Friday, May 15, 2020

காய்க்கின்ற மரத்துக்கே கல்லடி

காய்க்கின்ற மரத்துக்கே கல்லடி

எம்.என்.எம். யஸீர் அறபாத், ஓட்டமாவடி.

உலக நாடுகள் கொவிட்–19 எனும் கொரோனா நோயினால் மரண பீதியிலிருக்க, இலங்கையில் கொரோனாவின் பெயரால் முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுவதை அவதானிக்க முடிகின்றது. முஸ்லிம் சமூகம் இன்று சோதனைகளாலும் வேதனைகளாலும் சிக்குண்டு காணப்படுகிறது. கொவிட்–19 தொற்றினால் மரணிப்பது என்ற சோதனையைவிட, மரணித்த ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற வேதனையை ஜீரணிக்க முடியாதது.

இலங்கையில் கொவிட்–19 தொற்று ஆரம்பித்த காலப்பகுதியில், முஸ்லிம் ஒருவர் மரணிக்க நேர்ந்தால் அந்த ஜனாஸாவை அடக்கம் செய்யவேண்டும் என்ற அடிப்படையில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் அரசுக்கு மிக நெருக்கமான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி போன்றோரின் முயற்சியினால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆலோசனையின்படி அடக்கம் செய்வதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது.

கொவிட்–19 தொற்றினால் முதலாவது முஸ்லிம் ஒருவர் மரணிக்கும் வரை, ஜனாஸாவை அடக்கம் செய்வது பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கவில்லை. சுற்றுநிரும் வெளியிடப்பட்டிருப்பதால், அரசாங்கத்துடன் அவை தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்கான தேவையும் அரசியல் தலைவர்களுக்கு ஏற்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில்தான் கொவிட்–19 தொற்றினால் முதலாவது முஸ்லிம் சகோதரர் ஒருவர் மரணிக்கிறார். ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் இந்த ஜனாஸா செய்தி கிடைக்கின்றது. அப்போது ஏற்கனவே எரிப்பதற்கு அல்லது அடக்கம் செய்வதற்கு அனுமதி இருப்பதால் அதை யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், ஜனாஸாவை அடக்கம்செய்ய அனுமதிக்காமல் எரிக்கப்போகிறார்கள் என்ற செய்தி கடைசி நேரத்தில்தான் தெரியவருகிறது.

இந்த நிலமையை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் அரச உயர்மட்டங்களோடு அவசர அவசரமாக பேசிக்கொண்டிருக்கும்போதே, ஜனாஸா எரிக்கப்பட்டதாக துக்ககரமான செய்தி வந்தடைகிறது.

இறந்த உடல்களை எரிப்பது என்பது, முஸ்லிம்களைப் பொறுத்தவரை ஜீரணிக்க முடியாததொரு விடயம். முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளையும் அதன் நியாயங்களையும் பிரதிபலிக்கும் வகையிலான ஜனாஸாவை அடக்குவதற்கான உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டது. 

இதன்பின்னர், கொவிட்–19 தொற்றினால் இறந்த உடல்களை எரித்தல் அல்லது புதைத்தல் என்ற அரசாங்கத்தின் சுற்றுநிருபம், இறக்கும் அனைவரையும் எரிக்கவேண்டும் என ஒரேயடியாக மாற்றப்படுகிறது. அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்களை எடுத்துவைத்து, அரசாங்கத்தின் ஈனச் செயலை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முதல் மனிதனாக பகிரங்கமாக தட்டிக்கேட்கிறார்.

அரச உயர்மட்டங்கள் மாத்திரமின்றி அரசாங்கத்தின் கவனத்துக்கும் ஜனாஸா எரிப்பு விவகாரத்தை எத்திவைக்கிறார். இனியாவது ஜனாஸாக்கள் எரிக்கப்படாமல், அடக்கம் செய்வதற்கான அனுதியைப் பெறுவதற்கு அரசாங்கத்தின் செல்வாக்குமிக்கவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்களுடனும் பேசி, இவ்விடயத்தை சாதிக்கும் முயற்சிகளில் மும்முரமாக செயற்பட்டார்.

அத்துடன் இது தேர்தல் காலமாக இருப்பதால், ஒவ்வொருவரும் தங்களதும் தான்சார்ந்த கட்சியினதும் வெற்றியை இலக்காக கொண்டு மக்கள் மத்தியில் புள்ளிபோட்டுக் கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ரவூப் ஹக்கீம், அரசியலை ஒதுக்கிவைத்து விட்டு, எதிர்முகாம் அரசியல்வாதிகளையும் இணைத்துக்கொண்டு சமூகத்தின் முக்கிய பிரச்சினையை அரசாங்கத்துடன் பேசுவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் சர்வகட்சி குழு கூட்டம் கூட்டப்பட்டபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரதமருடன் பேசுவதற்கு முஸ்லிம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் குழு தீர்மானித்தது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சகிதம் பிரத்தியேகமாக பேசுவதற்கான நேரத்தை ஒதுக்கி தருமாறு பிரதமரிடம் கேட்கப்பட்டது. ஆனால், அனைவரும் இருக்கத்தக்க நிலையில், பகிரங்கமாக பேசுவதற்கே பிரதமர் இணக்கம் தெரிவித்தார்.

ஜனாஸா எரிப்பு விவகாரம் அரசில் நோக்கோடு, இனவாத அரசியல் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், இக்கூட்டத்தில் அவ்வாறானவர்களும் கலந்துகொண்டிருக்கும்போது இதன் நியாயங்கள் புரிந்துகொள்ளப்படாது எதிர்க்கப்படலாம் என்பதாலேயே தனித்துப் பேச அனுமதி கோரப்பட்டிருந்தது.

ஜனாஸாவை அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்கள், உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகள், ஏனைய நாடுகளில் இவ்வாறு மரணிப்பவர்களை அடக்குவதற்கான அனுமதி, இறந்த உடலிலிருந்து வைரஸ் கிருமிகள் பரவாது என்பதற்கு விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் போன்றன முஸ்லிம் தரப்பில் இக்கூட்டத்தில் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டன. 

இந்த விடயத்தை ஆராய்வதற்கு, நிபுணத்துவமிக்க குழுவொன்றை நியமித்து தீர்க்கமானதொரு முடிவை எட்டுவதற்கான கருத்தாடல்கள் இடம்பெற்றாலும், அதையும் இனவாத அரசியலாக்கும் முயற்சிகளில் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்றோர் ஈடுபட்டனர். அடக்கம் செய்வதிலுள்ள நியாயங்களை புரிந்துகொள்ளாமல் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜனாஸாக்களை அடக்கம் செய்தால் சிங்கள மக்கள் வீதிக்கு வருவார்கள் என்பதை காரணம்காட்டி, ஜனாஸாக்கள் எரிக்கப்பட ஆரம்பித்தன.

தனது சிங்கள வாக்குவங்கியைப் பற்றி கவலைப்படாமல், ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் தைரியமாக குரல்கொடுத்த ரவூப் ஹக்கீமுக்கு சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பலைகள் வெளிக்கிளம்ப ஆரம்பித்தன. இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்கும் சில முஸ்லிம் தரப்பினரும், ரவூப் ஹக்கீமின் போராட்டத்தை மலினப்படுத்தி ஜனாஸா எரிப்புக்கு மறைமுக ஆதரவை வெளிப்படுத்தினர். ஒருசிலர் பகிரங்கமாகவே ஜனாஸா எரிப்பை நியாயப்படுத்தியும் இருந்தனர்.

இறந்த உடல்களை வைத்து அரசியல் செய்யவேண்டிய தேவை ரவூப் ஹக்கீமுக்கு இல்லை. பர்ளு கிபாயாவான ஜனாஸாவுக்குரிய கடமையை நிறைவேற்றுவதற்கு முஸ்லிம்களின் பிரதிநிதியாக குரல்கொடுத்தார். பர்ளு கிபாயா கடமையை அவர் செய்யாவிட்டால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இறைவனிடத்தில் குற்றவாளிகளாக நிற்கவேண்டியேற்படும். 

இந்த விடயத்தில் ரவூப் ஹக்கீம் அரசியல் செய்பவராக இருந்திருந்தால், மற்றவர்களை விட அவர்தான் அமைதியாக இருந்திருக்கவேண்டும். காரணம், அவர் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிடுவதால் அதிகளவான சிங்கள வாக்குளை நம்பியிருக்கிறார். தனது வாக்குவங்கியை தக்கவைப்பதற்கு நினைத்திருந்தால், சிங்கள மக்களை உசுப்பேற்றுவதாக நம்பப்படும் இந்த விடயத்தில் அவர் மெளனம் காத்திருக்கலாம்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் ரவூப் ஹக்கீம் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு முஸ்லிம் செய்யவேண்டிய கடமையையே செய்துள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எல்லோரும் மௌனித்திருந்தபோது, வெதும்பிய உள்ளங்களுக்கு ஆறுதலாக ரவூப் ஹக்கீமின் குரல் ஒலித்தது சற்று நிம்மதியைத் தந்தது. ஜனாஸாக்களை எரிப்பதை தடுக்கும் நோக்கில் அவர் இன்றுவரை வெளிப்படையாகும் மறைமுகமாகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சமூகத்துக்கு இப்படியான பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது, ரவூப் ஹக்கீம் முதல் மனிதனாக முன்வந்து குரல்கொடுக்கும்போது அதிகமான விமர்சனங்களுக்கு ஆளாகுகின்றார். அதுவும் குறிப்பாக இது தேர்தல் காலம் என்பதால், ஜனாஸா எரிப்பை நியாயப்படுத்தி அவரின் செயற்பாடுகளுக்கு அரசியல் சாயம் பூசுவது மிகவும் வேதனையான விடயம்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொருத்தளவில், ஸ்தாபத் தலைவர் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வெளிநாடுகளுடனான தனது இராஜதந்திர உறவுகளை தொடங்கினார். அதனை இன்றும் பலப்படுத்திக் கொண்டிருப்பவராக ரவூப் ஹக்கீம் காணப்படுகிறார். முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை, சர்வதேச சமூகத்திடம் தைரியமாக எத்திவைப்பத்தில் அவரின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

ரவூப் ஹக்கீம் ஆளும் கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி, சமூகம் பாதிக்கப்படும்போது தனது இராஜதந்திர நகர்வுகள் ஊடாக ஆளும் அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து, முஸ்லிம்களின் விடயத்தில் கரிசணை கொள்ளச் செய்வதில் இராஜதந்திரமாக கடந்த காலங்களிலும் செயற்பட்டுள்ளார் என்பது வரலாறு.

இவ்விடயங்களில் பூரண தெளிவில்லாத ஒரு சிலரால் ரவூப் ஹக்கீம் விமர்சிக்கப்படுகிறார். ஆனாலும், தேர்தல் காலங்களில் நானும் தலைவர்தான் என்று முஸ்லிம் பிரதேசங்களுக்கு வருபவர்கள் மற்றும் இந்த அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளோ, பிரமுகர்களோ விமர்சிக்கப்படவில்லை என்பது நமக்கு ஒரு விடயத்தை உணர்த்துகிறது. "காய்க்கும் மரத்துக்கே கல்லடி விழும்

Thursday, January 23, 2020

தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தலில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

ஊடக அறிவுறுத்தல்: தற்கொலைகளின்போது செய்தி அறிவித்தல்
......................
(முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்)
.......................
இறப்புக்கு உணர்ச்சியூட்டுவதைத் தவிர்க்கவும்: 
உண்மைகளை உணர்ச்சியூட்டாமலும், தலைப்புச் செய்தியில் காரணத்தைக் குறிப்பிட்டுக் காட்டாமலும் கூறவும். 
செயல்பாட்டின் விவரங்களைக் கூறும் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். 
தேவைப்பட்டால், அந்த நபரின் முந்தைய படங்களைப் பயன்படுத்தவும்
. உறவினர்களின் தனியுரிமையை மதிக்கவும்
.இறப்பிற்காக ஒற்றைக் காரணி மீது காரணம் கற்பிப்பதைத் தவிர்க்கவும்
: தற்கொலை ஒரு சிக்கலான நிகழ்வு, மேலும் அது பொதுவாகப் பல்வேறு காரணிகளின் கலவையால் நிகழ்கிறது. 
பொருள் சான்று இல்லாமல் தற்கொலையின் காரணத்தைக் குறைத்துப்பேசவேண்டாம். 
விரிவான விசாரணைக்குப் பிறகே காரணத்தைத் தீர்மானிக்கலாம், மேலும் தற்கொலை சிக்கலானது, பல காரணிகள் உடையது என்று குறிப்பிடவும்
. தற்கொலையை, உறவுப் பிரச்னைகள், நிதிச் சிக்கல்கள் அல்லது தோல்வியை எதிர்கொள்ளும் வழியாகக் குறிப்பிடவேண்டாம்.
செய்தியை முதற்பக்கத்தில் அல்லது குற்றப்பக்கத்தில் பதிப்பிப்பதைத் தவிர்க்கவும்: செய்தியை முதற்பக்கத்தில் பதிப்பிப்பது அதனை உணர்ச்சிப்பூர்வமாக்குகிறது, அஅதேவேளையில் குற்றப்பக்கத்தில் பதிப்பிடுவது தற்கொலை ஒரு 'தவறு' என குறிப்பிடுகிறது. செய்தியைப் பிற இறப்புகள் அல்லது இறப்பு அறிவிப்புகளுடன் பயன்படுத்தவும். தற்கொலையின் காரணத்தைத் தலைப்பில் குறிப்பிட வேண்டாம்.
நிகழ்வு குறித்து விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். தற்கொலைக் குறிப்பைப் பகிர்தல், குறிப்பிட்ட முறை, அல்லது முன்தயாரிப்புகள், சூழ்நிலை, அல்லது அது நிகழ்ந்த இடத்தை குறிப்பிடுவதைத் தவிருங்கள். இந்த விவரங்களைப் பகிர்வது அதுபோன்ற தற்கொலைகளை அதிகரிக்கலாம்.
தற்கொலையை ஓர் அடையாளமாக,சின்னமாக,எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகக் காட்டுவதைத் தவிர்க்கவும். இதன்மூலம், அதுபோன்ற பிரச்னைகள் பொதுவில் பேசப்படும்போதெல்லாம் அந்தக் குறிப்பிட்ட நபரின் படங்கள் அல்லது செயல் பயன்படுத்தப்படக்கூடும். இது, சமூகத்தில் தற்கொலையின் விளிம்பில் இருக்கும் நபர்கள், அதனை ஒரு மரியாதையான பொருளாக, அங்கீகாரம், பொருள் தரக்கூடியதாகக் கருதக் காரணமாகலாம். 
கவனமானது இறந்த நபருக்கு வருந்துவதில் இருக்க வேண்டும், அவர்கள் இறந்த முறை குறித்து இருக்கக் கூடாது.நுண்ணுணர்வுடன் இருக்கவும்,குறிப்பாக பெரிய நபர்களுடைய தற்கொலை குறித்துப் பேசுகையில் இது அவசியம். மக்கள் பிரபலங்களில் தங்களை அடையாளம் காண்கிறார்கள், அவர்களை பின்பற்றுபவர்களில் தற்கொலையின் விளிம்பில் உள்ளவர்கள் அவர்களைப்போலவே தற்கொலையை முயற்சிசெய்ய வாய்ப்புள்ளது. மற்றவர்கள், 'எல்லாவற்றையும் கொண்டுள்ள நபர்களுக்கே தற்கொலை வெளியேறும் வழியாக இருக்கும்போது, அது தங்களுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும்' எனக் கருதலாம். தவறான நேரத்தில் நிகழ்ந்த இறப்பு குறித்து விரிவான விளக்கம் கொடுத்து, அது தற்கொலையாக இருக்கலாம் என்று குறிப்பிடவும்.
பொதுமக்களுக்குத் தற்கொலை குறித்து விழிப்புணர்வூட்ட இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தவும்: 
தற்கொலையிலிருந்து தப்பியவர்களுக்கான உதவி மையம் மற்றும் வளங்கள் குறித்த தகவல்களை வழங்கவும்.
 முன்பு உயிர் பிழைத்தவர்களுடைய கதைகளை வெளியிடலாம், அவர்கள் உதவியை நாடியது, சவாலை எதிர்கொள்ள அது அவர்களுக்கு எப்படி உதவியது என்ற விவரங்களுடன் பதிப்பிக்கலாம்.
 தற்கொலை அபாயம்பற்றிய அடையாளங்கள், மக்கள் தங்களுக்காக அல்லது பிறருக்காக எப்படி உதவியை நாடலாம் என்பதைப் பகிரலாம்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால்,செய்தியை வெளியிடுமுன் மனநல நிபுணர்கள், மற்றும்/அல்லது அதிகாரிகளுடன் அதனைச் சரிபார்க்கவும்.
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்.
உசாத்துணைகள்:
https://tamil.whiteswanfoundation.org/article/media-advisory-reportingonsuicideதற்கொலை பற்றிய பத்திரிக்கைச் செய்திகள் தற்கொலைச் செய்தி வழிமுறைகளைப் பின்பற்றுகின்றனவா: http://www.nimhans.ac.in/
nimhans-centre-well-being/researchதற்கொலைய
ைத் தவிர்த்தல்,ஊடக நிபுணர்களுக்கான விவரங்கள்: http://www.who.int/mental_health/
prevention/suicide/resource_media.pdf

Friday, November 1, 2019

உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள். (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2) முஹம்மது ஸில்மி வைத்திய மாணவன் கிழக்கு பல்கலைக்கழகம்

உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள். (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2) முஹம்மது ஸில்மி வைத்திய மாணவன் கிழக்கு பல்கலைக்கழகம்


உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள்.
‼‼‼‼‼‼
(புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2)
➡➡➡➡➡
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்

👇👇👇👇👇👇
01) . வாய்ப் புற்றுநோய் ORAL CANCER
 ஒவ்வொரு நபரும் சுய வாய்ப் பரிசோதனையைச் செய்ய ஊக்குவிக்க வேண்டும் . வாயில் பாரதூரமான இழையவியல் நிலமைகளைக் கொண்ட நிலைகள் , ( OPMD ) , ஒருவரில் வாய்ப் புற்று நோய் தோன்றுவதற்கு முந்தைய நிலைகளாகக் கொள்ளப்படும் .

 ( OPMD ) இன் அறிகுறிகள்
 * தொடர்ந்து காணப்படும் வெள்ளைத் திட்டுகள் அல்லது புள்ளிகள் .
 -வாயின் உள்மேலணி இழையமானது . வெளிறியும் , திரட்சியடைந்தும் , எரிச்சலூட்டுவனவாகவும் , வாயைத் திறப்பதில் சிரமமும் காணப்படல் ,
- தொடர்ந்து காணப்படும் சிவப்பு நிறத் கலந்து காணப்படும் சிவப்பும் திட்டுகள் அல்லது புள்ளிகள் ,
- வெள்ளையும் கலந்த புள்ளிகள் அல்லது திட்டுகள் .
 - நீண்ட காலத்துக்குக் குணமடையாத வாய்ப் புண்கள் . மேலே குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் யாராவது பாதிக்கப்பட்டுக் காணப்பட்டால் அவரை உடனடியாகப் பல் மருத்துவர்களிடமும் ஆலோசனை பெற அனுப்பிவைக்க வேண்டும் . 

வாய்ப் புற்றுநோய்க்குரிய அதியுயர் ஆபத்துக் காரணிகள் கொண்டவர்கள் 

* தினமும் வெற்றிலை மெல்லும் மக்கள் .
 * வெற்றிலை மெல்லுவதோடு கூடுதலாகப் புகை பிடிக்கின்ற மக்கள் .
 * வணிகத் துறைப் புகையிலை மற்றும் பாக்குப் பாவனைகளுக்கு அடிமையான மக்கள் . 

அதிக ஆபத்துக் காரணிகளைக் கொண்ட மேற்குறிப்பிடப்பட்ட மக்கள் , உடனடியாக பல் மருத்துவர்களிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் .

02 . உணவுக்குழாய் - களப் புற்றுநோய்  ESOPHAGEAL CARCINOMA
 மருத்துவ அறிகுறிகள் 
மூன்று வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து உணவு விழுங்குவதில் கஷ்டம்
 மூன்று வாரங்களுக்கு மேலாக உணவு விழுங்கும் போது வலி ஏற்படல்
 . தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல் . 
03 . இரைப்பைப் புற்றுநோய் GASTRIC CARCINOMA
 மருத்துவ அறிகுறிகள் 
வயிற்றின் மேற்பகுதியில் வலியும் அசௌகரியமும் ஏற்படல் . பசியின்மை . 
சில வேளைகளில் கறுப்பு நிறமாக மலம் கழித்த ல் 
, ஓங்காளம் மற்றும் வாந்தி ஏற்படல் . 
தன்னிச்சையாக உடல் எடை இழப்பு ஏற்படல் . 
இரத்தச் சோகை ஏற்படல் , 
04 . பெருங்குடல் மற்றும் மலக்குடற் புற்றுநோய்  COLO RECTAL CARCINOMA
மருத்துவ அறிகுறிகள் 
மலத்துடன் இரத்தம் கலந்து வெளியேறல் .
 மலம் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம் ஏற்படல் .
 வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலுடன் கலந்த மலங்கழிக்கும் வழக்கம் . 
 மலவாசலுக்கூடான இரத்தப்போக்கு காணப்படல் . 
-மெல்லிய நூல் இழைபோல் மலம் வெளியேறல் .
 முழுமையாக மலம் வெளியேறாத உணர்வு காணப்படல் . 
வயிற்று வலி காணப்படல் .
.காரணமற்ற உடல் எடை இழத்தல் .

©©©©©
(புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2)
*முஹம்மது ஸில்மி*
*வைத்திய மாணவன்*
*கிழக்கு பல்கலைக்கழகம்*


உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள்.
(புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2)
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்

Tuesday, October 29, 2019

உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள். (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2) முஹம்மது ஸில்மி வைத்திய மாணவன் கிழக்கு பல்கலைக்கழகம்

உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள். (புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2) முஹம்மது ஸில்மி வைத்திய மாணவன் கிழக்கு பல்கலைக்கழகம்

உணவுக் கால்வாய் தொகுதியில் ஏற்படும் புற்றுநோய் சம்பந்தமாக அறிந்து கொள்ளுங்கள்.
(புற்றுநோய் விழிப்புணர்வு தொடர் - 2)
முஹம்மது ஸில்மி
வைத்திய மாணவன்
கிழக்கு பல்கலைக்கழகம்

Tuesday, October 8, 2019

இறைவனின் உதவியால் மிகச்சிறப்பாக நடந்து முடிந்த EMERGING HIDAYANS இன் சிறுவர் தின பரிசளிப்பு விழா

இறைவனின் உதவியால் மிகச்சிறப்பாக நடந்து முடிந்த EMERGING HIDAYANS இன் சிறுவர் தின பரிசளிப்பு விழா

தகவல் - இப்னு கே.எம்.ஜே.


EMERGING HIDAYANS விளையாட்டுக் கழகம் மற்றும் KMJ foundation இனால் நடாத்தப்பட்ட Kids gathering and leadership program இற்கான பரிசளிப்பு விழா மீராவோடை பக்ரு கிராமம் உம்மி நூர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதில் எந்த வித அரசியல்வாதிகளின் பங்குபற்றுதலின்றி முற்று முழுதாக இறைவனின் பொருத்தத்தை நாடி ஒன்றிணைந்த உள்ளங்களினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
 குறித்த
நிகழ்வுக்கு மாஞ்சோலை சமுர்த்தி சிறுவர் கழகம் மற்றும் மீராவோடை பொது நூலக வாசகர் வட்ட தலைவருமான முஹம்மது அனஸ் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக EMERGING HIDAYANS  விளையாட்டு கழகத்தின்   பொதுச்செயலாளரும் சமூக சேவை அமைப்பான Beyond the borders  இன் நிர்வாக இயக்குனருமான வைத்திய மாணவர் முஹம்மது ஸில்மி கலந்து கொண்டார்.
மேலும் இந் நிகழ்வினை சிறுவர்களினால் உடனடி கள சமிக்ஞை நாடகம் (instant silent drama) அரங்கேற்றப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
ஒழுக்க சீர்கேடுகளும் ,போதைப்பொருள் பாவனையும் நிறைந்து காணப்படும் இக்கால கட்டத்தில் சிறுவர்களை நற்பாதையில் வழிநடாத்து ஆர்வமாக இருக்கும் இவ்வாறான உள்ளங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

Wednesday, September 11, 2019

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பவள விழா

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பவள விழா

மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பவள விழா
...............................................................................................................................மன்னார் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தின் பவள விழா வியாழக்கிழமை [12.09.2019] காலை 10 மணிக்கு அதிபர் என்.முஹம்மட் ஷாபி தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ அதிதிகளாக நகராத திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம்,கைத்தொழில்,வாணிப அலுவல்கள்,நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரின் மீள்குடியேற்ற,கூட்டுறவு அபிவிருத்தி,தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் றிசாத் பதியுதீன்,கல்வி அமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம்,வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்,நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அத்தோடு சிறப்பு விருந்தினர்களாக வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ,கல்வி அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை அதிபர்,பிரதி அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் அழைப்பு விடுக்கின்றனர்.

[தகவல்-சிபாஸ்-1978 Batch]

Sunday, May 12, 2019

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள்! பைசல் காசிம் தாதியர்களிடம் வேண்டுகோள்

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள்! பைசல் காசிம் தாதியர்களிடம் வேண்டுகோள்

முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள்! பைசல் காசிம் தாதியர்களிடம் வேண்டுகோள்
முஸ்லிம் பெண்களுக்கு எதிராக 
இனவாதத்தைக் கையில் எடுக்காதீர்கள்!
பைசல் காசிம் தாதியர்களிடம் வேண்டுகோள் 
............................................................................................
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லாதபோதிலும்,சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக முஸ்லிம் பெண்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என தாதியர்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கூறியுள்ளார்.

அனுராதபுர தாதியர் பாடசாலையில் இன்று இடம்பெற்ற சர்வதேச தாதியர் தின விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு அவர் கூறினார்.அங்கு மேலும் கூறுகையில்; 

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சில வைத்தியசாலைகளில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.அபாயா அணிந்து வருகின்ற முஸ்லிம் பெண்களுக்கு வைத்தியம் செய்ய மறுத்த சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்தத் தற்கொலைச் சம்பவத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.ஒரு சிலர் மாத்திரமே இந்த அநியாயத்தைச் செய்துள்ளனர்.இப்படியொரு வேலையை இவர்கள் செய்வார்கள் என்று நாம்  ஒருபோதும் நினைத்ததில்லை.

தனது குழந்தையைக் கூட கையில் வைத்துக்கொண்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த சம்பவத்தை நாம் உலகில் எங்குமே கண்டதில்லை.இஸ்லாம் தற்கொலையை எதிர்க்கின்றது.தற்கொலை செய்பவருக்கு நிரந்தர நரகம் என்று சொல்கிறது.நல்ல நோக்கத்துக்காகக்கூட தற்கொலை செய்ய முடியாது.

அதேபோல்,ஓர் அப்பாவியைக் கொலை செய்தால் முழு சமூகத்தையுமே கொலை செய்ததற்குச் சமம் என்று இஸ்லாம் சொல்கிறது.சஹ்ரானின் மகளை இராணுவம் காப்பாற்றிய வேளையில் அவரது மகள் வாப்பா,வாப்பா என்று அழுதமையை நினைக்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது.

இப்படியான மிலேச்சத்தனமான தாக்குதல்களை முஸ்லிம்கள் ஒருபோதும் விரும்புவதில்லை.முஸ்லிம்களில் ஒரு வீதத்தினர்கூட இதற்கு ஆதரவில்லை.இந்தப் பயங்கரவாதிகளை பிடித்துக் கொடுப்பவர்கள் முஸ்லிம்கதான்.அதனால்தான் மேலும் அசம்பாவிதங்கள் இடம்பெறாமல் தடுக்க முடிந்துள்ளது.

இந்தப் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்ட அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இனி இலங்கையில் எங்கும் குண்டு வெடிக்காது.பயப்புட வேண்டாம்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் இலங்கையர் என்ற வகையில் ஒன்றுபட வேண்டும்.நாட்டை முன்கொண்டு செல்ல வேண்டும்.இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கக்கூடாது.

சில வைத்தியசாலைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பல இனவாத சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அவ்வாறான சம்பவங்களை நீங்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.நோயாளிகள் யார் வந்தாலும் அவர்களுக்கு நீங்கள் வைத்தியம் செய்ய வேண்டும்.சட்டத்தை மதித்துச் செயற்படுங்கள்.-என்றார்.

[ஊடகப் பிரிவு]

Thursday, March 14, 2019

பிரதேச சபை உறுப்பினர் கபூர் அவர்கள் செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டாரத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

பிரதேச சபை உறுப்பினர் கபூர் அவர்கள் செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டாரத்தில் மேற்கொண்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்

மக்கள் தேவையே தனது சேவை.....
கௌரவ பிரதேச சபை உறுப்பினர் ALA கபூர் அவர்கள் மக்கள் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு ஒருவருட பூர்த்தியில் செம்மண்ணோடை மாவடிச்சேனை வட்டாரத்தில் அவரால் மேற்கொண்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
#தொடரும்....

Saturday, February 9, 2019

இலங்கைத் திரு நாட்டின் 71வது சுதந்திர தின ஆசிச் செய்தி"

இலங்கைத் திரு நாட்டின் 71வது சுதந்திர தின ஆசிச் செய்தி"

இலங்கைத் திரு நாட்டின் 71வது சுதந்திர தின ஆசிச் செய்தி

ஒவ்வொரு தேசத்தினதும் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சிறப்பாக கருதப்படும் சில நாட்கள் உள்ளன. அந்த வகையில், 1948ம்  ஆண்டு, பெப்ரவரி 04ந் திகதி  எமது இலங்கைத் திரு நாடு,  பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்தது. இத்தினத்தில் சுதந்திர இலங்கையின் அரசியலமைப்பு  சட்டம் முதன் முதலில் நடைமுறைக்கு வந்து,  ஜனநாயக குடியரசு நாடாக உருவெடுத்த இலங்கை, ஒரு இறையாண்மை கொண்ட நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தனது 71வது சுதந்திர தினத்தை அமைதியாகவும் வெகு விமர்சையாகவும் கொண்டாடும் இத்தருணத்தில், சற்று பின்னோக்கினால் எமது சுதந்திரம் இரத்தக் களரி இன்றி கிடைத்த ஒன்றாக இருந்தாலும், பெறுமதியற்று வெறுமனே கிடைக்கபெற்றதொன்றல்ல. இதன் பெருமை இனம், மதம், மொழி, ஜாதி வேறுபாடின்றி களத்தில் போராடிய எமது மூத்த தலைவர்களையே சாரும்.

சுதந்திரப் போராட்டத்திற்கு  நமது சிங்கள  தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் பங்களிப்பு வழங்கினர்.  இம்மூவின மக்களின் தலைவர்கள்,  தமது பொது எதிரியாக  ஆங்கிலேயர்களை  இனங் கண்டு,  சாதி மத பேதமின்றி ஒன்றுபட்டு  அவர்களுக்கெதிராக  போராட்டம் நடாத்தி வெற்றிபெற்றனர்.

சகல இனத்தவர்களும் அன்று ஒன்றுபட்டு போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை அவ்வாறே இன்றுவரை எம்மால் பாதுகாத்துக் கொள்ள முடிகின்றதா  என்று நம்மை நாமே கேட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.

சுதந்திரத்தின்  பின்னர்  ஆட்சிக்கு வந்த அதிகமான அரசியல் வாதிகள் சகல இனங்களையும் ஒன்றுபடுத்தி ஆட்சியமைப்பதற்கு பதிலாக இனங்களிடையே பிளவுகளை உருவாக்கி ஆட்சியை அமைத்தனர்.  இதனால் ஒவ்வொரு இன மதங்களை பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகள் உருவாகின.

அவர்கள் செய்ததெல்லாம், தேர்தல் வாக்குகளைப்  பெற்றுகொள்வதற்காக தாம் பிரதிநிதித்துவப்படுத்தும்  இனத்தை மேலோங்கச்  செய்து ஏனைய இனங்களை கீழ்ப் படுத்தியமையே ஆகும்.

இதனால் இனங்களிடையே பிரிவினை  மனோ நிலை ஏற்படத் துவங்கியது. இந்திய நாட்டு மக்கள் தம்மை இந்தியர் என்றும் அமெரிக்க பிரஜைகள் தம்மை அமெரிக்கர்கள் என்றும் நினைக்கும் போது.... ஏன் நாம் எம்மை இலங்கையர்கள்  என்று நினைக்க முடியாமல் போனது.

நாம் எம்மை சிங்களவர்,  தமிழர், முஸ்லிம் என்று நினைப்பதற்கு முன்னர்  நாம் எல்லோரும் எம்மை இலங்கையர்கள் என்று நினைப்பது எமது கடமையாகும்.

இது எமது புதிய தேசத்தின் உதய நாள், உதய தேசத்தின் ஆரம்ப நாள். 71வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இவ்வேளையில், இன மத பேதங்களை மறந்து நாம் இலங்கையர்கள் என்று கூற முற்படுவோமாக! நாட்டுப்பற்றுடன் மற்றும் சமூகநல்லிணக்கத்துடன் இந்த சுதந்திர தினத்தை கொண்டாடி தேசப்பற்றை வளர்ப்போம்!

மௌலவி M F பஸ்ருல் ரஹ்மான் ( மஹ்ழறி)
செயலாளர் - C மீடியா  ஊடகப் பிரிவு