிறுவனம் அயராது உழைக்கின்றது. பரந்த வகையிலான ஊட்டச்சத்து நிறைந்த, உயர்தர மா உற்பத்திகளின் ஊடாக இலங்கை முழுவதிலும் வாடிக்கையாளர்களை எட்டுவதற்கும் அது எதிர்பார்த்துள்ளது.
இலங்கையின் முன்னணி மா ஆலையான செரன்டிப் மா ஆலையானது, Al Ghurair Foods (AGF) மற்றும் Emirates Trading Agency (ETA) என்பவற்றின் ஒருங்கிணைந்த செயற்றிட்டமாகும். தூய்மை, புதுமை, தரம், புதிய, நிபுணத்துவம், சேவை மற்றும் நம்பிக்கை என்பவற்றுடன், ஏழு வருடங்களாக தேசத்திற்கு '7 ஸ்டார்' உற்பத்தி ஊட்டமளித்து வருகின்றது.
இலங்கையில் முதன்மை கோதுமை மா உற்பத்தியாளராக செரன்டிப் மா ஆலைகள் விளங்குகின்றன. சர்வதேச சந்தையில் முன்னணி மா விநியோகஸ்தர்களாகவும் உள்ளது. 2008ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் செரன்டிப் மா ஆலைகள் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தது.
ISO 9001:2008, ISO 14001:2004, BSOHSAS 18001:2007 மற்றும் ISO 22000:2005 ஆகிய தேவைகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட முகாமைத்துவ முறையை வடிவமைத்து, நடைமுறைப்படுத்தின. தரம், சூழல், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பிரிவுகளில் பிரயோகிக்கப்படும் சட்டங்கள் மற்றும் விதிகள், சர்வதேச தரங்களும், கோவைகளும், சிறந்த உற்பத்தி பயிற்சிகள் என்பவற்றை உள்ளடக்கியதாக இந்த முறைமை உள்ளது.


SHARE THIS

Author:

0 comments: