முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் றியாழ் அவர்களின் வெற்றிப் பயணத்தில் அந்த இறுதி 5 நிமிடத்தில் நடந்தவை என்ன?
தலைவா உன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு உன் பேச்சைக் கேட்க வந்த தம்பிமார்களுள் நானும் ஒருவன்.எல்லோரும் பேசிவிட்டு உனக்கு 10:30 இற்கே வழிவிட்டனர்;அது தவறும் அல்ல;காரணம் 12 மணிக்குத் தான் கூட்டம் நிறைவுறுமென்று அவர்கள் எண்ணியிருந்தனர்.நீங்களும் 10:30 மணியளவில் உங்கள் சாந்தமான பேச்சை தொடங்கினீர்கள்.தொடங்கிய மாத்திரத்தில் மேடையை நோக்கி பொலிஸார் விரைந்தனர்;அப்போது நீங்கள் 5 நிமிடம் மேலதிகமாகக் கேட்டீர்கள்;நீங்கள் அரசியல் பேசுவீர்கள் என்று தான் நான் உட்பட அனைவரும் எண்ணியிருந்தோம்.ஆனால் நடந்தது வேறு;நீங்கள் அவ்விடத்தில் கடமை புரிந்த பொலிஸார் மற்றும் இதர பாதுகாப்புப் படையினருக்கு தமிழ்,சிங்களம்,ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நன்றி தெரிவித்தீர்;ஒரு போதும் நீர் உமது இலக்கத்தை ஞாபகப்படுத்தவேயில்லை;நாம் மெய்சிலிர்த்துப் போனோம்;உம்மைக் கட்டியனைத்து அழவேண்டுமென என் மனம் நாடியது.நீர் நன்றி தெரிவித்து முடித்ததன் பிறகு எனக்கருகில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் சிங்களத்தில் அபி இஸ்ஸர மீட்டிங் வலட்ட கியா;கவுருத் மே வகே ஸ்தூதி கிவ்வனே மகத்தயா;மெயா தமய் மினிஸ்ஸ (நாங்கள் இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களுக்கெல்லாம் சென்றோம் யார்ம் இவ்வாறு எங்களுக்கு நன்றி தெரிவித்தது கிடையாது;இவர் தான் மனிதர்) என்று கூறி பெருமைப்பட்டார்கள்.அந்த ஒரு நிமிடத்தில் ஒட்டுமொத்த கல்குடாவை மட்டுமல்ல முழுநாட்டுக்கும் முன்மாதிரியாய் திகழ்ந்து விட்டாய் தலைவா.உன்னைப் போலொரு தலைவனுக்கு வாக்களிக்க இந்தக் கை பெருமைப்பட வேண்டுமென அக்கணமே நான் எண்ணினேன்.
இந்த உணர்ச்சி பூர்வமான வரிகளின் சொந்தக்காரன் முஹம்மத் அவர்களாவார்
இந்த உணர்ச்சி பூர்வமான வரிகளின் சொந்தக்காரன் முஹம்மத் அவர்களாவார்
0 comments: