Friday, August 28, 2015
(ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில் வைத்து ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஒட்டமாவடி பிரதேசத்தில் வைத்து கடந்த 15 ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஜமால்தீன் அமீன் (37 வயது) என்பவரின் கொலையுடன் தொடர்புடைய சூத்திரதாரியை புத்தளம் பகுதியில் வைத்து வியாழக்கிழமை இரவு கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரை கைது செய்த பொலிஸார் இவர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வேளையில் இக் கொலைக்காக பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியுடன் தொடர்புடைய நபரையும் கல்முனையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பின்னர் இவர்கள் இருவரையும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்த பொலிஸார் இவர்கள் இருவரது வாக்குமூலங்களையும் பெற்றதன் பின்னர் வெள்ளிக்கிழமை பிற்பகல் வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இவர்கள் விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த வாரமும் ஓட்டமாவடியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் மேலும் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments: