Sunday, July 19, 2015

வாக்காளர் அட்டைகள் 29ம் திகதி தபால் திணைக்களத்திடம்


பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகிக்க, இம் மாதம் 29ம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. 

இந்த வாக்காளர் அட்டைகளை உத்தியோக பூர்வமாக பகிர்ந்தளிக்கும் விஷேட தினங்களாக இம் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் 9ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் பெயரிடப்பட்டுள்ளன. 

மேலும் ஆகஸ்ட் 10ம் திகதியுடன் அனைத்து வாக்காளர் அட்டை விநியோகங்களும் நிறைவடையவுள்ளன. 




source -அத தெரண தமிழ்

SHARE THIS

Author:

0 comments: